சிரிப்புத்தான் வருகுதய்யா !! விஜயகாந்த் செயலைப் பார்க்கும்போது !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் உயிரினும் மேலான
அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே!!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
" சிரிப்புத்தான் வருகுதய்யா "!!
அன்பர்களே !!
இன்றையதினம் தேசிய முற்போக்கு
திராவிட கழகத்தின் நிறுவனரும்
கருப்பு M.G.R. என்று தன்னைத்தானே
குறிப்பிடுபவரும் திரைப்படநடிகரும்
ஆன திரு A. விஜயகாந்த் அவர்கள்
(த/பெ. மறைந்த அழகர்சாமி நாயுடு,
மதுரை) விழுப்புரம் மாவட்டம்,
உளுந்தூர்பேட்டையில் அவர்களது
கட்சியின் ஊழல் எதிர்ப்பு மகாநாடு
நடைபெற இருப்பதாகவும், (இவர்
சினிமாவில் நடிப்பதற்கு வாங்கும்
பணம் முழுவதுமே
வெள்ளைதானா? மேலும் இவரது
கட்சியை நடத்துவதே கடந்த
தேர்தலில் செல்வி J ஜெயலலிதா
அவங்கட்டே இருந்து வாங்கின
பலநூறுகோடிகள்
இலஞ்சப்பணத்தில்தான் என்று
ஊரில் பேசிக்கொள்கிறார்கள்) இந்த
மாநாட்டிற்கு வருகை தர வேண்டும்
என்று இந்த நாட்டினை ஊழலில்
நனைத்துக் காயப்போட்டகாங்கிரஸ்
கட்சி, மதவாதத்தை முன்வைத்து,
வரலாற்றுச் சின்னமான அழகான
பாபர்மசூதியை இடித்து இந்தியத்
திருநாட்டை கெடுத்த லஞ்ச
லாவண்யத்தில் திளைத்திட
பெரிதும் உதவி செய்த பாரதிய
ஜனதா கட்சிக்கும் அழைப்பு
விடுத்திருப்பதாக செய்தித் தாளில்
படித்துடனே எனக்கு வந்ததுதான்
கட்டுரைக்கு நான் தலைப்பாக தந்து
உள்ளேன்.அந்த தலைப்பு இதோ இது
" சிரிப்புத்தான் வருகுதய்யா "
அறிவும் ஆற்றலும் உள்ள
தமிழர்களே !!
கசாப்பு கடைக்காரன்
ஜீவகாருண்யத்தைப் பற்றி பேசுவது
போலத்தான் இதுவும்.
காமக்கொடூரன் பெண்களின் கற்பு
பற்றிய மாநாட்டிற்கு அழைப்பு
விடுவது போலத்தான் இதுவும்.
விபச்சாரிகள் ஒன்றுகூடி
ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்வது
எப்படி என்று புத்தகம்
வெளியிட்டதுபோலத்தான் இதுவும்.
மாமியார்களை மதித்து அவர்களது
பாதத்திற்கு பூஜைபண்ணியே
அன்றாடம் எங்களது பணிகளைத்
துவக்குவோம் என்று நாட்டில் உள்ள
அனைத்து மருமகள்களும் ஒன்று
கூடி சூளுரைத்தது போலத்தான்
இதுவும்.
நாட்டில் உள்ள அனைத்து
மாமியார்களும் ஒன்றுகூடி எங்கள்
வீட்டிற்கு வந்த மருமகளும்
எங்களுக்கு நான்பெற்ற மகளைப்
போன்றவர்கள்தான் அவர்கள்மீதும்
அவர்கள் செய்திடும் வேலையில்
எந்த ஓட்டை உடைசலும் சொல்லிட
மாட்டோம் என்று மாமியார்கள்
சொல்வதுபோலத்தான் இதுவும் !!
உன்னையைத் தவிர வேறு எந்தப்
பெண்ணையும் நான் எனது
இருகண்களால்கூட பார்த்திட
மாட்டேன் என்று திருமணம் ஆன
அனைத்து ஆண்கள் இனமும்
தங்களது மனைவிமார்களிடம்
சத்தியம் செய்வது போலத்தான்
இதுவும்.
அண்ணே சத்தியமாச் சொல்றேன்
இந்த சாமானை நான் உங்களுக்கு
மட்டும் அசல் விலைக்கே தாரேன்
என்று ஒரு வணிகர்
சொலவதுபோலத்தான் இதுவும் !!
கலப்படமே செய்வதில்லை எங்கள்
சரக்குகள் அனைத்துமே சுத்தமான
பலசரக்குகளே என்று அண்ணாச்சி
கடைக்காரர்கள் அனைவரும்
ஒன்றுகூடி முழங்குவது
போலத்தான் இதுவும் !!
டாஸ்மாக் கடையில் உள்ள "சரக்கு"
விற்பனையாளர் இன்முகத்துடனும்
மரியாதையுடனும் நம்மை
அன்புமுகத்துடன் வரவேற்று சரக்கு
விற்பது போலத்தான் இதுவும் !!
ஏங்க , இந்தாங்க, போன மாசம் நீங்க
செலவுக்குத் தந்த பணத்தில் நான்
மிச்சம் செய்து சேர்த்தபணம் என்று
இல்லத்தரசிகள் கணவனிடம்
சேமித்த பணத்தினைத் திருப்பிக்
கொடுப்பதுபோலத்தான் இதுவும் !!
திராவிட இனத்தின் உண்மையான
தோழர்களே !! என் அருமைத் தமிழ்
இனமே !! நீங்கள் அனைவரும்
அமைதியாக அமர்ந்து தவறாமல்
சிந்திப்பீர் !! செயல்படுவீர் !! தோழர்
விஜயகாந்த் அவர்கள் செய்வது
அழகா ? முறையா ? சரியா ?
தர்மம்தானா?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment