கடன் கொடுத்தவன் கடன் வாங்கியவன் நிலைமை !!
இராமாயணம்!!ஒரு சிறுவிளக்கம் !!
அனைவருக்கும் வணக்கம்.
நமது பேச்சு
வழக்கில் ஒன்று
சொல்வது உண்டு.என்னன்னு
கேட்டிங்கனா, கடன்கொண்டான்
நெஞ்சம்போல்
கலங்கினான்
இலங்கை வேந்தன் அப்டின்னு.இது
நடந்ததா சொல்றது திரேதாயுகம்
என
சொல்றாங்க.பலகோடி
வருஷங்களுக்கு முன்னாடி. அப்ப
கடன் வாங்கினா நெஞ்சம்
கலங்கிருக்கு இப்ப அப்படி
இல்ல.கடனுக்கு ஒரு விசேஷமான
குணம் உண்டுங்க.அது என்ன
அப்படின்னு கேட்டிங்கன்னா கடன்
வாங்கினவனும் கடன்
கொடுத்தவனை கடன்காரன் என
சொல்வான்.கடன் கொடுத்தவனும்
கடன் வாங்கினவனை கடன்காரன்
என சொல்வான். இப்ப விஷயம்
அது இல்ல. ராம காவியத்தில்
போர் களத்தில் இராமனின் அம்பு
இராவணின் மேல் பாய்கின்ற
போது கம்பர் எழுதிய பாடலில்
கடைசி வரி
மட்டும் நாம்
பயன்படுத்துகிறோம் என்பதுதான்.
பாடலை பாருங்க:-
விடங்கொண்ட மீனைப்போலும்
வெந்தணல் மேழுகுபோலும்
படம்கொண்ட பாம்பின்வாய்
பற்றிய தேரை போலும்
திடங்கொண்டராமபாணம்சீர்களத்
துற்றபோதுகடன்கொண்டன்
நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கைவேந்தன். இதுதாங்க பாட்டு.எப்படிஉதாரணம்
தர்றார்
பாருங்க கம்பர்.
விஷம் சாப்பிட்ட மீன் எப்படி
துடிக்கும்,நல்ல வெந்தணல் (கங்கு-
நெருப்பு)மேல்வைத்த மெழுகு
எப்படி உருகுமோ
அதுபோல,படம்
எடுத்த பாம்பின்வாய்க்குள் புகுந்த
தவளை எப்படி உயிருக்கு
போராடும்
அதுபோல,
கடன்வாங்கினவன்
நெஞ்சம்கலங்குமோ
(அந்தக்காலத்தில்) அதுபோல
இராமனின் அம்பு
போர்களத்தில்
இலங்கைவேந்தன் மேல் பாயும்
போது இராவணன் கலங்கினான்
என்பது பாடல். ஆனால்
இன்றையதினம் நிலைமை அப்படி
அல்ல. கடன் வாங்குகிற வரை
மட்டுமே அண்ணே அப்பறம் போடு
அவன் வாயில் மண்ணை . இது
தாங்க நிலைமை புரிந்துகொண்டு .
வாழவேண்டுகிறேன்.
நன்றி.மீண்டும் அடுத்த
விளக்கத்தில் சந்திப்போம்
சிந்திப்போம் அதுவரை அன்பு
வணக்கம் கூறி விடை பெறுவது
உங்கள் அன்பிற்கு உரிய மதுரை
T.R.பாலு.
No comments:
Post a Comment