சுதந்திர தினத்தன்று மனிதனின் சுதந்திரத்தினை அரசாங்கமே பறித்தது நியாயமா ? நீதி தேவை !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !!
தமிழ்பேசிடும்சகோதர,சகோதரிகள்
நடுவினில் உரையாடிடும் பொழுது!!
உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என்
அன்புக்கும் பாசத்திற்கும் உரியதமிழ்
கூறும் நல்லுலகம் பெற்றெடுத்த
உடன் பிறப்புகள் அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அதனுடன் இணைந்த வணக்கமும்
உரித்தாகுக!!.
நேற்றைய தினம் நமது இந்தியத்
திருநாட்டின் 67 வது சுதந்திர தினம்
அங்கிங்கு எனாதபடி தமிழ்நாட்டின்
ஒவ்வொரு மூலை முடுக்கு எங்கும்
" ஊக்கமின்றி ", " உற்சாகம் " இன்றி
கொண்டாடப்பட்டது.காரணம் என்ன
என்றால் அன்றைய தினம்
மனிதனுக்கு சுதந்திரம் நிறைந்த
எண்ணங்களையும் மயக்கும்
சிந்தனைகளையும் அள்ளி வழங்கி
அவனை, அந்த மனிதனை ஆனந்தக்
கடலினுள் ஆழ்த்திடும் வல்லமை
பெற்ற ஒரே சக்தியின் வடிவமான
தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற
THE ONE AND ONLY JOYFUL COMPANY
" டாஸ்மாக் " என்னும் கடையை
இழுத்துப்பூட்டியதன் விளைவு கள்ள
மார்க்கெட் வணிகர்கள் காட்டினில்
வசூல் வேட்டை.இதில்யார் யாருக்கு
எவ்வளவு பங்கோ ? அதை அந்த மது
அரக்கன் ஒருவனே அறிவான்.
இந்தக் கொடுமை ஆண்டுதோறும்
நடை பெறுகின்ற அநியாயம்.
அரசாங்கமே மதுக் கடையை
திறப்பார்களாம். அதனை அவர்களே
சுதந்திரதினத்தன்று இழுத்து
மூடுவார்களாம். நான் ஏறத்தாழ 5
ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய
நாட்டிலும் 3 ஆண்டுகளுக்குமேலாக
சிங்கப்பூரிலும் வாழ்ந்துவந்தவன்
என்ற முறையில் ஒரு கருத்தை
இங்கே பதிவு செய்திடக் கடமைப்
பட்டுள்ளேன். அங்கே மதுக்கடைகள்
எல்லாம் முழுக்க முழுக்க
தனியார்துறையில் மட்டுமே
நிர்வகிக்கப் படுகிறது. அதனால்
பட்டியல் விலைக்கு மேலாக ஒரு
நயா பைசா கூட அதிகமாகநம்மிடம்
வாங்கிடும் வழக்கம்அங்கேஇல்லை.
அது மட்டும் அல்ல.
வாடிக்கையாளர்களை அன்போடும்
கனிந்த முகத்தோடும் வரவேற்று
வணிகம் செய்திடும் அழகு நிறைந்த
மங்கையர்களின் அணுகுமுறை.
இவை எதுவுமே இல்லாத மனித
பண்பாடு என்பது கிஞ்சித்தும்
இல்லாத நடைமுறை, முகத்தை
தூக்கிக்கொண்டு வணிகம் செய்யும்
விற்பனையாளர்கள்,அநியாயமீட்டர்
வட்டி வசூல் செய்திடும்முறைபோல
கூடுதல் விலை, இது போன்ற
அத்தனை அநியாயங்களையும்
பொறுத்துக்கொண்டு உணர்ச்சி
இல்லாத பிண்டங்களாக அவன்
தரும் சரக்குகளை வாங்கிச் சென்று
குடித்து மகிழ்ந்திடும்
நிலைதனைக்கூட அன்று, அந்த
சுதந்திரதினத்தன்று, பறித்தது
நியாயமா ? இதற்கு ஒரு நீதி
விசாரணை தேவை என்பதே எனது
கருத்து.நீங்க என்ன நினைக்கிறீங்க ?
சொல்லுங்க உங்க பதிலை !! படிக்க
காத்துக் கொண்டு இருக்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment