Saturday, 4 January 2014

எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் ? இந்த நாட்டிலே !!--ஒரு கருத்துச் செறிவு மிக்க கட்டுரை !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே!! உங்கள் 



அனைவருக்கும் எனது இனிய 



மாலை  வணக்கம் !!.                                       



பொதுவாக"ஏமாற்றுதல்" என்னும் 



ஒரு சொல், இந்த உலகம்தோன்றிய 



நாள்முதலாக, அதிலும் குறிப்பாகச் 



சொல்ல வேண்டும் என்றால், 



மனிதஇனம் என்ற ஒன்றினை 



எல்லாம் வல்ல இறைவன் படைத்த 



நாள்  முதலாகவேதான் இந்த 



"ஏமாற்றுதல்" என்ற சொல்லும் 



படைக்கப்பட்டுள்ளது போலும். 



அதிலும் நான் தற்போது வாழ்ந்து 



வரும் இந்தச் சென்னை மாநகரம் 



இருக்கிறதே, அப்பப்பா !! என்னால் 



வார்த்தைகளால் விளக்கிட 



முடியாது அதன் பெருமைகளை. 



எவன்டாஇருக்கான் ? ஏமாறுவதற்கு 



என்றும், அவனை எப்படிடா 



ஏமாற்றுவது என்று ஒரு கூட்டமும் 



எப்போதும் காத்துக்கொண்டேதான் 



இருக்கிறது.அசந்தோம்னா 



போச்சுங்க !! அம்புட்டுத்தான். 



நம்ம கிட்டயே ஆட்டையைப் 



போற்றுவானுங்க. அதனாலதான் 



நான் என்ன செய்வேன்னு சொன்னா 



கூட்டம் நிறைஞ்ச இடமாக 



இருந்தாலும் சரி, இல்லை என்றால் 



நெருக்கடி நிறைந்த நகரப் 



பேருந்துகள் பயணத்திலும் சரி, 



சிலநேரம் சில்லறைக் காசுகள் 



தவறிக் கீழே விழுவதும் உண்டு. 



ஆனால் கண்டிப்பாக அதைக் 



குனிந்து  எடுத்திட  முயற்சி 



செய்திடவே மாட்டேன். ஏன் ? ஏன் 



என்றால் ?, அதனை எடுக்க நான் 



எத்தனிக்கும் வேளையில் எனக்குப் 



பின்னால் நிற்கும் நபரால் எனது 



பின்புற எழில்களுக்கு ஏதாவது 



பங்கம் வந்து விடுமோ என்று 



அஞ்சியே நான் அந்தக்  காசுகளைப் 



போனால் போகட்டும் போடா, இந்தப் 



பூமியில் காசை தொலைக்காதோர் 



யாரடா ? என்ற பாடலை 



முணுமுணுத்துக்கொண்டேஅந்த 



இடத்தைவிட்டுநகர்ந்திடுவேன்.       




ஆனால் அந்தக் காலம் தொட்டு, 



அதாவது 1954ம் ஆண்டு வெளிவந்த 



கோவை.பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் 



தயாரிப்பில்,முத்தமிழ் அறிஞர், 



கலைஞர் மு.கருணாநிதி 



அவர்களின் கைவண்ணத்தில் 



(வசனத்தில்) புரட்சி நடிகர் M.G.R. & 



P. பானுமதி இருவரின் நடிப்பினால் 



வெளிவந்த படம்தான் 



"மலைக்கள்ளன் " என்னும் 



வராலாற்றுச் சிறப்பு மிக்க படம். 



அதில், மறைந்த, மதுரை மண் 



ஈன்றெடுத்த தங்கம், 



வெண்கலக்குரலின் அங்கம்,வெற்றி 



முரசு கொட்டிய செந்தமிழ்ச் சிங்கம் 



T.M.சவுந்திரராஜன் பாடிய பாடல், 



தேன்இசைத் திலகம், மறைந்த 



S.M.சுப்பையா நாயுடுவின் தேனினும் 



திகட்டிடும் இசை அமைப்பில் 



வெளி வந்த பாடல்தான் இது:-                                         



இன்னும் எத்தனை காலம்தான் 

ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !! நம் 

நாட்டிலே !!                                                     


சத்தியம் தவறாத உத்தமர் போலவே 

நடிக்கிறார் !!.                                                   

சமயம்பார்த்து பலவகையிலும் 

கொள்ளை அடிக்கிறார் !!.                         

பக்தனைப் போலவே பகல்வேஷம் 

காட்டி பாமர மக்களை வலையினில் 

மாட்டி  !!                                                 


                               (எத்தனைகாலம்தான்)                                 


தெருவெங்கும்பள்ளிகள்கட்டுவோம்


கல்வி தெரியாத பேர்களே 


இல்லாமல் செய்வோம் !!                       


கருத்தாகப் பலதொழில் 


பயிலுவோம் !!                                                 


ஊரில் கஞ்சிக்கில்லைஎன்ற 


சொல்லினைப் போக்குவோம்!!             


                           (எத்தனைக்காலம்தான்) 


ஆளுக்கொரு வீடு கட்டுவோம் !!   


அதில் ஆயகலைகளைச் சீராகப் 


பயில்வோம் !!                                                   


கேளிக்கையாகவே நாளினைப் 


போக்கிட,கேள்வியும் ஞானமும் 


ஒன்றாகத் திரட்டுவோம் !!                  



                              (எத்தனைகாலம்தான்) 




ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். 



ஏமாறுபவர்கள் இருக்கும் வரை 



ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் 



செய்வார்கள். நாம்தான் மிகவும் 



ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 



இந்த நிகழ்வுக்கு நமக்கு மிகவும் 



தேவைப்படுவது எது என்றால் நாம் 



நமது ஆறாவது அறிவான 



பகுத்தறிவினைப் பயன்படுத்துதல் 



மிகவும் அவசியமானது.கலைஞரின் 



கதை மற்றும் வசனத்தில் 1956ம் 



ஆண்டு வெளிவந்த ராஜாராணி 



என்ற திரைப்படத்தில் சாக்ரடீஸ் 



என்னும் ஓரங்க நாடகம் இடம் 



பெரும். அதில் சாக்ரடீஸ் என்னும் 



தத்தவ அறிஞன் இப்படிப் பேசுவதாக 



கலைஞர் அதில் பகுத்தறிவின் 



சிறப்பைப் பற்றி இப்படி 



அவர் வர்ணித்திருப்பார் :-                 



அவர்  சொன்னார் !! இவர் 



சொன்னார்!! என்று அறிவிழந்து 



தடுமாற்றம் அடையாமல், எவர் 



சொன்ன சொல்லானாலும் அதனை 



உனக்கே இயல்பான 



பகுத்தறிவினால் நீ சிந்தித்துப் பார் !! 



அப்படி சிந்தித்ததால்தான் சிலை 



வடிக்கும் இந்த சிற்பி சிந்தனை 



சிற்பியாக மாறினான் என்று 



கலைஞர் மிகச் சிறப்பாக வசனம் 



எழுதி இருப்பார். அப்படிப் பட்ட 



பகுத்தறிவை நாம் 



கோட்டை விட்டுவிட்டு 



இலவசங்களுக்கு ஆசைப்பட்டு 



ஓட்டுக்களை மாத்திப்போட்டால் 



இதில் நாம் கோட்டை விட்டால், 



நம்மை ஏமாற்றியவர்கள் 



கோட்டைக்குச்சென்றுஅமர்ந்து 



விடுவார்கள் என்பது இந்த 



நாட்டின் கடந்தகால வரலாறு. 



இந்த தவறை நாம் எதிர்வரும் 



பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் 



செய்துவிடக் கூடாது என்று உங்கள் 



அனைவரையும், எங்கள் 



இயக்கத்தின் தானைத் தலைவர் 



முத்தமிழ் அறிஞர், கலைஞர் 



திருமிகு மு.கருணாநிதி அவர்கள் 



சார்பாக வேண்டி விரும்பிக் 



கேட்டுக்கொண்டு உங்கள் 



அனைவரிடமும் அன்பு, நன்றி, 



மேலும் வணக்கம் கூறி 



விடைபெறுகிறேன்.                               



அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment