Tuesday, 14 January 2014

தமிழ்த்திரைப்படத்தில் மேல்நாட்டு இசையைக் கிண்டல் செய்து பாடப்பட்ட பாடல் இதோ உங்கள் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



உலகத் தமிழர்கள் அனைவருக்கும் 



எனது இனிய,மனங்கனிந்த, 



பொங்கல்திருநாள்,தமிழ்புத்தாண்டு, 



மாட்டுபொங்கல் நல்வாழ்த்துக்கள் !!



அன்பர்களே !! 




" அன்பு எங்கே " இதுதான் அந்தப் 



படத்தின் பெயர். இதில் நடித்து 



இருந்தவர்கள் இலட்சிய நடிகர் 



திரு S.S.இராசேந்திரன், K.பாலாஜி, 



தேவிகா, மற்றும் பலர். இந்தப் 



படத்திற்கு கதை,வசனம் எழுதியவர் 



யார் தெரியுமா அன்பர்களே ? ஆம் 



முத்தமிழ் அறிஞர் தலைவர் 



கலைஞர் அவர்களின் அன்பிற்கும், 



பாசத்திற்கு உரிய  மருமகன், 



(முன்னாள் N.D.A. (தேசியஜனநாயகக் 



கூட்டணி) i-e தி.மு.க. + பாரதிய 



ஜனதா கட்சி இணைந்து மத்தியில் 



ஆட்சி செய்திருந்த காலத்தில் 



மத்திய அரசில் வர்த்தகத் துறை 



காபினெட் மந்திரியுமான)முரசொலி 



மாறன். அன்பர்களே !! அநேகமாக 



இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1959-



1961 இந்தக் கால கட்டத்தில் என்றே 



நான் கருதுகிறேன். படம்வெளிவந்த 



ஆண்டு சரியாக நினைவு அலையில் 



பதிவாகவில்லை. அப்போது 



கிட்டதட்டகர்நாடகசங்கீதம்என்பது 



திரைப்படங்களில் இருந்து 



அநேகமாக விடை 



பெற்றுக்கொண்டு எங்கோ 



சென்றுவிட்டது என்றே கூறலாம். 



மேலை நாட்டு சங்கீதம் மிகவும் 



பிரசித்தி பெறுகின்ற நேரம் அது. 



அந்தக் காலகட்டத்திலேயே அந்த 



மேலைநாட்டு இசையை கிண்டல் 



செய்து இந்தப் பாடல் அந்தப் 



படத்தில் இடம்பெறச் செய்து 



உள்ளனர். இதோ பாடல் உங்களது 



கனிவான கவனத்திற்கு :-                                                                                                           

  http://www.youtube.com/watch?v=eG6f5dKzVxA                  


இந்தப் பாடல் மேலே குறிப்பிட்ட 



YOUTUBE இணைய தளத்தில் 



உள்ளது அதன் விபரம் மேலே 



குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனைக் 



க்ளிக் செய்து படத்தில் இடம்பெற்ற 



அந்தக் காட்சியைக்கண்டு 



மகிழ்ந்திட வேணுமாய்க் 



கேட்டுக்கொள்கிறேன். நன்றி !! 



வணக்கம் !!                                                     



அன்புடன் மதுரை T.R.பாலு.                     



****************************************




டிங்கிரி டிங்காலே !! மீனாட்சி       



டிங்கிரி டிங்காலே !!                                 



உலகம்போற போக்கைப்பாரு 



தங்கமே தில்லாலே !!                                     



அதிகமாப் படிச்சு படிச்சு மூளை 



கலங்கிபோச்சு !! 



அணுகுண்டைத்தான்போட்டுக்கிட்டு 



அழிஞ்சுபோகலாச்சு !!                           



அறிவில்லாமப் படைச்சுப்புட்டான்   



மிருகமுன்னு சொன்னோம் -- அந்த 



மிருகமெல்லாம் நம்ம்மைப் பார்த்து 



சிரிக்குதென்ன செய்வோம் ?       


                                      (டிங்கிரிடிங்காலே) 


அய்யா வரவைப்பாத்து வீட்டில் 



ஏங்குறாங்க அம்மா !! -- அந்தஅய்யா 



இங்கே கும்மாளம்தான் போடுறாரு 



சும்மா !!                                                             



அப்பன் பாட்டன் ஆஸ்தி எல்லாம் 



சிகரெட்டாக மாறி, அய்யா வாயில் 



புகையுது பார், I am very sorry !!                 



                                     (டிங்கிரி டிங்காலே) 



கறியும் கூட்டும் சோறும் துண்ண 



மாட்டார் இந்த மைனர்.காஞ்சுபோன 



ரொட்டித்துண்டும் சூப்பும் இவரு 



டின்னர்.                             



குறுக்குவழியில் பணத்தைச் சேர்க்க 



இந்தமனுசன் ஆசை !!                             



குதிரை வாலில் கொண்டு போயி     



கட்டுவார் காசை !!                                                                                                        


                                  (டிங்கிரி டிங்காலே ) 



கண்ணும் கண்ணும் பேசிக்குது !!     



மூக்கும் மூக்கும் முட்டுது !!               



பொண்ணும் ஆணும் ஜோடி 



போட்டுக்கையைக்காலைஆட்டுது !! 



கண்டவங்க மண்டையெல்லாம் 


தாளத்தோட ஆடுது !!                             



காலு கை உடம்பு எல்லாம் தூக்கித் 



தூக்கிப் போடுது !!                                     


                                    (டிங்கிரி டிங்காலே ) 



****************************************



அன்பர்களே !! அந்தக் காலத்தில் 



எப்படிஎல்லாம் தங்கள் மனது 



தோன்றிய கருத்துக்களை 



சுதந்திரமாக திரைப்படத்தில் பதிவு



செய்து இருக்கிறார்கள். இந்தக் 



காலத்தில் அப்படிப்பட்ட துணிவு 



வேறு  யாருக்கு வரும் ? முத்தமிழ் 



அறிஞர் தலைவர் கலைஞர் 



ஒருவரைத் தவிர !!                                   



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன். மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment