Friday, 29 November 2013
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழ் இனத்திற்கு மாபெரும் துரோகம், மன்னிக்க முடியாத துரோகம் செய்திட்ட மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தையும் மறைந்த ராஜீவ் காந்தியின் இத்தாலிய நாட்டு மனைவி திருமதி சோனியா காந்தியையும் தமிழக மக்களும் உலத்தில் வாழ்ந்துவரும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவர்கள் செய்த கழுத்தறுத்த வேலையின் பலனை லட்சக்கணக்கான தமிழ் இன மக்களைக் கொன்று குவித்த ராஜபட்சேவின் கொண்டுங்கோன்மைக்கு குத்துவிளக்கு ஏற்றிவைத்துப் பழி தீர்த்துக்கொண்ட முக்கியமாக இத்தாலிப் பெண் சோனியா காந்தியை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள் மக்கள்!!--ஒரு சிந்தனைச் செறிவுள்ள அரசியல் ஆய்வுக்கு உரிய சிந்தனை கட்டுரை !! இதோ உங்கள் கனிவான கவனத்திற்கு !!
Tuesday, 26 November 2013
தொடர்ச்சி....இறுதி பாகம் எண்.5 ....கணேசன் மனைவி கனகா " தர்ம பத்தினியா? " இல்ல " அதர்ம பத்தினியா "நமக்கு விடை தர இருக்கும் கட்டுரையின் இறுதிப் பாகம் !! உங்கள் அனைவரின் கனிவான கவனத்திற்கு !!
மறுநாள் காலையில் தனது
அலுவலகம் சென்ற கணேசன்
அத்தனை வேலைகளையும்
முடித்துவிட்டு ஆசிரமத்தில்
இருக்கும் சுவாமியை நேரில்
சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்.
இப்போது இந்த நிகழ்ச்சி
" நேரலை " வடிவம் அடைகின்றது.
கணேசன்:- (கண்களை
மூடிக்கொண்டு தியானத்தில்
இருக்கும் சுவாமியை நோக்கி தனது
இருகரங்களையும் ஒருசேரக்
குவித்துவைத்துக்கொண்டே
வணக்கம் சுவாமிகளே !! என்று
அழைத்தான்.
அதுவரையில் தியானத்தின் மூலம்
நிஷ்டையில் இருந்த அவரின்
செவிகளில் கணேசனின் குரல்
ஒலித்திடவே கண்விழித்த அவர்,
(கணேசனைப் பார்த்து)
ஸ்வாமி :-என்ன !!மகனே என்னோடு
விவாதம் நடத்தவே நீ இங்கு
வந்திருக்கின்றாயோ என்றார் அவர்.
கணேசன்:- ஆம்.சுவாமிகளே!!
தங்களின் கணக்கு பொய்த்துப்போய்
விட்டதே.
ஸ்வாமி:- மகனே !! இந்த பூமியில்
சில நேரங்களில் நாம் காணும்
கானல் நீர்கூட பருகும்நீர் போலவே
தோன்றவில்லையா?
அதுபோலத்தான் இந்த நிகழ்வும்.
எல்லாம் "அவன்" செயல்.
கணேசன் :- இல்லை ஸ்வாமி.
தாங்கள் குறிப்பிடுவது, என்
மனைவியைப் பொறுத்தவரையில்
தவறாகவே அமைந்துவிட்டது. நான்
தாங்கள் கொடுத்த " கல்பத்தை "
உட்கொண்டு அதன் பயனாக
இறந்தவன் போல ஆகிவிட்ட
நிலையில் நீங்கள் சொன்னதுபோல
அவள் எனது பணத்தை மட்டும்
விரும்பி இருந்தவள் என்பது
உண்மையானால் அவள்
எதற்காக,கண்ணீரும்
கம்பலையுமால்க அழுது புரண்டு
ஆர்ப்பரித்து என்னை
இழந்துவிட்டோமே என்று கதறி
இருக்க வேண்டுமே ?துடித்து இருக்க
வேண்டுமே ?சொல்லுங்கள்
சுவாமி.சொல்லுங்கள்.
ஸ்வாமி :- மகனே!! கடலிடைத்
துரும்பு மனித வாழ்வு. இந்த
தத்துவத்தின் பொருள் அறியாமல் நீ
பிதற்றுகிறாய். பெண்களின் உள்ளம்
எத்தன்மைவாய்ந்தது என்பதை நீ
அறியாதவனப்பா. பாட்டு என்ன
சொல்கிறது கேள்.
ஆறு !! அது ஆழமில்லை !! அது
சேரும் கடலும் ஆழமில்லை !!
ஆழம் எது ஐயா ? அந்தப்
பொம்பளை மனசு தான்யா !!
கேள்விப்பட்டிருக்கிறாயா இந்தப்
பாடலை. சரி பரவாயில்லை. நான்
முதலில் வைத்தகுறி சற்று திசை
மாறி பறந்து இருக்கலாம். இம்மாதம்
வரும் பவுர்ணமி அன்று நீ இப்போது
உட்கொண்டது போல உட்கொள்ள,
இன்று மேலும் ஒரு கல்பம் உனக்கு
தருகிறேன். அதை நீ உட்கொள்.
அப்போது நடைபெறும் நிகழ்வின்
போது உன்மனைவி உன்னை
விரும்புவது உன்னையோ அல்லது
உன்னிடம் உள்ள அறிவையோ
அல்லது உனது உடல் அழகையோ
அல்ல !! அவள் அன்றும் இன்றும்
இனி என்றென்றும் விரும்புவது
உன்னிடம் குவிந்து உள்ள வற்றாத
செல்வச் செழிப்பையும் சொகுசு
வாழ்க்கையையும் மட்டுமே என்பது
உனக்குத் தெளிவாக புரியும்.
(இன்றைய தினம் நம் நாட்டினில்
உள்ள ஏறத்தாழ 95
விழுக்காடுகளுக்கு மேல் உள்ள
திருமணம் முடித்து கணவர்
மாபெரும் செல்வச் செழிப்பு உள்ள
சீமான்களாக வாழ்ந்திடுவோர்களது
மனைவிமார்களின் நிலையும்
கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்க
முடியும்.நடுத்தர வர்கத்தில் உள்ள
மனைவிமார்களில் 5௦
விழுக்காடுகளுக்கு மேல் உள்ள
அந்த மனைவியரின் நிலைமையும்
அவர்களதுஆழ்மனதினில் உள்ள
விருப்பமும் அதுவாகத்தான்
இருந்திட முடியும்) ஆனால்
இந்தமுறை உனது மனைவி மிகவும்
எச்சரிக்கையாகவே செயல்
படுவாள். எனவே நீ இறந்ததுபோல
இருக்கும் நிலைதனிலிருந்துவிடுபட
ஓர் வழி ஒன்று உனக்குச்
சொல்கிறேன். நீ பவுர்ணமி அன்று
இறப்பதுபோல நடித்திடும் சம்பவம்
நடைபெறும் இடத்திற்கு சரியான
நேரத்தில் நான் அங்கே
பிரசன்னமாகி உன் உயிரையும் உன்
உடலையும் காப்பாற்றுவேன். நீ
எதற்கும் கவலைப்படாமல் இந்த
கல்பத்தை பத்திரமாக வைத்திருந்து
வரும் பவுர்ணமி அன்று உட்கொள்.
மற்றவற்றை நான் பார்த்துக்
கொள்கிறேன். இப்போது நீ சென்று
வா மகனே !!
சரி என்று சொல்லி கணேசன்
ஸ்வாமிகள் தந்த கல்பத்தைப்
பெற்றுக் கொண்டு வீடு
திரும்பினான். நாட்கள்
உருண்டோடின. ஸ்வாமிகள்
சொன்ன பவுர்ணமியும் வந்தது.
அன்றைய தினம் கணேசன்
வாழ்வினில் நடந்தது என்ன ?
நாளை வரைதான் சற்று பொறுத்து
இருங்களேன் ?
"" விடியும்வரை காத்திருங்கள் ""
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
தொடர்ச்சி .... இறுதி பாகம் எண்.5.......
அந்த பவுர்ணமி அன்று இரவு
வீட்டுக்கு வந்த கணேசன்
வழக்கம்போல இரவு 1௦
மணிக்கெல்லாம் உணவு உண்டு
முடித்தான். ஸ்வாமிகள் கொடுத்த
"கல்பத்தையும்" சாப்பிட்டான். அந்த
கல்பமும் தனது வேலையை
காண்பிக்க ஆரம்பித்தது.
வழக்கம்போல காலை 6 மணிக்கு
காபி கொண்டுவந்த கனகா
மீண்டும் தனது கணவர் உணர்வற்ற
நிலைக்கு வந்தது கண்டு அதிர்ந்து
போன கனகா மருத்துவரை
அழைத்து கணவரின் நிலை பற்றிக்
கேட்டு அறிந்தார். போய் விட்டார்
உன் கணவர் புண்ணிய
லோகத்திற்கு என்று மருத்துவர்
அளித்த பதிலில் திருப்தி அடையாத
கனகா, மற்றும் ஒரு சிறப்பு
மருத்துவரை அழைத்து
இரண்டாவது கருத்துக் (SECOND
OPINION) கேட்டு அதையும் உறுதிப்
படுத்திக்கொண்டபிறகே
உற்றார்,உறவினர்,நண்பர்கள்,ஊர்
மக்கள் அனைவருக்கும் தனது
கணவரின் மரணச் செய்தியை
எல்லோருக்கும் அறிவிக்கலானார்.
புண்ணியகுமாரன் குப்புசாமி
மறுநாள் அமெரிக்காவிற்கு பயணம்
மேற்கொள்ள இருந்த நிலையில்
திட்டத்தைத் தள்ளிவைத்தார் அவர்.
கருமாதிசெய்திடும் அய்யரும்வந்து
தனது கடமை ஆற்றி முடித்தார்.
சடலத்தைத் தூக்கிச் செல்ல
வழக்கம்போல ஆம்புலன்ஸ்
வண்டியும் வந்து தயார் நிலையில்
நின்றது. ஸ்ட்ரெச்சர் வீட்டிற்குள்
கொண்டு வரப்பட்டு கணேசனின்
சடலத்திற்கு அருகாமையில்
வைக்கப் பட்டது தூக்கிச்செல்ல
ஏதுவாக. இவ்வளவு
காரியங்களையும் செய்ததற்குப்
பிறகே கனகா தனதுமனத்துயரத்தை
கண்ணீர் மூலமாகவும் கத்தி சத்தம்
போட்டு அழுவதன் வாயிலாகவும்
தன் துக்கத்தை வெளிப்படுத்திக்
கொண்டு கணவர் கணேசனின்
இரண்டு கால்களையும் இறுகப்
பற்றியபடியே அழுது கொண்டு
இருந்தாள். ஊர்ப் பெரியவர்கள்
எல்லோரும் இறுதிமரியாதையை
செய்து முடித்தனர். மகன்
அம்மாவின் காதருகே வந்து ( இந்த
இடத்தில் இருந்து "நேரலைநிகழ்வு"
LIVE SCRIPT துவங்குகின்றது
நேயர்களே)
மகன் :- (மெல்லிய குரலில் )அம்மா !!
எல்லோரும் காத்துக்கிட்டு
இருக்காங்கம்மா !!
எந்திரிங்க !! அப்பாவைத் தூக்கிட்டு
போக வேனும் வந்திருச்சு. இப்படியே
அழுதுட்டே இருந்தா !! அப்பா என்ன
முந்தி மாதிரி உசுரோடயா
திரும்பவும் வரப்போறாரு?
எந்திரிம்மா !!
கனகா:- (ஆவேசம் கலந்த சோகம்
நிறைந்த குரலில்)டேய்.........டேய்.........
..உங்கப்பாவைப் பத்தி உனக்கு
என்னடா தெரியும். அவருஎன்னோட
உசுருடா.....நானும் அவரோடயே
செத்துப் போறேண்டா...என்னையை
அவரை விட்டு பிரிக்காதேடா......
(இந்த நிலையில் ஊர்
பெரியவர்களின் தலையீட்டின்
பேரில் கனகாவை மிகுந்த
சிரமத்தின் பேரில் பிரித்து கணேசன்
பூத உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து
ஆம்புலன்ஸ் வேனுக்குள் வைக்க
தூக்கிகொண்டு போக எத்தனிக்கும்
போது கனகா எழுந்து நின்றார்.)
