Saturday, 21 September 2013

காசியில் இருப்பவர்கள் யார்? பட்டணத்தில் உள்ளோர் யார்?மதுரையில் வசிப்பவர் எவர்?






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு!!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு!!



உலகெங்கிலும்வாழ்ந்துவரும் என்


உயிரினும் மேலாக நான் போற்றி


வணங்கி வரும் அன்புத் தமிழ்


உடன்பிறப்புகளே !!


உங்கள் அனைவருக்கும் எனது


இனிய காலை வணக்கம். நிற்க!!




இன்று நான் இந்தக் கட்டுரைக்கு



தேர்ந்து எடுத்துள்ள தலைப்பு


தயவுசெய்து இதை யாரும்


முக்கியத்துவமானதாக எடுத்துக்


கொள்ள வேண்டாம் எனவும்


சற்றே சிரித்து மகிழ்வு பெற்றிட


மட்டுமே எடுத்துக்கொள்ள


வேண்டும் என நான் உங்கள்


அனைவரையும் வேண்டி விரும்பி


கேட்டுக்கொள்கிறேன் !!


1) " காசியில் இருப்பவர்கள்

    

        அனைவரும் பாவிகள் " !!


பொதுவாக இந்து மதத்தினைச்


சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் 


அவர்கள் கடமைகளை


நிறைவேற்றி முடித்திட்ட பின்பு


புனித யாத்திரை செய்திட எண்ணிச்


சென்றிடும் முதல் இடம் உத்திரப்


பிரதேச மாநிலத்தில் உள்ள காசி


என்று அழைக்கப்படும் புண்ணிய


ஷேத்திரமேஆகும்(எப்படி இஸ்லாம்


மதத்தினைச் சேர்ந்தோர்கள் புனித


மெக்கா மதீனா பயணம் செய்கின்-


றனரோ அது போல ) ஆக அந்த


காசியில் உள்ளூர் வாசிகள் என்று


நீங்கள் பார்த்தீர்களேயானால் அது


பெரும்பாலும் வேதம் ஓதிடும்


வேதியர்கள் கூட்டமாகத்தான்


(கருமம் செய்து காலட்சேபம்


நடத்திடும் பார்ப்பனர்கள்) அங்கே


நிறையப்பேர்கள் வசிப்பது உண்டு.


இந்தியாவில்உள்ளபிற மாநிலத்தில்


வசிப்பவர்களும் உலகெங்கிலும்


வாழ்ந்து வரும் இந்துமதத்தைச்


சேர்ந்தோர்கள் என ஏராளமான


பக்த கோடிகள் அங்கே குவிவது


என்பது நடைமுறை வழக்கத்தில்


உள்ள ஒன்றே ஆகும்.ஆக அப்படி


வருவோர்கள் அனைவரும் தங்கள்


மூதாதையர்கள் ஆன்மா சாந்தி


அடையவும் தாங்கள் வாழ்நாளில்


அதுவரை செய்திட்ட பாவங்களை


நீக்கிடும் விதமாக அங்கு தர்ப்பணம்


செய்து தங்களது கருமங்களை


அங்கே வேதம் ஓதி கருமாந்திரம்


செய்திடும் பார்ப்பனர்கள் வசம்


புனித நீரினை தானம் செய்து அதன்


வாயிலாக தர்ப்பணம் செய்திடும்


வேளை அந்தப் பாவங்கள்


அனைத்தையும் அந்த ஊர்


பார்ப்பனர்கள் தாங்கள் தங்களது


கையில்இவர்கள்செய்த பாவத்தைப்


பெற்றுக்கொள்வது வழக்கம்.


அதனால்தான் இந்தப் பழமொழி


வழக்க்கத்தில் வந்தது. எது என்றால்


" காசியில் உள்ளவர்கள் 


   அனைவரும் பாவிகள் " என்று.




2)  " பட்டணத்தில் உள்ளோர்கள்

     அனைவரும் கெட்டவர்கள் "



பொதுவாக தமிழில் ஒரு நல்ல


சொற்றொடர் ஒன்று உண்டு.


அதுதான் மேலே சொல்லப்பட்டு


உள்ளது. கெட்டும் பட்டணம் சேர்


என்று நம் தாய்த் தமிழில் ஒரு


வாசகம் உண்டு அன்பர்களே !!


அதாவது கிராமங்களில் சுத்தமாக


நிதிநிலை வறண்டு பிழைத்திட


வேறு வழியின்றி வாடிடுவோர்


எல்லோருமே எடுப்பது உண்டு


கடைசியாக ஒரு முடிவு ஒன்று


எடுப்பது உண்டு. அதுதான் நாம


இப்ப இருக்கிற நிலைமையில்


பட்டணத்திற்குப் போனால்


எப்படியும் பிழைச்சுக்கலாம்


 என்று சொல்லி வருபவர்களே


இங்கு அதிகம். அதில் தலை


எழுத்து, தசா புத்தி நன்கு உள்ளோர்


தாழ்ந்த நிலை நீங்கி வறுமை போய்


வளமையாக வாழ்ந்திடுவர். மிச்சம்


உள்ளோர்கள் ஏதோ பெயருக்கு


வரும்படி கிடைத்து பிழைப்பு


நடந்து கொண்டு வரும் இதுதான்


சென்னை போன்ற பட்டணங்களில்


அன்றும்,இன்றும்,என்றும் நாம்


காண்கின்ற நிலை. இந்த நிலை


வருவதனால்தான் இந்த கீழே


சொல்லப்பட்டுள்ள தலைப்பு


உண்மை என்றே ஆகிவிடுகிறது


என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


" பட்டணத்தில் உள்ளோர்கள்


அனைவரும் கெட்டவர்கள் " என்று.




3)  " மதுரையில் வசிப்பவர்கள்

      

        எல்லோரும் கழுதைகள் "




பொதுவாக நம் சொல்வழக்கினில்


என்ன சொல்லுவார்கள் என்று


கேட்டால் மதுரையைச் சுற்றிய


கழுதைகூட வேறு ஒரு ஊர்


போகாது என்று.  ஏன் என்றால்


கஞ்சியோ, இல்லை கூழோ


மதுரை மீனாட்சி நகரில் வாழ்ந்து


ரசித்தவர்கள்வேறுஎந்த ஊருக்கும்


செல்ல நினைத்திடவே மாட்டார்கள்.


அது ஏன் என்றால் அதுதான் அந்த


ஊரின் சிறப்பு.அமைதியான சூழல்


என்றுமே பிரச்சினை என்று


எதுவும் வராத வாழ்க்கை.ஆகவே


அந்த வாழ்க்கைபோதும் எனஅந்த


மதுரையில்உள்ளோர் 
அனைவருமே 


எண்ணுகின்றபடியால் 


அந்த மதுரையை விட்டு வேறு எந்த


ஊருக்கும் செல்ல மாட்டார்கள்.


அதனாலதான் மேலே சொன்ன


பழமொழி இங்கே உண்மை என


முத்திரை பெறப்பட்டுள்ளது 


அதனால் மட்டுமே கீழே சொன்ன 


சொற்றொடர் அன்றும்,இன்றும், 


இனிமேல்என்றும் சொல்லப்ப--


டுகிறது/சொல்லப்படும் !!



" மதுரையை சுற்றிய கழுதைகூட
 
வேறு ஊருக்குப்ப்போயி பிழைத்திட


எண்ணாது /அப்படியே 


எத்தனித்தாலும்


மதுரையின் கனிவான கவனிப்பு


இவர்களுக்கு வேறு எங்கும் 


கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே 


வேறு ஊர் சொல்ல மாட்டார்கள். 


அதனால்தான் 



" மதுரையில் இருப்பவர்கள் 


   எல்லாரும் கழுதைகள் " என்று.




சரி !! நேயர்களே !!எப்படி இருந்தது


நான் தந்த புது சொற்றொடர்கள்


உருவான விதம் பற்றி உங்கள்


அனைவருக்கும் நான் அருள்சேர


விளக்கிகிட்டேன். எனது அன்புத்-


-தமிழ் நெஞ்சங்களே !!


சரி அன்பர்களே !! மீண்டும்வேறுஒரு


கருத்துப்பதிவினில் நாம் 


அனைவரும்


மீண்டும் சந்திப்போம்.அதன் பிறகு


நாம் அனைவரும் சிந்திப்போம் என


சொல்லி விடை பெறுகிறேன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை TR. பாலு.
 '


No comments:

Post a Comment