Saturday, 18 January 2014

அட...அட...என்னே....உண்மை.....ஒன்னு....இருக்குற..இடத்துலே..இன்னொன்னு..இருக்காது.....







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!   



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!     



ஒன்னு இருந்தா இன்னொன்னு 



இருக்கவே இருக்காதுன்னு 



என்னோட நைனா !!  அடிக்கடி 



சொல்லிட்டே இருப்பாரு. அது 



என்னன்னு யோசிச்சேன். விடை 



இதோ......இந்தா பாருங்க..படிங்க.. :-           



****************************************



அன்புன்னு ஒன்னு இருந்தா அங்கே     

                                    ஆசை இருக்காது !!   


ஆசைன்னு ஒன்னு இருந்தா அங்கே   


                                      பாசம் இருக்காது !! 


பாசம்னு ஒன்னு இருந்தா அங்கே         


                    மோசம்ங்கிறது இருக்காது!!


மோசம்னு ஒன்னு இருந்தா அங்கே     

             வேஷம்னு ஒன்னு இருக்காது!! 


வேஷம்னு ஒன்னு இருந்தா அங்கே     

                  நாசம்னு ஒன்னு இருக்காது!!


நாசம்னு ஒன்னு இருந்தா அங்கே         

        நல்லதுன்னு ஒன்னு இருக்காது !!


நல்லதுன்னு ஓன்னுஇருந்தாஅங்கே 


       கெட்டதுன்னு ஒன்னு இருக்காது!!


கெட்டது இருக்குற இடத்துல                   

            கேட்பது என்றும் கிடைக்காது !!


கேட்பது கிடைக்கும் இடத்துல             


 கண்டிப்பா தரம் என்றும்இருக்காது !!


தரம் இல்லாத இடத்திலே நிச்சயம்     


           தாரம் அங்கு இருக்க மாட்டாள்!!


தாரம் இருக்கும் இடத்திலே என்றும்   

      தன்னலம் எப்போதும் இருக்காது!!


தன்னலம் இல்லாத இடத்துலேதான்   

  பொதுநலம் என்றும் குடியிருக்கும்!!


பொதுநலம்இருக்கும் இடத்துலதான் 


புன்னகைக்கும் "  கலைஞர்   "                     


                                             வாழ்ந்திடுவார். 


நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன்.                   



அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment