இளைய தளபதி நடித்த " தலைவா" படம் வெளியீட்டிற்கு தடை வர உண்மையான காரணம் இதுவா ? !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக !!மொழி வென்றாக !!
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும்
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
சமீபகாலமாக தமிழகத்தில் ஒரு
மாபெரும் தொற்றுநோய் தமிழ்த்
திரைப்பட உலகை மிகக்
கடுமையாக சுனாமி புயலைவிட
மோசமாகத் தாக்கி அழித்திடத்
துவங்கி இருக்கிறது என்று
சொன்னால் அது மிகையான சொல்
அல்ல. அதுதான் அந்த தொற்று
நோய்க்கு பெயர்என்ன தெரியுமா
அன்பு நேயர்களே !!
பல கோடிகள் செலவு செய்து
(முக்கால் பங்கிற்கு மேலாக
வட்டிக்கு கடன் வாங்கி ) பல
மாதங்கள் தவங்கிடந்து எத்தனை
பேர்களது கை பிடித்து கால் பிடித்து
உண்ணாமல் உறங்காமல் பட்டினி
கிடந்தது பித்துப்பிடித்தவன் போல
அங்கும் இங்கும் அலைந்து படத்தை
தயாரித்து ஒரு வழியாக முடித்து
பின்னணி இசை சேர்ப்பு பணியும்
முடித்து படம் பிரிண்ட்
எடுக்கப்போகும் நிலையில் படம்
வெளியாகும் திரை அரங்குகளுக்கு
வெடி குண்டு மிரட்டல் வந்து
உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள
அத்தனை திரை அரங்குகளுக்கும்
போதிய காவல்துறை பாதுகாப்பு
தந்திட அரசாங்கத்திடம்
தேவையான காவலர்கள் இல்லாத
காரணத்தினால் படத்தை
வெளியிடத்தடை விதிப்பது என்பது
சர்வசாதாரணமாக உள்ள
நடைமுறை போலவே
வந்துவிட்டது.இந்த நடைமுறை
எப்போது துவங்கியது என்று
சொன்னால் உலக நாயகன்
கமல்ஹாசன் தயாரித்து நடித்து
வெளிவந்த " விஸ்வரூபம் "
படத்தில் இருந்து தடை என்பது வரத்
துவங்கி விட்டது.
இந்த தடைஎன்னும் தாய் சமீபத்தில்
தனது இரண்டாவது
குழந்தையையும் பெற்று விட்டாள்.
அந்த இரண்டாவதுதான் இளைய
தளபதி நடித்து வெளிவந்துள்ள
" தலைவா" படம். சரி நான்
கேட்கிறேன் மக்களை
காப்பாற்றுவது பாதுகாப்பது என்பது
தேர்ந்து எடுக்கப்படும் அரசின்
கடமை இல்லையா. இந்த நேரம்
பார்த்துத்தானா இந்தப் பாடல்
வானொலியில் நான் கேட்க
வேண்டும். பாடல் இதோ:-
உன்னைச்சொல்லி
குற்றமில்லை.என்னைச் சொல்லி
குற்றமில்லை.காலம் செய்த
கோலமடி !!கடவுள் செய்தகுற்றமடி!!
பொதுவாக ஊரில் என்ன
பேசிக்கொள்கிறார்கள் என்றால்
சமீபத்தில் சில சட்டமன்ற
உறுப்பினர்கள் (நடிகர் கட்சியில்
இருந்து தேர்ந்து
எடுக்கப்பட்டவர்கள்) ஆளும்
அரசுக்கு ஆதரவு நிலை எடுத்தனர்.
அவர்களில் முதல் இருவரில்
ஒருவர் அவர் தற்போது ஒரு படம்
தயாரித்து வெளியிட்டு உள்ளார்.
ஏங்க நான் உங்கட்ட தானே
பேசிகிட்டுஇருக்கேன்நீங்கபாட்டுக்கு
வானத்தைபார்கிறீங்க எதுக்குன்னா
பட்டம் பறக்குதான்னு அப்புறம்
ரோட்டை பார்க்கிறீங்க யானை
வருதா என. ஆக அவர் தயாரித்து
கடந்த ஜூலை 26 அன்று வெளிவந்த
அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள
திரை அரங்குகளில்தான் தலைவா
படமும் திரைக்கு வர இருந்தது.இந்த
நிலையில் தலைவா படத்தை சற்று
தாமதித்து வெளிவர அரசு ஆவன
செய்தால் தமது படம் நல்ல
கணிசமான வசூல் பெற்றுக்
கொள்ளும் என அவர் வேண்டி
விரும்பி கேட்டுகொண்டதனால்
புதுதடை விதிக்கப்பட்டதாக திரை
துறையினர் பேசிக்கொள்கிறார்கள்.
எது உண்மையோ. இறைவன்
ஒருவனே அறிவான். சர்வம்
பூபாலன் மாயம். சகலமும் ராயப்பன்
வசம். கமல் நடித்த மைக்கேல்மதன
காம ராஜன் படம் இன்று நான்
பார்த்தேன். எனக்கு தூக்கம்
வருகிறது. இனிய இரவு
வணக்கங்களோடு விடை பெறுவது
உங்கள் அன்பன் மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment