" மூடப்பழக்கங்கள் "--சற்றே மாற்றி யோசித்துப் பார்ப்போமா நேயர்களே !!
உடல் மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ்பேசிடும்சகோதர சகோதரிகள்
நடுவினில் உரையாடும்போது !!
மூடப்பழக்கங்கள் /சற்றே மாற்றி
யோசிப்போமா?
உலகெங்கிலும் வாழ்ந்து வரும்
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்கள்
அனைவருக்கும் கரம் குவிந்த
சிரம் தாழ்ந்த வணக்கம் !!.
அறிஞர்
சாக்ரடீஸ் மக்களிடம்
உரையாற்றும் போது எப்போதும்
ஒரு கருத்தை வலியுறுத்தியே
பேசுவார்கள். அது என்னவென்றால்
“அவர்சொன்னார், இவர்சொன்னர்,
என்று அறிவிழந்து தடுமாற்றம்
அடையாமல், எவர்சொன்ன
சொல்லானாலும்,அதனைஉனக்கே
இயல்பான பகுத்தறிவால் நீ
சிந்தித்துப்பார்.
அப்படி சிந்தித்ததால்தான், சிலை
வடிக்கும் இந்த சிற்பி, சிந்தனை
சிற்பியாக மாறினான்” என்று
குறிப்பிடுவார். இந்த வசனம்
" அன்னையின் ஆணை " என்ற
திரைப்படத்தில் மறைந்த
முன்னாள் மத்திய தொழில்மற்றும்
வர்த்தகத் துறை அமைச்சராக
கடமை ஆற்றியவரும் தமிழ் இனத்
தலைவர் திருக்குவளை
முத்துவேலர் கருணாநிதி
அவர்களின் அன்புக்கும்
பாசத்திற்கும் உரிய மருமகன்
முரசொலி மாறனின் கை
வண்ணத்தில் எழுதப்பட்டது.
எத்தனைபேர்
அதை கேட்டு
தெளிவுபெற்றனர்?அப்படி அவர்கள்
தெளிவு பெற்றனர் என்றால் ஏன்
இன்றும் சில மூடப்பழக்க
வழக்கங்கள் நம்மை
விட்டுச்
செல்ல மறுக்கிறது. அதைப் பற்றி
இப்போது
நாம்சிந்தித்து இனிமேல்
அதுபோல் நிகழாமல் சற்று மாற்றி
யோசித்துப்பார்ப்போமா அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
1)நமது
தெருவின் வழியாக ஒரு
இறந்த மனிதரது சடலத்தை தூக்கி
சென்ற பிறகு நம் வீட்டு வாசலில்
தண்ணீர்
தெளிப்பதை பார்கிறோம்
இது எதற்காக?
புரியவில்லை.
2) அதுபோல
நெருக்குதலான
பேருந்து பயணத்தில் தெரியாமல்
நமது கால் சக பயணிமேல் பட்டு
விட்டால்
உடனே தொட்டு
கும்பிடுவதுஎதற்காக புரியவில்லை
3) பொருள்கள்
வாங்கும்போது
கடைக்காரர் புத்தம்புதிய ரூபாய்
நோட்டு தருகிறார் என்று
வைத்துகொள்வோம்.மனசாரஅதை
மற்றவருக்கு தருவதும் கிடையாது
(2௦ம் தேதிவரை). அப்புறம்
நெருக்கடி வரும்போது
கொடுத்துதானே விடுகிறோம்.
இதுபோல இன்னும் எத்தனையோ!
4) செவ்வாய்கிழமை மற்றும்
வெள்ளிக்கிழமை ஆகிய இரு
தினங்களிலும் நாம் யாருக்கும்
பணம் தருவது இல்லை. ஆனால்
யாராவது அசந்து
இருந்தால் நாம்
வாங்கிகொள்வது. இதுவும்
எதற்காக புரியவில்லை.
5) ஒரு நல்ல காரியத்திற்காக
வீட்டை விட்டு
வெளியே
கிளம்புகிறோம் என்று
வைத்துகொள்வோம் அப்போது
பூனை குறுக்கே போனால் மனம்
வேதனைப்படுவது.சகுனத் தடை
என நினைப்பதும் எதற்காக
புரியவில்லை.
6) அதேபோல ஒற்றை
அந்தணர் வந்தால் நல்ல சகுனம்
அல்ல என்று எண்ணுவது,தலை
விரித்துப் போட்டு பெண் ஒருத்தி
வந்தால் நல்ல சகுனம் அல்ல
என்று எண்ணுவதும் எதற்காக
புரியவில்லை.
7) அதேபோல ஒரு கணவனை
இழந்த பெண் நாம் வெளியே
கிளம்பும்போது எதிரே வந்தால்
நல்ல சகுனம் இல்லை என
எண்ணுவது எதற்காக
புரியவில்லை. பாவம்! அவள்என்ன
பாவம்
செய்தனளோ கணவனை
இழந்து மனக் கஷ்டத்துடன்
வாழ்ந்து வருகிறாள் அவள்
வருவதை சகுனம்
பார்ப்பது ஒரு
புரியாத புதிராக எனக்குப்படுகிறது.
8) நாம் அனைவரும்
குடும்பத்துடன் வெளி ஊருக்கு
வாகனத்தில் செல்கிறோம் என்று
வைத்துகொள்வோம்.அப்போது
நான்கு டயர்களுக்கும் அடியில்
எலுமிச்சம்பழத்தை வைத்து
நசுக்கிவிட்டு பிறகு வாகனத்தினை
எடுப்பது எதற்காக புரிய
வில்லை.
9) நெருக்கடி மிகுந்த நகரப்
பேருந்து ஒன்றினில்
பலர்
அவரவர்களது மனைவியுடன்
பயணிக்கும்போது வேறு யாரும்
அவளை (அவரது மனைவியை)
இடித்துவிடவோ/அல்லது தொட்டு
விடவோகூடாது என்பதில் மிகுந்த
அக்கறைகாட்டிடும்அதேநபர் அவர்
மட்டும் தனியாக நகரப் பேருந்தில்
பயணிக்கும்போது எங்காவது அது
போன்ற ஈனத்தனமான சுகங்கள்
தமக்கு கிடைத்திடாதா என்று
ஏங்குபவர்களை
பார்க்கும் போது
ஏன் இந்த எண்ணம் இது எதற்காக
என்பதும் புரியவில்லை.
இதுபோல
நமதுவாழ்வில்எத்தனை
எத்தனையோ நிகழ்வுகள்
புரியாமல்தான் நாம் அனைவரும்
வாழ்ந்து கொண்டு
இருக்கிறோம்.
அவைகளை நாம் சீர்தூக்கி
ஆராய்ந்து ஆறாவது அறிவான
பகுத்தறிவின் துணைகொண்டு
தூய மனிதர்களாக
வாழ்ந்திட
முயற்சிகள் மேற்கொள்வோம் என
உறுதி எடுத்திடுவோம்.
நாம் நம்மை சற்றே மாற்றி
யோசித்து பார்த்து பழக்க
வழக்கங்களை சரி செய்து
கொண்டு இனிமேலாவது
சீர்திருந்துவோம்.மற்றவர்களையும்
சீர்திருத்துவோம். பகுத்தறிவுப்
பகலவன்தந்தை பெரியார்வழியில்
நடந்து மூடப் பழக்கவழக்கங்களை
ஒழித்திடஉறுதிமேற்கொள்வோமாக
நன்றி !!.வணக்கம்!!.
அன்புடன் மதுரை T.R.பாலு
மீண்டும் நாளை சந்திப்போமா?
எனது அன்புத் தமிழ் உடன்
பிறப்புகளே !!
No comments:
Post a Comment