Friday, 31 January 2014

தொடர்ச்சி....பாகம்எண்.. 2. தி.மு.க.தலைவர் (எங்களுக்கும் நீங்கதான் தலைவர்)திரு. மு. கலைஞர் அவர்களே !!ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்றால் என்ன ?






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



இதை உரக்கச் சொல்வோம் 



இவ்வுலக்கு !!



இனம் ஒன்றாக, மொழி வென்றாக 



புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!



நம் வெற்றிப்பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!



எங்களின் இனமானத் தலைவர் 



கலைஞர் அவர்களே!!                    



என் பெயர் மதுரை T.R. பாலு. எனது 



வயது 6௦. தங்களை விடவும் நான் 



வயதில் ஏறத்தாழ 31 ஆண்டுகள் 



சிறியவன். நான் ஒரு தி.மு.க.வாக



இருந்தாலும்கூட  நான் இளம் 



வயதிலேயே " ஜோதிடம் "  என்னும் 



ஒரு அரிய கலையை கற்றவன். 



அதன்படி சில விஷயங்களை நான்



தங்களுடன் பகிர்ந்து கொள்ள 



விரும்புகிறேன் தலைவா.உத்தரவு 




தர தங்களை நான் வேண்டுகிறேன்.



தலைவரே தாங்கள் கடக இலக்னம்



இரிஷப ராசி. லக்னாதிபதி சந்திரன் 



உச்சபலம்பெற்றுருப்பதினால்தான் 




தாங்கள் மாநிலத்தில் மாபெரும் 



பதவியைவகித்தவர், வகித்திட




இருப்பவர். இராசியில் சந்திரன் 



உச்ச பலம் பெற்றதனால்தான் 



தாங்கள் இந்த 91 வயதிலும்கூட 



அழகாக மேலும் இளமையாகக் 



காட்சி அளிக்கிறீர்கள் தலைவா. 



தாங்கள் அமாவாசை 



அன்று பிறந்துள்ளீர்கள்.தங்களது 



ஜாதகத்தில் தனம்,வாக்கு,குடும்ப 



ஸ்தானாதிபதியாகிய சூரியன் அந்த 



ஸ்தானத்திற்கு 11ம் இடமாகிய 



இலாபஸ்தானத்தில் அமர்ந்து 



உள்ளதால்தான் தாங்கள் எதைத் 



தொட்டாலும் அதில் தங்களுக்கு 



ஏதாவது ஒருவகையினில் இலாபம் 



கிட்டாமல் போகவே போகாது. 



தங்களது ஜாதகக் கட்டத்தில் 



திரிதிய, விரையஸ்தானாதிபதியான 




புதன் லக்னத்திற்கு பத்தாம்இடத்தில் 



பகை  ஷேத்திரத்தில் 



அமர்ந்திருந்தாலும்கூட



நீசன் நின்ற இராசிநாதன் உச்சம் 



பெறின் நீசபங்க இராஜ யோகம் 




என்ற ஜோதிட முதுமொழிக்கு 




இணங்க தாங்கள் 




தமிழகத்தின் இராஜாவாகவே இறுதி 



மூச்சு உள்ளவரை வாழ்ந்திடுவீர்கள்.



சப்தம,(நான்காமிடம்)இலாப 



(பதினோராமிடம்)இவ்விரண்டிற்கும் 




ஸ்தானாதிபதியாகியசுக்கிரன் 



தங்களது ஜாதகக் கட்டமதில் 



பன்னிரெண்டாம் இடத்தில் தனது 




நட்பு வீட்டில் ஜோராக ஜம்மென்று 




அமர்ந்து உள்ளான். இந்த இடத்தை 




விரைய ஸ்தானம்என்றுஅரைகுறை 




ஜோதிடர்கள் கூறிடுவார்கள்.




ஆனால் அது உண்மை அல்ல.அந்த 




இடம் வெறும் விரையம் 




தருகின்ற இடம் மட்டும் அல்ல.



அயன (உணவு) சயன( நல்ல ஒய்வு )




ஸ்தான இடமும் அதுவே. 



இதுவும் ஒரு அதிபயங்கர 



ராஜ யோகமே. ஓரு மாநிலத்தில் 



வாழ்ந்திடும்  அத்தனை கோடிப் 



பேர்களுள் ஒருவர் அல்லது 




இருவருக்கு மட்டுமே 




இந்த யோகத்தை இறைவன் 



அளித்துள்ளான். 



அடுத்து தங்களது ஜாதகக் 



கட்டத்தில் ஐந்தாம் இடம் மற்றும் 




பத்தாம் இடத்தை பற்றி 




பார்த்திடுவோம். 




அதன் அதிபதி அங்காரகன் என்றும் 




பூமிகாரகன் என்றும் 




அழைக்கப்படும் செவ்வாய் ஆகும். 




இவன் உச்சம் பெற்று தனது 




நான்காம் பார்வையாக 




(தனது சொந்த வீடான மேஷத்தை)



லக்கினத்திற்கு பத்தாம்இடத்தையும் 




தனது ஏழாம் பார்வையாக 




லக்கினத்தையும் 



எட்டாம் பார்வையாக இரண்டாம் 



வீட்டினையும் பார்க்கின்ற 




யோகத்தைப் பற்றிச் சொல்ல 




வேண்டும் என்றால் அதற்கு இந்த 




நாளும் பத்தாது பல 




பொழுதுகளும் நிச்சயமாக பத்தவே 




பத்தாது தலைவா. எனவே 




தற்போதுள்ள தங்களுக்குப் 




பிரச்சனையே தங்களது 




மூத்த புத்திர பாக்கியம் ஆகிய 



திரு மு.க.அழகிரிதான். இந்தப் 




பிரச்சனை ஏன்,எப்படி, எதற்காக 




வந்தது என்பதைப் 




பற்றி எனது அடுத்த கட்டுரையில் 




நான் தங்களுக்கு விரிவாக, 




விளக்கமாகக் கூறிடக் கடமைப் 




பட்டு உள்ளேன் தலைவா. தயவு 




செய்து தாங்கள் அதுவரைபொறுத்து 




இருங்கள்.




நன்றி தலைவா !!



வணக்கம் தலைவா!!



அன்புடன் தங்கள் உண்மைத் 



தொண்டன் 



மதுரை T.R.பாலு.



(இருப்பு @ துரைப்பாக்கம் சென்னை 



6௦௦௦97). 



No comments:

Post a Comment