பேரறிஞர் அண்ணாவின் பொன் மொழிகள் !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கில மொழி கலப்புஏதும்இன்றி!!
இது ஒவ்வொரு தமிழனின் கடமை!!
தமிழர்களோடு உரையாடும் போது !!
"பேரறிஞரின் பொன் மொழிகள்"
உலகெங்கிலும் வாழ்ந்து வரும்
எனது உயிரினும் மேலாக நான்
எப்போதும் போற்றி வணங்கி வரும்
அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த காலை வணக்கம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
நிறுவனர் தலைவர் மறைந்த
பேரறிஞர் அண்ணா எத்தனை
எத்தனையோ தத்துவ முத்துக்கள்
அவர் உதிர்த்திருந்தாலும் கூட
இப்போது கீழே குறிப்பிட்டுள்ள
பொன் மொழி உள்ளபடியே எனது
கண்ணை மட்டுமல்ல கருத்தையும்
கவர்ந்தது என்று சொன்னால் அது
மிகையான சொல் அல்ல. அறிஞர்
அண்ணா சொன்ன இந்தக் கருத்தை
மையமாக வைத்துத்தான்
கலைவாணர் NS. கிருஷ்ணன் தனது
திரைப்படத்தில் ஒரு காட்சியையும்
கூட அரங்கேற்றி இருப்பார்.
முதலில் அண்ணா சொன்ன
பொன்மொழி, அதன் பிறகு
கலைவாணர் திரைப்படகாட்சி
இந்த இரண்டையும் நேயர்களின்
சிந்தனைக்கு விருந்தாக படைத்து
மகிழ்கிறேன்
அண்ணாவின் பொன் மொழி !!:-
தம்பி !! அடுத்தவனைக் காட்டி நீ
உனது ஆள்காட்டி விரல் நீட்டி
குற்றம் சாட்டுகின்றபோது உன்னை
நோக்கி ஏனைய மூன்று விரல்கள்
நீட்டிக் கொண்டு இருக்கிறது தம்பி !!
உன்னை சரிசெய்து விட்டு, உன்
குற்றம் குறைகளை களைந்து நீக்கி
விட்டு அதன் பிறகு அடுத்தவனை நீ
குற்றம் சுமத்து !! அப்போதுதான்
உனக்கு அந்தத் தகுதி கிடைக்கும் !!
நான் சொல்வதை கவனமாக
கேட்பாயா என் தங்க கம்பி !!
எவ்வளவு ஆணித்தரமான எந்தக்
காலத்திற்கும் பொருந்துகின்ற
அண்ணாவின் தத்துவ முத்துக்கள்
ஏராளாம் !! ஏராளம் !! அவைகளை
நாம் அடுத்து அடுத்து வருகின்ற
பதிவுகளில் பார்த்து படித்து
மகிழ்வோம்.
அடுத்தது கலைவாணர்
N.S.கிருஷ்ணன் திரைப்பட காட்சி:-
(தெருவில் N.S.K. நடந்து வந்து
கொண்டு இருப்பார். அப்போது அவர்
வசிக்கும் தெருவில் உள்ள ஒருவர்
அவர் பெயர் நாரதர். இந்த இருவரின்
நடுவினில் நடைபெறுகின்ற
உரையாடலில் பேரறிஞர் அண்ணா ,
மேலே சொன்ன பொன்மொழியை
கலைவாணர் N.S.K.எவ்வளவு
நயமாக,நாகரீகமாக மக்களின்
கவனத்திற்கு கொண்டு சென்று
உள்ளார் என்பதை கவனியுங்கள்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !)
நாரதர் :- அண்ணே ! அண்ணே !!
கலைவாணர் :- என்னப்பா நாரதா !!
என்ன செய்தி !! விசேஷம் உண்டோ!
நார:- உங்களுக்கு விசயமே
தெரியாதா ?
கலைவா:- சொல்லுப்பா.
சொன்னாத்தானே தெரியும்.
நார:- உங்க வீட்டு எதிர்வரிசையில்
கடைசி வீட்டிலே இருக்கானே
கோவிந்தன் அவனைப் பத்திதான்
சொல்ல வந்தேன். அவன்
பொண்டாட்டியை அவங்க ஆத்தா
வீட்டிக்கு விரட்டி அடிச்சுட்டு வேற
எவளோ ஓரு பொம்பளையை
கூட்டிக்கொண்டு வச்சிருக்கானாம்
கலைவா:- உம். அப்படியா சேதி.
நார:- ஆமாண்ணே. அது மட்டும்
இல்லை ராத்திரி 12 மணிக்கு
மேலேயும் விளக்கு எரிஞ்ச
வண்ணம் இருக்கு. ஊரைச்சுத்தி
ஒரே கடனாம்.
கலைவா:- உம்.. பலே..பலே.. மேலே
நார:- அனேகமா அவன் கதை
முடிஞ்சா மாதிரித்தான் அப்படின்னு
ஊர்ல பேசிக்கிறாங்க அண்ணே !!
கலைவா:- இது ஏன்னா தம்பி
ரொம்ப அசிங்கமா இருக்கு.
நார:- இது என்னாண்ணே ! இதுக்கு
மேலே இருக்கு. உக்கும்..
கலைவா:- அது சரி தம்பி உங்க
சட்டை பையிலே என்ன இருக்கு ?
நார:- என்ன பெருசா இருக்கப்
போவுது. ரெண்டு மூணு ஊர்
கடுதாசிக,கொஞ்சம் ரூபா,கொஞ்சம்
சில்லறை அம்புட்டுத்தான்.
கலைவா:- உம். அப்படி எல்லாம்
சொல்லப் படாது. இந்திந்த ஊர்லே
இருந்து வந்த கடுதாசுக,
இவ்வளவுக்கு ரூபா, இவ்வளவு
சில்லறை அப்படி கரெக்டா
சொல்லணும் இல்ல தம்பி.என்ன
நான் சொல்றது ?
நார:- அதை எப்படி அண்ணே
உடனே
சொல்ல முடியும். பாத்துத்தானே
அண்ணே சொல்ல முடியும்.
கலைவா:- ஏன் தம்பி உன் பையிலே
உள்ளதையே உன்னாலே சொல்ல
முடியலை. பாத்துத்தான் சொல்ல
முடியும்ங்ற. உனக்கு எதுக்கு
ஊர்லே
இருக்கவனைப் பத்தின கவலை?
உன்னையை முதல்லே சரியாப்
பாத்துக்க தம்பி. அதுக்கு அப்புறம்
ஊருலே உள்ளவனைப் பத்தி
கவலைப்படலாம். அட என்ன தம்பி
நான் சொல்றது.சரிதானே ?
அன்புத் தமிழ் நெஞ்சங்களே. அந்தக்
காலத்து திரைப்படங்கள் நமக்கு
வாழ்க்கைக்கு தேவையான
எவ்வளவு விஷயங்களை வாரி
வாரி வழங்கியுள்ளது. உம்.. இனிமே
எங்க அந்தக் காலம் எல்லாம் வரப்
போகிறது. கலி காலத்தின் உச்சக்
கட்டம் நடந்து கொண்டு இருக்கும்
போது இப்படித்தான் இருக்குமாம்
சித்தப்பன் கிட்டேஏ பீடிக்கு நெருப்பு
கேட்பார்களாம். இது எப்படி இருக்கு?
மீண்டும் அடுத்த கட்டுரையில்
உங்கள் அனைவரையும்
சந்திக்கிறேன். அதுவரை உங்கள்
அனைவரிடமும் அன்பு வணக்கம்
கூறி விடை பெறுவது உங்கள்
அன்புத் தம்பி ! மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment