Friday, 23 August 2013

உண்மையான உறவு எது ? போலித்தனமான உறவு எது ?



உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!



தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!



ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!



தமிழ்பேசும்சகோதர,சகோதரிகள் 



நடுவினில் உரையாடிடும் போது !! 









" உண்மையானஉறவு "என்பது எது?



உலகெங்கிலும் வாழ்ந்து வரும் 




என் அன்புக்கும்பாசத்துக்கும் உரிய 




இன்பத் தமிழ் உடன்பிறப்புகளே !! 




உங்கள் அனைவருக்கும் எனது 




இனிய காலை வணக்கம்.




இறைவனால் படைக்கப்பட்ட இந்த 




பூமியில் எத்தனை எத்தனையோ 




ஜீவ ராசிகள் பிறக்கின்றன , 




வாழ்கின்றன,மடிகின்றன. ஆனால் 




அவை அத்தனையையும் விட 




மனிதப் பிறவியே உயர்வான 




பிறவி  என்று கருதப்படுகிறது. 




எதனால்? சற்று சிந்திப்போமா 




நேயர்களே. இந்த உயர்வுக்கு 




காரணம் மனிதபிறவி ஒன்றில் 




மட்டுமே உறவுகள் என்பது பின்னி 




பிணைந்து இருக்கின்றது நம் 




மனித பிறப்பில் மட்டுமே . 



அப்பா,அம்மா,அக்கா,அண்ணன்,



தம்பி,தங்கை,மாமன்,மச்சான்,சகலர், 


இதுபோல இன்னும் எத்தனையோ 



உறவுகள் நம்மிடம்  மட்டுமே 



இருப்பதனால் அந்த உயர்வுநமக்கு 



கிடைத்துள்ளது. அப்படி பெற்ற 



அந்த உறவுகளில் நமக்கு 



உண்மையான உறவு எது என்பதே 



இன்றைய கேள்வி? இதற்கு 



சங்ககால இலக்கியங்கள் 



பல்வேறு பாடல்கள் மூலம் நமக்கு 



உண்மைகளை வெளிச்சம் போட்டு 



காட்டுகிறது.. அந்த வகையில் ஒரு 



சங்க கால பாடலை உங்கள் முன் 



சமர்ப்பிக்கிறேன்.




அற்ற குளத்துஅருநீர் பறவைபோல



உற்றுளித்தீர்வார் உறவு உறவல்ல. 



அக்குளத்தில்நெட்டியும் ஆம்பலும் 




நெய்தலும் போலவே



ஒட்டி உறவோர் உறவே உறவு... ... ..




விளக்கம் :-



அதாவது குளம் நிறைய நீர் 



இருக்கும் போது அதில் ஏகப்பட்ட 



நீர்வாழ் உயிரினங்களான மீன் 



நண்டு என பல்வேறு இனங்கள் 



வாழ்ந்திடும். அப்போது எல்லா  


பறவை இனங்களும் 



அக்குளத்தின் அருகில் உள்ள 



மரங்களில் கூடுகட்டி 



வாழ்ந்துவரும் எதற்காக என்றால்  



தத்தமது உணவுதேவைகள் 



அக்குளத்தில்கிடைத்துவிடுவதால்..




ஆனால். அதேசமயம்,விதிவசத்தால் 



அந்த குளம் வற்றி நீர் அனைத்தும் 





வறண்டு உயிரினங்களான மீன் 





நண்டு ஏதும் இல்லை எனில் 




பறவைகூட்டங்கள் நீர்நிறைந்த 




வேறு குளம் தேடி சென்றுவிடும்.




ஆனால் அதே குளத்தில்,வாழும் 




தாவர இனங்களான  நெட்டி 




கொடிகள், தாமரைக்  கொடிகள் 





போன்றவைகள் குளத்தில் நீர் 




எவ்வளவு உயரம் உள்ளதோ 





அப்போதும் சரி நீர் மட்டம் 





குறையக்குறைய அந்த செடிகளும் 





கூடவே இருந்து நீர் முற்றிலும் 





வற்றிய நிலைவரினும் 





தரையோடுதரையாக மண்ணோடு 




மண்ணாகி மக்கி மறைந்துவிடும். 




அதுபோல கஷ்டம் வந்தாலும் 




நம்முடன் கூட இருந்து அந்த 




கஷ்டத்தில்பங்குஎடுத்து 



இறுதிவரை நம்முடன் கூட  



இருக்கும் உறவுகள் மட்டுமே 



உண்மையான உறவு என நம் 



முன்னோர்கூறிச்சென்றுள்ளார்கள். 



நாமும் அதைகடைபிடித்து நம் 



வாழ்வில் உண்மை உறவுகளை 



அறிந்து செயல்படுவோம். 



நன்றி!!வணக்கம்!!


அன்புடன் மதுரை T R.பாலு.


மீண்டும் சந்திப்போம்.


பிறகு சிந்திப்போம்


 


            

No comments:

Post a Comment