கனகா :- (தனது கணவர் கணேசன்
உடலைத் தூக்கிக்கொண்டு
செல்வோரைப் பார்த்து அவர் ஒரு
வேண்டுகோள் ஒன்றினை
வைக்கின்றார்.) ஐயா !! உங்க நாலு
போரையும் நான் இப்ப
கையெடுத்துக் கெஞ்சிக்கூத்தாடிக்
கேட்டுக்கொள்றேன்!! தயவு செய்து
போனதடவை அவரைத் தூக்கிக்
கொண்டு போகும்போது அவரது
உடலை நிலையிலும் கதவிலும்
இடிச்ச மாதிரி, இந்தத் தடவையும்
இடிச்சுராதீங்க (?) அப்படீன்னு
கெஞ்சி கேட்டுக்கிறேன் என்று
சொன்னார். ( இது எப்படி இருக்கு ?)
(இந்த நிகழ்ச்சியைப்புரிந்துகொண்டு
சிரிப்பவர்கள் சிரியுங்கள்.)
(புரியாதவர்கள் கவனத்திற்கு:- ஏன்
இந்த மாதிரி கனகா தனது கணவர்
கணேசன் உடல் எங்கும்
இடித்துவிடாமல் கொண்டு
செல்லுங்கள் என்று சொல்கிறார்
இது ஏன் என்றால், போனதடவை
இடித்துவிட்டதால் அவர் மீண்டும்
உயிர் பிழைத்துக்கொண்டார்
அல்லவா? அது இந்த முறையும்
நடந்துவிடக் கூடாது என்கின்ற
"நல்ல எண்ணத்தில் " அவர்
வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள்
இந்த வார்த்தை)
இந்த செய்தியை செவியால் மட்டும்
கேட்டுக்கொண்டு இருந்த கணேசன்
அப்போதுதான் உணர்ந்தார்
ஸ்வாமிகள் சொன்னது
சரிதான்.தனது மனைவி கனகா,
தன்னை உண்மையில் விரும்ப
வில்லை, அவர் விரும்பியது தனது
சொத்துக்களையும் தனது பணத்தை
மட்டும்தான் என்று ஸ்வாமிகள்
சொன்னது சரிதான் என்று
எண்ணியபடியே, ஆண்டவனிடம்
ஒரு வேண்டுகோள் வைத்தார்.
இறைவா நான் இனியும் உயிர் வாழ
விரும்பவில்லை. எனவே என்னை
உன்னோடு சேர்த்துக்கொள்
இறைவா என்று மூடிய தனது
கண்ணில் இருந்து கண்ணீர் கசிய
வேண்டிக்கொண்டு மனதில்
அழுதார். அப்போது பக்கத்தில்உள்ள
ஒரு தேநீர் கடையில் உள்ள
வானொலி இந்தப் பாடலை
ஒலிபரப்பிக்கொண்டு இருந்து !!
நெஞ்சு பொறுக்குதில்லையே !!
நெஞ்சு பொறுக்குதில்லையே !!இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து
விட்டால் !!
நெஞ்சு பொறுக்குதில்லையே !!
நெஞ்சு பொறுக்குதில்லையே !!
அன்பர்களே !! கதை இத்துடன்
நிறைவு பெறுகிறது. இனி இந்தக்
கதையைப்பொறுத்தவரையில்
நீங்கள்தான் நீதிபதிகள்.
கேள்வி :- தொழிலதிபர் கணேசன்
மனைவி கனகா " தர்ம பத்தினியா"
இல்லை " அதர்ம பத்தினியா"
தீர்ப்புக்கூறிட வேண்டிய கட்டாயக்
கடமை உங்களுக்குத்தான் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
உங்களது தீர்ப்பினை எனது மின்
அஞ்சல் (e.mail) மூலம்
தெரிவிக்கலாம்.
trbalu1954@gmail.com
மீண்டும் நன்றி!! வணக்கம் !!
Subscribe to:
Posts (Atom)