தடங்கல்கள் எத்தனை வகை ?
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ்பேசிடும்சகோதர,சகோதரிகள்
நடுவினில் உரையாடிடும் பொழுது!!
ஒரு மனிதன் வீட்டினை விட்டு
வெளியில் கிளம்பிடும் முன்
இத்தனை வகையில் தடங்கல்கள்
வந்தால் அவன் என் செய்வான்
என்பதனை விளக்கும் சங்க கால
இலக்கிய பாடல் இதோ உங்கள்
கவனத்திற்கு :-
ஆ ஈன,
மழை பொழிய,
இல்லம் வீழ ,
அகத்தடியாள் மெய் நோக ,
சாவோலை கொண்டு ஒருவன்
எதிரே வர,
சர்ப்பம் தீண்ட,
கோவேந்தர் உழுது உண்ட கடனைக்
கேட்க,
குருக்களும் தட்சணைக்கு வந்து
குறுக்கிட்டாரே.
விளக்கம்:- ஒருவன் தனது
வீட்டினைவிட்டு வெளியே கிளம்பும்
நேரம் அவன் வளர்த்து வரும் பசு,
கன்றுக்குட்டியை ஈன்றிடும்பொழுது
( ஆ ஈன )
மழை " சோ" வென்று கொட்டு
கொட்டு என கொட்டி தீர்த்துக்
கொண்டிருக்கும் பொழுது
அவனால் எப்படி வெளியே செல்ல
முடியும் (மழை பொழிய)
அவன் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதி
இடிந்து விழுந்தால் அவன் என்
செய்வான் ( இல்லம் வீழ )
அவனது இல்லத்து அரசி (மனைவி)
தலைப்பிரசவத்தில் இடுப்பு
வலியால் துடித்துத் துவண்டு
கொண்டு இருக்கும் போது,
(அகத்தடியாள் மெய் நோக)
இவனது மிக மிக நெருங்கிய
உறவுகளில் ஒருவர் மறைந்து
விட்டார் என்ற செய்தியை ஒருவன்
நேரினில் வந்து சொல்லிடும்
பொழுது ( சாவோலை கொண்டு
ஒருவன் எதிரே வர)
திடீரென்று காலில் ஏதோ ஒன்று
கடித்து விட்டது போன்றஉணர்வுவர
கீழேகுனிந்து பார்த்திடும் போதுஒரு
பாம்பு கடித்து இவனது காலில்
சுற்றிக்கிடக்கும் பொழுது (சர்ப்பம்
தீண்ட)
இவனது நஞ்சை வயலுக்கு கிஸ்தி
வரி பாக்கி உள்ளதை அரசாங்க
அலுவலர் வசூலிக்க வரும் நேரம்
(கோவேந்தர் உழுது உண்ட
கடனைக் கேட்க)
மூதாதையர்களுக்கு நினைவு நாள்
(திதி) நடத்தியஐயர்தட்சிணைகேட்டு
ஒற்றை பிராமணனாக வந்து
எதிரில் நிற்கும் பொழுது
(குருக்களும் தட்சிணைக்கு வந்து
குருக்கிட்டாரே)
ஆக இது போன்ற தடங்கல்கள்
வந்தால் எந்த ஒரு மனிதனாலும்
இத்தனையையும் தாண்டி
வெளியில் சென்று காரியம் ஆற்றிட
இயலாது என்பதனை விளக்கும்
பாடலாக இது அமைந்து உள்ளது
அன்பர்களே !!
மீண்டும் நாளை வேறு ஒரு
பதிவினில் உங்கள் அனைவரையும்
சந்திக்கிறேன். நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை TR. பாலு.
No comments:
Post a Comment