உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இனிய காலை வணக்கம்.
பொதுவாக சிலரது ஜாதகத்தில்
பாக்கியாதிபதி என்றுசொல்லப்படும்
ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான
அந்தக் கிரகம், பாதிக்கப்பட்டு
இருந்தாலோ அல்லது பாவக்
கிரகங்களால் பார்க்கப் பட்டு
இருந்தாலோ, பாவக்கிரகங்களோடு
இணைந்து இருந்தாலோ சம்பந்தம்
பெற்றிருந்தாலோ, அல்லது
கெட்டுப்போய் இருந்தாலோ,
மறைந்து இருந்தாலோ, நீசம்
அடைந்து இருந்தாலோ, அந்த
ஜாதகர் அவரது வாழ்நாள்
முழுமைக்குமே உயர் தலைவர்
எனும் பொறுப்பிற்கு வந்து அமர்ந்து
இருக்கும் யோக்கியதைஇல்லாதவர்
என்றே ஜோதிட சிரோன்மணி ஸ்ரீ
வராகி மிஹிரர் அருளிச்சென்றுள்ள
" ஜோதிட கிரந்தம் " என்னும் அரிய
பழமை வாய்ந்த நூலில் சொல்லப்
பட்டுள்ளது. இங்கே நமக்குத்தெரிந்த
வகையில் இதற்குச் சரியான
உதாரணம் மறைந்த நாவலர்
நெடுஞ்செழியன் ஜாதகம் மேலே
சொன்ன அத்தனைகுறைபாடுகளின்
ஒட்டு மொத்த உரைகல்லாக
அமைந்திருந்த காரணத்தாலேயே
அவர் கீழ்க்கண்ட 4 முதல்வர்களின்
கீழ் அவர் பணிபுரிந்து இருந்த
அத்தனை கால கட்டங்களிலும்
இரண்டாம் இடத்தில்தான் அவரால்
மிளிர முடிந்தது என்பது வரலாறு
நமக்கு கூறிடும் உண்மை.
1) பேரறிஞர் அண்ணா.
2) கலைஞர் மு. கருணாநிதி.
3) புரட்சி நடிகர். M.G.R.
4) J ஜெயலலிதா (MGRன் வாரிசு)
ஆக இதுதான் ஜோதிடம் என்பது
உண்மையான ஒரு கலைஎன்பதற்கு
அருமையான உதாரணம்.
மீண்டும் எமது அடுத்த பதிவில்
உங்கள் அனைவரையும்
சந்திக்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment