உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
காஞ்சி மாநகர்தனை மகேந்திர
பல்லவன் ஆண்டு கொண்டிருந்த
காலம் அது. அவனிடம் ராஜாங்க
மந்திரியாக பணியாற்றிக்கொண்டு
இருந்தவர்தான் மதியழகன்.மிகவும்
மதி நுட்பம் நிறைந்த மந்திரி.
இவரிடம் எப்போதும் ஒரு பழக்கம்
உண்டு. அது என்னவென்றால், எது
நடந்தாலும் இதுவும்
நல்லதுக்குத்தான் என்று
சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு
முறை அரசர், மந்திரி மதியழகனை
அழைத்து, இராஜாங்க விஷயம்
பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அரசர் ஆப்பிள் பழம்
ஒன்றினை எடுத்து அதை தோல்
சீவிட எடுத்தார். அப்போது
அந்தப்பழம் மன்னரின்
கையிலிருந்து நழுவி மந்திரியின்
மேல் வந்து வீழ்ந்தது. உடனேமந்திரி
மதியழகன் அதனை லாவகமாகப்
பிடித்துக்கொண்டே " இதுவும்
நல்லதுக்குத்தான் " என்று
சொன்னார். உடனே அரசர், உமக்கு
எப்போது பார்த்தாலும் இதே
வார்த்தைதானா? வேறு
வார்த்தையே வராதா ? என்று
சிரித்துக்கொண்டே வினவினார்.
மந்திரி புன்னகையை மட்டிலுமே
தனது பதிலாக உதிர்த்தார்.அப்போது
மன்னன் பழத்தின் தோலினை
கவனத்துடன் உரித்துக்கொண்டு
இருக்கும் வேளையில் சிறிது
கவனம் தவறிடவே கூர்மையான
அந்தக் கத்தி மன்னவனின்
இடதுகையில் உள்ள
சுண்டுவிரலைப் பதம் பார்த்து அது
துண்டாகக் கீழே வீழ்ந்திட உதிரம்
பெருக்கெடுத்து ஓடியது. இந்த
நிகழ்ச்சியையும் பார்த்துக்கொண்டு
இருந்த மந்திரி மதியழகன் வழக்கம்
போல " இதுவும் நல்லதுக்குத்தான் "
என்றார். கடுப்பாகிப்போன அரசர்,
இந்த புத்தி கெட்ட மந்திரியை ஆறு
மாசம் கடுஞ்சிறையில் வைத்திடுக
என்று ஆணையிட்டார். நாட்கள்
உருண்டோடின. இந்த சம்பவம்
நடந்து இரண்டு மாதம் கழித்து
அரசர் காட்டிற்குச் சென்றார்.
வேட்டையாடிட. அடர்ந்த காட்டுப்
பகுதிக்குள் சென்றார் மன்னர்.
அப்போது மெய்காப்பாளர்கள் இவர்
சென்ற வழியினைபின் தொடர்ந்திட
மறந்திடவே, அரசர் தனி ஆளாக
சென்றார். அப்போது நடுக்காட்டில்
அரசர் மனிதர்களை தின்னும்
அரக்கர்கள் வசம் சிக்கிகொண்டார்.
பிடிபட்ட அரசரை, தங்கள்
கூட்டத்தின் தலைவரிடம் கொண்டு
போய் நிறுத்தினார்கள் அந்த இன
காவலர்கள். உடனே அரக்கர்குல
தலைவன், சபாஷ்!! நல்ல கொழு
கொழு என உள்ள மானுடனைக்
கொண்டு வந்துள்ளீர்களே நான்
சென்று குளித்துவிட்டு பூஜையை
முடித்துவிட்டு, சோம பானம்
அருந்திவிட்டு வருவதற்குள்ளாக
இந்தமானுடனை நெய்யில்
மூழ்கடித்து நன்றாக
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில்
வற்றக் காய்ச்சி வறுத்து எடுத்து
வையுங்கள் என உத்தரவு
இட்டுவிட்டு சென்றுவிட்டான்.
உடனே அரக்கர்கள் அரசனை புனித
நீராட அழைத்துச்சென்று
குளிப்பாட்டிடும் போது அந்தக்
கூட்டத்தில் ஒருவன் அய்யய்யோ
இது என்ன கொடுமை? இவருக்கு
உடல் அங்கம் ஈனம் அடைந்து
உள்ளதே (சுண்டுவிரல்
வெட்டப்பட்டு இருந்த இடம் அது)
எனவே இவனை நம்
குலதெய்வத்திற்குப் படையல்போட
முடியாதே என்று உரைத்தான்.
அரக்கர்குல தலைவனும் வந்து
பார்த்துவிட்டு இவன் சரிப்பட்டு
வரமாட்டான் என்று
சொல்லியதுடன், சிப்பாய்களே !!
இவனை கொண்டுபோய்
காடுகள் தாண்டி நாட்டுப் பகுதியில்
விட்டுவிட்டு வரச் சொல்லுங்கள்
என்றும் சொன்னான். மன்னன்
நாட்டினுள் நுழைந்ததும்
காத்துகொண்டு இருந்த படைகள்
மன்னா எங்கு சென்றீர்கள்? என்று
வினாவிட உடனே அரண்மனை
நோக்கி செல்ல ஆணையிடுகிறான்.
அங்கு போனவுடன் முதல்
வேலையாக காராகிரகத்தில் உள்ள
மந்திரி மதியழகனைப் பார்த்து
அவனைக் கட்டிஅணைத்துக்
கொள்கின்றான்மன்னன்.நீர்சொன்ன
வார்த்தை அதன் உட்பொருள்
இன்றுதான் எனக்குப் புரிந்தது.
அன்று மட்டும் அந்தவிரல் துண்டாகி
அறுந்துபோய் கீழே விழாமல் எனது
அங்ககீனம் அடையாது நான்
இருந்திருபேனேயானால் இன்று
மன்னனை நீங்கள் உயிருடன்
பார்த்திருக்க முடியாது. " இதுவும்
நல்லதுக்குத்தான் " என்ற
மந்திரியின் வார்த்தைக்கு எனது
தலை தாழ்ந்த வணக்கங்கள்
என்றானாம் அரசர்.
இது எப்படி இருக்கு ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment