Friday, 30 August 2013

பிழைமொழியாகிப்போன பழமொழிகள்--பாகம் 2. (மறு பதிப்பு)




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!




இதை உரக்கச் சொல்வோம் 




உலகுக்கு !!                           



இனம் ஒன்றாக, மொழிவென்றாக, 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!



நம் வெற்றிப்பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து படைப்போம் 



விண்ணுக்கு !!





பழமொழிகளா அல்லது 





பிழைமொழிகளா?


அனைவருக்கும் வணக்கம். 


மேற்சொன்ன தலைப்பில் 


ஏற்கனவே நான் அளித்த 


விளக்கத்தை நேயர்கள் படித்து 


இருப்பீர்கள் என்று 


கருதுகிறேன்.அந்த வரிசையில் 


மேலும் ஒன்று.


 "பந்திக்கு முந்து! படைக்கு பிந்து" !!


இந்த பழமொழிக்கு பொதுவாக 


நம்மில் அநேகர் நினைக்கும் 


அர்த்தம் என்னவென்றால்திருமண 


மற்றும் சுப விசேடங்கள் நடக்கும் 


வீட்டில் உணவு அருந்தும் நேரம் 


வரும்போது முதல் பந்தியில் 


அமரவேண்டும், அதுபோல 


சண்டையிடும் சூழ்நிலை வந்தால் 


கடைசி வரிசைக்கு பிந்தவேண்டும் 


என்றே நாம் இதுகாறும் பொருள் 


கொண்டு வருகிறோம்.ஆனால் 



இந்த வாசகத்திற்கு,பொருள் 


அதுவன்று. உண்மை அர்த்தம் 


என்னவென்றால், பந்திக்கை 



முந்து!! படைக்கை பிந்து! 

அதாவது பந்தியில் அமர்ந்து 


உணவு உண்ணும்போது 


கைமுந்தவேண்டும்.அப்போதுதான் 


உணவு வாய்க்கு செல்லும். 


படைக்கு (போருக்கு) 


செல்லும்  கை பிந்தவேண்டும் 


அப்போதுதான் நம்மால் 


எறியப்படும் ஈட்டியானது வெகு 


வேகமாக சென்று எதிரியை 


தாக்கும் என்று சொன்ன 


பழமொழியை நாம் இதுவரை 


தவறாக பொருள் கண்டுவந்தோம். 


இனிமேலாவது சரியான 


பொருள்கொண்டு 


புரிந்துகொள்வோம். பிழைமொழி


ஆகிப்போன பழமொழிகளின் 


பட்டியல் இன்னும் தொடரும். 


நன்றி !! 


வணக்கம் !!. 


அன்புடன் மதுரை T.R.பாலு.

 



No comments:

Post a Comment