Saturday, 18 January 2014

மனித உடலுக்கு மிகவும் கெடுதல் செய்வது எது ? சிகரெட்டா ? அல்லது மதுவா ?--ஒரு கருத்தாய்வுக் கட்டுரை !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுதும் வாழ்ந்து வரும்என் 



உயிரினும் மேலான அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே !! அனைவருக்கும் 



வணக்கம்.                                                       



இன்றையதினம் நவநாகரீக 



உலகினில்  மது அருந்துவதும், புகை 



பிடிப்பதும், இளைஞர்கள் முதல் 



வயோதிகர்கள் வரையிலும் 



விட்டுவிட முடியாத ஒரு 



பழக்கமாகவே ஆகிவிட்ட 



நிலையினில் நான் இந்த 



கருத்தாய்வுக் கட்டுரையை 



எழுதுகின்றேன். பொதுவாகவே 



காலை முதல் மாலை வரை 



ஓயாமல் ஒழியாமல் உழைத்துக் 



களைத்த மனித உடலுக்கும் 



உள்ளத்திற்கும் ஒரு தற்காலிகமான 



ஓய்வினைத் தருவது  " மது " என்ற 



சைத்தானின் மறுவடிவம் ஒன்று 



மட்டுமே. இதனைப் பருகி அதன் 



சுகம் கண்டவர்கள், எந்த நாளும் 



இதைக் கைவிடப் போவதுஇல்லவே 



இல்லை. சரி !! நல்லது. ஆனால் 



இவர்கள் அருந்திடும் விஸ்கியோ, 



பிராந்தியோ அல்லது ரம்மோ, 



ஜின்னோ, காக்டையிலோ அல்லது 



சாதாரண பியரோ (BEER), எதுவாக 



இருந்தாலும் ஒரு லார்ஜ் 



முடிஞ்சவுடன் கைகள் பரபரப்புடன் 



நாடுவதும், விரல்கள் வேகமாகத் 



தேடுவதும், தேடி ஓடுவதும் அந்த 



வெண்சுருட்டு என்னும் சிகரட்டை 



மட்டுமே. இப்போது இங்கே ஒரு 



குட்டி பட்டிமன்றம் நடைபெற 



இருக்கிறது. தலைப்பு என்ன 



என்றால் :-                                                     



மனித உடலுக்கு மிகுதியும் கெடுதல் 


செய்வது  சிகரெட்டா ? அல்லது 


மதுவா ?                                                     



இந்தப்பட்டி மன்றத்தில் 


பங்கேற்போர்கள்:-                                       



கெடுதல் செய்வது சிகரெட்டே என்ற 


அணியில் சிந்தனைச் செல்வன் 


சிகாமணியும்  சீர்திருத்தச் செம்மல் 


அண்ணி வெற்றி லலிதா, இருவர்.   



கெடுதல் செய்வது மதுவே என்ற 


அணியில் ஆற்றல் அரசர் அன்புச் 


செல்வனும் மாற்றல் விரும்பும் 


மன்கையர்குலத் திலகம் மனுஷா 


மகீந்திராலயா,  இருவர்.  



இந்தப் பட்டிமன்றத்திற்கு கடமை 


ஆற்றிட வருகை புரிந்து இருப்பவர் 


நமது நாவுக்கரசர்,நல்லவர், 


வல்லவர், உத்தமர், ஊர்மெச்சும் 


உழைப்பாளி அன்பிற்கும் 


பாசத்திற்கும் உரியவர் பண்பாளர் 


நமது மதுரை மண் பெற்றெடுத்த 


மன்னவர் T.R.பாலு அவர்கள்.    



பட்டிமன்றம்


துவங்கும்தேதி: 19-௦1-2௦14. ஞாயிறு. 


துவங்கும் நேரம் :- காலை 9 மணி. 


நேரலையாக ஒளிபரப்பு நடைபெற 


உள்ளது. இந்த நிகழ்ச்சியை நீங்கள் 


கலைஞர் தொலைக்காட்சியில் 


கண்டு களிக்கலாம்.


(சும்மாக்காச்சுக்கும்)                             


நாளை சந்திப்போம். 


நன்றி!! வணக்கம் !!                                 


அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment