தொடர்ச்சி...பாகம் எண்.3.
அன்பர்களே !!
இந்தப் புகைப்பழக்கம் உள்ள
உங்களுக்கு இரத்த அழுத்தம்,
மாரடைப்பு போன்ற பல
வியாதிகள் வரக்காரணம் இந்த
புகைப் பழக்கமே.
எனவே நடுவர் அவர்களே!!
மனித உடலுக்கு
மிகவும் கெடுதல் செய்வது
சிகரெட்டே என தீர்ப்பு வழங்கிட
வேண்டுமாய் கேட்டு விடை
பெறுகின்றேன். நன்றி வணக்கம்.
(பட்டி மன்றம் நாளையும் தொடரும்)
நடுவர் :- புகைப்பிடிக்கும்
பழக்கத்தினால் என்னென்ன
தீமைகள் உண்டாகின்றன என்பதை
தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்த
சிந்தனைச் செல்வனுக்கு
பாராட்டுக்கள். அடுத்து இப்போது
மனித உடலுக்கு மிகவும் கெடுதல்
செய்வது மதுப்பழக்கமே என்ற
அணியின் தலைவர் ஆற்றல் அரசர்
அன்புச் செல்வனை பேசிட வருமாறு
அழைக்கிறேன்.
அன்புச் செல்வன்:- இந்த மாபெரும்
பட்டி மன்றத்திற்கு வருகை புரிந்து
நடுவராகக் கடமை ஆற்றிடும்
அன்புச் சகோதரர் மதுரை TR பாலு
ஐயா அவர்களே !!
இன்றையதினம் ஒரு சிறப்பான
பட்டிமன்றத்தினில் ஒரு அணியின்
தலைமைப் பொறுப்பு ஏற்று
எனக்கும் அந்த நல்லதொரு
விழாவினில் பங்கேற்று
உரைநிகழ்த்திடும் வாய்ப்பினை
வழங்கிய அந்த எல்லாம் வல்ல
பரம்பொருளுக்கு எனது முதற்கண்
நன்றிகலந்தவணக்கம்.அன்பர்களே!!
மனித உடலுக்கு மிகவும் கெடுதல்
செய்வது மதுவே!! என்ற அணிக்கு
நான் தலைமை ஏற்று பேசுவதில்
நான் வைத்திடும் முதல் வாதம்
என்ன வென்றால், அன்பர்களே !!
சைத்தானின் முதல் ஆயுதம்தான்
இந்த மது,பிறகு பொருள்மாது அதன்
பின் சூது இப்படித்தான் இஸ்லாமிய
மதம் நமக்கு போதிக்கின்றது. ஆக
அப்படிப்பட்ட மது நமது மனித
உடலைமட்டும் சீரழித்துவிட
வில்லை மனிதனின் சிந்திக்கும்
ஆற்றலை, அறிவை செயல்பாட்டை
இவை அத்தனையையும் கெடுத்துக்
குட்டிச்சுவராக்கி இவனை
பாவம்என்கின்ற படுகுழியில் தள்ளி
விடுவதுடன் நின்றுவிடுவது
கிடையாது. இவனை, இவனது
அறிவை மழுங்கடித்து இவனை
மிருகத்தைவிடவும் மிகக்
கேவலமான ஒரு நிலைக்குத் தள்ளி
விட்டு வேடிக்கை பார்ப்பதும் இந்த
மதுப் பழக்கம்தான் அன்பர்களே!!
கவிஞர் வாலி என்ன சொன்னார்?
என்ன சொன்னார்?
நடுவர்:- யோவ்!! என்ன சொன்னார் ?
என்ன சொன்னார்? அப்டீன்னு
கேட்டுக்கினே இருந்த? இன்னாய்யா
அர்த்தம்? சொன்னாத்தானேயா
தெரியும்? சொல்லுய்யா.
அன்புச்செல்வன்:- இல்லை நடுவர்
அவர்களே !!
வாலி சொன்னார்:- தைரியமாகச்
சொல் நீ மனிதன்தானா ? இல்லை!!
நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில்
விழும் நேரம்!! மனமும் நல்ல
குணமும் உன் நினைவை விட்டு
விலகும். இப்படித்தானே
சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
எனவே நடுவர் அவர்களே!! உங்கள்
தீர்ப்பு இப்படித்தான் இருந்திட
வேண்டும். மனித உடலுக்கு
மிகுதியும் கெடுதல் செய்வதுமதுவே
என்று தீர்ப்பு வழங்கி அத்துடன்
இன்றைக்கு இந்த நாட்டில் இருக்கும்
அத்தனை டாஸ்மாக் கடைகளையும்
இழுத்துப் பூட்டு போட்டு
விடவேண்டுகின்றேன்.
நடுவர்:- அய்யா !! அன்புச் செல்வன்
அவர்களே!! நீங்க கோட்டைக்கு
வேணும்னா பூட்டு போட்டுவிடலாம்.
ஒன்னும் குடிமுழுகிப் போவாது.
ஆனா நீங்க சொன்ன அந்தக்
கடைக்கு மட்டும் பூட்டு போடவே
முடியாது. ஏன்னா நம்ம அரசாங்கம்
நடக்கிறதே இந்த டாஸ்மாக்
கடையிலே வர்ற வரும்படியை
வச்சுத்தான் அரசாங்க
ஊழியர்களுக்கு சம்பளமே போட
முடியுது. இத்த பூட்டிட்டு என்ன அந்த
அம்மாவை கடற்கரையோரமா
குந்திக்கினு பிச்சை எடுக்கச்
சொல்லுதீரோ? இல்ல கேக்கேன்?
பேசுறதுன்னா எதுனாச்சும்
அர்த்தத்துடன் பேசும் ஒய்!!
அன்பு:- இல்ல தலைவர் அவர்களே.
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
எனவே நீங்க வழங்கிடும் தீர்ப்பு
நமது தாய்க்குலத்தின் கண்ணீரை
துடைத்திடும் வண்ணம் இருந்திட
வேண்டும் என்று கேட்டு விடை
பெறுகின்றேன். நன்றி வணக்கம்.
நடுவர்:- அப்பாடா !! ஒரு வழியா
கனமழை ஓய்ந்ததா. நம்ம அன்பு
பேச ஆர்ம்பிச்சார் என்றாலே
இப்படித்தாங்க . ஓய மாட்டார். சரி
இப்ப மாற்று அணியான சிகரெட்டே
என்ற அணியிலிருந்து செல்வி/
திருமதி வெற்றிச் செல்வியை
பேசுமாறு அழைக்கிறேன்.
அன்புச்செல்வன்:-I Object your honor!!
நடுவர்:-(பயந்தபடியே) யோவ்!!
ஏன்யா object பண்ணுறே ?
அன்புச் செல்வன்:- ஒன்னு செல்வி
அப்படீன்னு சொல்லுங்கஇல்லையா
திருமதின்னு சொல்லுங்க.
ரெண்டையும் போட்டுக்
குழப்பாதீங்க .
நடுவர்:- சரிய்யா !! குழப்ப வில்லை
வெற்றிச் செல்வி அவர்களை பேச
வருமாறு அழைக்கிறேன். ஒருசிறிய
விளம்பர இடைவேளைக்குப்
பின்னால்.
(தொடரும்)
No comments:
Post a Comment