உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
பாகம் எண் 1.ன் கடைசிப் பகுதியின்
தொடர்ச்சி.........
இப்போது இங்கே ஒரு
குட்டி பட்டிமன்றம் நடைபெற
இருக்கிறது. தலைப்பு என்ன
என்றால் :-
மனித உடலுக்கு மிகுதியும் கெடுதல்
செய்வது சிகரெட்டா ?
அல்லது
மதுவா ?
இந்தப்பட்டி மன்றத்தில்
பங்கேற்போர்கள்:-
கெடுதல் செய்வது சிகரெட்டே என்ற
அணியில் சிந்தனைச் செல்வன்
சிகாமணியும் சீர்திருத்தச் செம்மல்
அண்ணி வெற்றி லலிதா, இருவர்.
கெடுதல் செய்வது மதுவே என்ற
அணியில் ஆற்றல் அரசர் அன்புச்
செல்வனும் மாற்றல் விரும்பும்
மன்கையர்குலத் திலகம் மனுஷா
மகீந்திராலயா, இருவர்.
இந்தப் பட்டிமன்றத்திற்கு கடமை
ஆற்றிட வருகை புரிந்து இருப்பவர்
நமது நாவுக்கரசர்,நல்லவர்,
வல்லவர், உத்தமர், ஊர்மெச்சும்
உழைப்பாளி அன்பிற்கும்
பாசத்திற்கும் உரியவர் பண்பாளர்
நமது மதுரை மண் பெற்றெடுத்த
மன்னவர் T.R.பாலு அவர்கள்.
பட்டிமன்றம்
துவங்கும்தேதி: 19-௦1-2௦14. ஞாயிறு.
துவங்கும் நேரம் :- காலை 9 மணி.
நேரலையாக ஒளிபரப்பு நடைபெற
உள்ளது. இந்த நிகழ்ச்சியை நீங்கள்
கலைஞர் தொலைக்காட்சியில்
கண்டு களிக்கலாம்.
(சும்மாக்காச்சுக்கும்)
நாளை சந்திப்போம்.
நன்றி!! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
தொடர்ச்சி...பாகம் எண். 2.
அன்பர்களே !!
நேற்றையதினம் இந்த குட்டி
பட்டிமன்றம் துவங்குவதாக
இருந்தது. ஆனால் நடுவர்
அவர்களுக்கு எதிர்பாராத விதமாக
திரைஉலகப்பணி குறுக்கிட்டு
விட்டதால் நேற்றையதினம் அவர்
சென்னை சேப்பாக்கம் மட்டைபந்து
விளையாட்டு மைதானத்தின்
பின்புறம் அமைந்துள்ள
பொதுப்பணித் துறை அலுவலக
வளாகத்தில் நடைபெற்ற மறைந்த
நடிகர் முரளியின் மகன் (பரதேசி
படத்தில் நடித்தவர்) அகர்வா
படத்தில் வழக்குரைஞர் வேடத்தில்
நமது நடுவர் அவர்கள் கலந்து
கொள்ள சென்றுவிட்டதன்
காரணத்தினால் பட்டிமன்றம்இன்று
இப்போது துவங்குகிறது.
மங்கள இசையுடன் விழா இனிதே
நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
நடுவர் அங்கே வருகை தந்தவுடன்
மங்கள இசை நிறுத்தப்பட்டு,
இறைவணக்கம்செலுத்தப்படுகிறது.
பின்னர் நடுவர் தமது உரையினை
துவக்கி பேசுகிறார்:-
பேரன்பிற்குரிய பெரியோர்களே !!
அன்பின் திருஉருவாய் என்
முன்னால் அமர்ந்து இருக்கும் தாய்
மார்களே !! நாட்டின் எதிர்காலத்தின்
தூண்கள் ஆகிய நமது இளைய
தலைமுறையினரே மற்றும்
சின்னஞ்சிறார்களே !!
முதற்கண் உங்கள் அனைவரையும்
வணங்கி ஒரு சிறப்பான
பட்டிமன்றத்தினை இந்த நாட்டிற்கு
நல்கிய விழாக்குழுவினர்
அவர்களுக்கு எனது மனமார்ந்த
பாராட்டுக்கள். இப்போது
பட்டிமன்றத்தை துவக்கி
வைக்கிறேன். முதலில் மனித
உடலுக்கு மிகவும் கெடுதல்செய்வது
சிகரட்டே என்ற அணியின்
தலைமைப் பேச்சாளர் எனது
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய
சிந்தனைச் செல்வர் திரு சிகாமணி
அவர்களை அழைக்கிறேன்.
சிகாமணி :- நடுவர் உள்ளிட்ட
அரங்கினில் உள்ளோர்கள்
அனைவரையும் நான் வணங்கி
மகிழ்கின்றேன். புகை உயிருக்கு
பகை என்பது எல்லோரும் அறிந்த
ஒன்றுதான். இன்றைக்கு மாசுக்
கட்டுப்பாடு வாரியம் என்ற ஒரு
அமைப்பு எதற்காக இங்கே
கடமையாற்றிக் கொண்டுவருகிறது.
சிந்திக்க வேண்டும் தோழர்களே.
சுற்றுப்புறச் சூழலால் மனித இனம்
பெருத்த கெடுதலுக்கு ஆளாகி
அதனால் இனத்தின் ஸ்திரத் தன்மை
பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற
காரணத்திற்காகத்தான். அதே
போலத்தான் இந்த சிகரட்டினில்
இருந்து வெளியாகும் புகையை
அதில் கலைந்துள்ள தார்,நிகோடின்
என்னும் மகாகொடிய கொல்லும்
விஷத்தன்மை மனித நுரையீரலை
எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை
பல்வேறு புகைப்படங்களின்
மூலமாக இங்கே நான்
அவையோர்களுக்கு இங்கேவிளக்கி
உள்ளேன். மேலும் இந்த
விஷத்தன்மை உள்ள நிகோடீன்
இரத்த நாளங்களை சுருங்கச்
செய்வதால் நாளடைவில்
உங்களுக்கு இரத்த
அழுத்தம்,மாரடைப்பு போன்ற பல
வியாதிகள் வரக்காரணம் இந்த
புகைப் பழக்கமே.எனவே நடுவர்
அவர்களே!! மனித உடலுக்கு
மிகவும் கெடுதல் செய்வது
சிகரெட்டே என தீர்ப்பு வழங்கிட
வேணுமாய் வேண்டி விரும்பிக்
கேட்டுக்கொண்டு நன்றி பாராட்டி
விடை பெறுகின்றேன்.
நன்றி வணக்கம்.
(பட்டி மன்றம் நாளையும் தொடரும்)
நடுவர் :- நண்பர் சிகாமணியின்
பேச்சு உண்மையிலேயே
நடைமுறை நெறிமுறைகளுக்கு
உட்பட்டு மருத்துவ ரீதியாகவும்
மிகச் சரியானதாக அமைந்து
உள்ளது என்று சொன்னால் அது
மிகையானது அல்ல அன்பர்களே
இப்போது இந்தப் பட்டி மன்றம் தனது
முடிவடையும் நிலைக்கு வந்து
இருக்கின்றது. பட்டிமன்றத்தின்
தலைப்பு மனித உடலுக்கு மிகவும்
கெடுதல்செய்தல் எது ? சிகரெட்டா ?
அல்லது மதுப்பழக்கமா? இதுதான்.
அன்பர்களே !! அளவுக்குமிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகும். இது
ஆன்றோர்கள் சொன்ன வாக்கு.
இதன் படி பார்க்கின்றபோது, சிகரெட்
உண்மையிலேயே பார்ப்பதற்கு
ஸ்டைல் என தோன்றினாலும், அது
உடலுக்கு ஆற்றொணாத
புற்றுநோய் தருகின்றதொரு சிறந்த
வழியே ஆகும். இதை யாரும்
மறுப்பதற்கு இல்லை. எனவேஎந்தக்
காலத்தும் இதனை நம்மால்
அனுமதித்திட முடியவே முடியாது.
ஆனால் மதுப்பழக்கம் என்பது
அப்படி ஒதுக்கிவிட முடியாத ஒன்று.
ஏன் என்றால் அளவுடன் தினசரி மது
ஒருவர் அருந்தி வருகிறார் என்று
சொன்னால் அவருக்கு B.P. என்று
சொல்லப்படும் ( BLOOD PRESSURE)
இரத்த அழுத்த நோய் வருவதற்கான
வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு
என்றே மருத்துவ ஆய்வு
அறிக்கைகள் நமக்கு எடுத்து
உரைக்கின்றன. எப்படி எனில், இந்த
மதுவினில் கலந்து உள்ள
ஆல்கஹால் என்னும் பொருளானது
இரத்தத்தில் சேர்ந்தவுடன் அது நமது
மனித இரத்த நாளங்களை
விரிவடையச் செய்வதினால்
இரத்தம் நமது உடலில் எங்கும்
தங்கு தடையேதும் இன்றி சரளமாக
பாய்ந்திடும் வல்லமையை இந்த
ஆல்கஹால் என்னும் வேதியப்
பொருள் நமக்கு அளிக்கின்றது.
எதுவரை ? அளவுடன் அதாவது
இரண்டே இரண்டு லார்ஜ் மட்டும்
சாப்பிடும் வரை மட்டுமே. நான்
வசித்த மலேசிய நாட்டில்
கோலாலம்பூர் நகரில் மட்டும் அல்ல
அந்த நாட்டில் எங்கு பார்த்தாலும்
அங்கு உள்ள மக்கள் நன்கு வயிறு
முட்ட உணவு அருந்திவிட்டுத்தான்
மது அருந்திடும் பழக்கம்
உடையவர்கள் என்பதை இங்கே
என்னால் குறிப்பிடாமல் இருக்க
முடியாது. இதனால் என்ன நன்மை
என்றால் வயிறுக்கு,குடலுக்கு எந்த
தீமையையும் இந்த ஆல்கஹால்
செய்திட வாய்ப்பே கிடையாது.
ஆனால் மலேசியத் தமிழர்கள் மது
நன்றாக அருந்துபவர்கள். எனவே
இந்தப் பட்டிமன்றத்தின் நடுவர்
என்கின்ற முறையில் நான்
வழங்கிடும் இறுதித்தீர்ப்பு இதுதான்:-
மனித உடலுக்கு மிகவும் கெடுதல்
செய்வது அதிகமாக மது
அருந்துவதைவிட சிகரெட்டே !!
சிகரெட்டே !! என்று தீர்ப்பு
கூறுகிறேன். (அளவோடு மது
அருந்திடும் பழக்கம் உடலுக்கு
மிகவும் நல்லது. அதாவது இரண்டே
இரண்டு லார்ஜ் ( அதாவது ஒரு
குவார்டர் பாட்டிலில் சரிபாதி என்று
வைத்துக்கொள்ளலாம் இந்த
அளவினை குடிகாரர்கள் கட்டிங்
என்றும் சொல்வதுண்டு
அன்பர்களே)
மிக்க நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment