Friday, 16 August 2013

கடன் வாங்கியவனின் நிலை ( கம்பனின் இராமாயண காலத்தினில்-இப்போது அல்ல !!)


உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!



       " கம்பஇராமாயணம் "  


ஒரு சிறு விளக்கம்.
    


பொதுவாக நாம் பேசும்போது 



வழக்கமாக உபயோகப்படுத்தும் 



வார்த்தைகளில் ஒன்று 



“ கடன் கொண்டான் நெஞ்சம் 



போல் கலங்கினான் இலங்கை 



வேந்தன் “. என்று. இதில் என்ன  



ஒரு மிக முக்கியமான செய்தி 



என்றால் இந்த வரிக்கு 



மேல் மூன்று வரிகள் உள்ளது.


அந்த மூன்று வரிகள் பொதுவாக 



நாம் அனைவரும் அறிந்திருக்க 



நியாயம் இல்லை. அவை 



யாதெனின் :- 


விடங்கொண்ட மீனைப்போலும்


வெந்தணல்மெழுகுபோலும்

படம்கொண்ட பாம்பின் 


வாய்பற்றிய தேரைபோலும்

திடம்கொண்ட ராமபாணம் 


சீர்களத்துற்றபோது !

கடன்கொண்டான் 


நெஞ்சம்போல்கலங்கினான் 


இலங்கை வேந்தன்!!.

இது போல இன்னும் பற்பல 


தெளிவுரைகள் அடுத்தடுத்து வர 


உள்ளது. அனைவரும் 


அறிந்துகொண்டு தமிழ்சுவையை 


இரசிக்க வேண்டும் என வேண்டி 


விரும்பி கேட்டுக்கொண்டு விடை 


பெறுகிறேன் . 



நன்றி!! வணக்கம்!!. 



அன்புடன், மதுரை T.R.பாலு.            

        


No comments:

Post a Comment