மறைந்த புரட்சி நடிகர் M.G.R. காட்டிய தனி அக்கறை,அன்பு !! பெண் குலத்தின் மேல் !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச்சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!நம்
வெற்றிப்பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை
வென்றவர் கிடையாது !!
வேலும், வாளும், தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது !!
குள்ள நரிக்கூட்டம் வந்து
குறுக்கிடும் !!
நல்லவர்க்குத் தொல்லை தந்து
மடக்கிடும்!!
நீ எள்ளளவும் பயம் கொண்டு
மயங்காதிரு !!
அவற்றை எமன்உலகுக்கு அனுப்பி
வைக்கத் தயங்காதிரு !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன் பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த வாழ்த்துக்களோடு
இணைந்த உளம் கனிந்த, சிரம்
தாழ்ந்த,கரம் குவிந்த வணக்கம் !!
ஏறத்தாழ 13 ஆண்டுகளாக
தமிழகத்தின் முதல் அமைச்சராக
கடமையாற்றியவரும்
அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர்
என்றபெருமைஉடையவர்,முத்தமிழ்
அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி
அவர்கள் திருவாய்மொழியால்
அன்றைய தினம் " புரட்சி நடிகர் "
என்று பட்டம் பெற்று பாராட்டினை
அடைந்தவரும் பொன் மனச்
செம்மல் அன்று கலை உலகினர்
அன்புடனும்,பாசத்துடனும் அழைத்த
காலஞ்சென்ற M.G.இராமச் சந்திரன்
முன்பு ஒருமுறை மதுரை வந்து ஒரு
பொதுக்கூட்டத்தில் உரைநிகழ்த்திக்
கொண்டு இருக்கும் வேளையில்
கூட்டம் என்றால் கூட்டம் அப்படி
ஒரு கூட்டம். எனக்கு வயது
அப்போது சுமார் 26 அல்லது 27
இருக்கும் என நினைக்கிறேன்.என்
ஆயுளில் அப்படி ஒரு கூட்டத்தினை
நான் அதுவரையில் பார்த்ததே
இல்லை எனலாம். அந்த அளவுக்கு
கூட்டம் அலைமோதியது.
அதன்காரணமாகத்தான் பேரறிஞர்
அண்ணா அவர்கள் சொல்வது
உண்டு.அது என்ன்னவென்றால் :-
" என்தம்பி இராமச்சந்திரா. நான்
உன்னிடம் தேர்தல் நிதியாக ஒரு
இலட்சம் ரூபாய் (இன்று அதன்
மதிப்பு சுமார் 5 கோடிகள்)கேட்டால்
அதை உன்னால் மிக எளிதாக
எனக்கு தந்துவிட இயலும். ஆனால்
எனக்கு அது பெரிதல்ல. நான்
உன்னிடம் வேண்டி விரும்பி
கேட்பதெல்லாம் உனது
திருமுகத்தை தேர்தல்
பிரச்சாரத்திற்கு வந்து கூட்டத்தில்
காண்பித்திடு. அதன் வாயிலாக
எனக்கு, திராவிட முன்னேற்றக்
கழகத்திற்கு ஒரு கோடி வாக்குகள்
கிடைத்திடும் அது ஒன்றே எனக்கு
போதுமானது என் அருமைத் தம்பி
இராமச்சந்திரா " என்று
சொல்வார்கள்.எள் போட்டால்
எண்ணையாகிவிடும். ஆண், பெண்,
குழந்தைகள், வயதில் முதிர்ந்தோர்,
தாய்மார்கள் என்று அப்படி ஒரு
கூட்டம். MGR. அந்த கூட்டத்தினை
மிக உற்று நோக்கி கவனித்துக்
கொண்டு தான் இருந்தார்.
கூட்டத்தில் தான் பேச வேண்டிய
கருத்துக்கள் அத்தனையையும்
மிகவும் விவரித்து பேசினார் சுமார்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக.
அதன் பின் தனது உரைதனை
முடிக்கும் வேளை வந்துவிட்டது.
உடனே கூட்டத்தில் அமர்ந்து
இருந்தோர்கள் அனைவரும் எழுந்து
நின்றுகலைந்துசென்றிடஎத்தனித்த
நேரத்தில் அவர் ஒரு அறிவிப்பு
ஒன்றினை வெளியிடுகிறார். அது
என்ன என்றால், தயவு செய்து
இங்கே கூடி இருக்கும் தாய்மார்கள்,
பெண்கள்,பெரியோர்,குழந்தைகள்
இவர்கள் அனைவரும் இப்போது
கூட்டத்தினை விட்டு வெளியே
சென்றிடலாம். ஏன் என்றால் இங்கே
அமர்ந்து இருக்கின்ற ஆண்கள்,
வாலிப கூட்டத்தோர்கள் இவர்கள்
மட்டும் இங்கே அமர்ந்து இருந்து
தாய்மார்கள் பெண்கள் இவர்களை
மட்டும் வெளியே செல்ல அனுமதி
அளிக்க வேண்டும்.நான் அந்த
ஆண்களிடம், வாலிபர்களிடம்
தனியே சிலபல செய்திகளைச்
சொல்லிட வேண்டும். எனவே
அவர்களை விடுத்து மற்று உள்ள
ஏனையோர் அனைவரும் வீட்டுக்கு
செல்லலாம் என்றார். அந்த
அறிவிப்பு அவர் (MGR) வெளியிட்டு
சுமார் பத்து நிமிடங்கள் ஆனது.
அத்தனை தாய்மார்கள், பெண்கள்,
பெரியோர் மற்றும் குழந்தைகள்
அனைவரும் கூட்டத்தினை விட்டு
வெளியேறி சென்று விடுகின்றனர்.
அதை நன்கு கவனத்து அதன் பின்
அங்கே உள்ளஆண்கள், வாலிபர்கள்
(அன்று என்னைப்போல் ) மனதில்
என்னஎண்ணிக்கொண்டிருந்தோம்
என்றால் M.G.R.ஏதோ மிக முக்கியம்
நிறைந்த கருத்துக்களை வழங்கப்
போகிறார் என்று காத்துக்கொண்டு
இருந்த வேளையில் கூட்டத்திற்கு
வந்திருந்த அனைத்துப் பெண்களும்
வெளியில் சென்று விட்டார்கள்
என்பதை அறிந்து உணர்ந்த அவர்
இப்போது ஒலி வாங்கு கருவியின்
முன்பாக (MIKE) தனது பேச்சைத்
தொடர்ந்தார். இப்போது இங்கே
அமர்ந்து உள்ள அனைவரும்
வீட்டிற்குத் திரும்பலாம் என்றாரே
பார்க்கலாம்.அனைவருக்கும் ஒரே
அதிர்ச்சி.மீண்டும் MGR பேசுகிறார்.
என் அன்புள்ள இளம் வாலிபர்களே !!
ஆண் குலத்தின் நண்பர்களே !! நான்
ஏன் இங்கே உங்களை இருக்கச்
சொன்னேன் என்றால் இன்று
கூட்டம் மிக அதிகம்.ஒரே நேரத்தில்
நீங்களும் பெண்கள்,தாய்மார்கள்
வயதி மூத்தவர்கள் சிறுவர்கள் என்
அனைவரும் வெளியில் ஒரேநேரம்
கிளம்பினால் கூடத்தில் சிக்கி
பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள்
என்பதனால் அவர்களை மட்டும்
முதலில் வெளியே சென்றிட
அனுமதி அளித்தேன். உங்களை
இங்கு இருக்கச் செய்வதற்கு எனக்கு
வேறு வழி தெரியவில்லை. ஆகவே
தான் உங்களிடம் தனியே பேச
வேண்டும் என்று பொய்உரைத்தேன்
என்றாரே பார்க்கலாம். பெண்கள்
மீது அவருக்கு உள்ள அக்கறையை
நான் அன்றுதான் பார்த்தேன்.
என்னே அவரின் ராஜ தந்திரம்.
உம்..இன்று அவர் உயிருடன்
இல்லாததால் இங்கே
என்னென்னமோ நடக்குது.
ஆண்டவன்தான் இந்த நாட்டை
காப்பாற்றவேண்டும் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை TR.பாலு.
( நன்றி) :- ஆனந்த விகடன் 25.௦9.13
அந்த இதழில் பார்த்தேன்.படித்தேன்
இரசித்தேன்.அந்த இதழில் தான்
எனக்கு இப்போது எழுதிய கட்டுரை-
க்கு மூலக் கருத்து கிடைத்திட்டது.
நன்றி வணக்கம்
No comments:
Post a Comment