Saturday, 24 August 2013

மத்திய தணிக்கைக் குழுவின் பார்வைகள் -- அன்றும் இன்றும் (மறு பதிப்பு)


உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 

ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !! 

தமிழ் மொழி பேசுவோர் நடுவில் 

உரை நிகழ்த்திடும் போது !!


""தணிக்கை குழு நடவடிக்கைகள்""   

  அன்றும்-----இன்றும். (மறுபதிப்பு)   


உலகெங்கிலும் வாழ்ந்து வரும் 


எனது அன்புத் தமிழ் உடன் 


பிறப்புகளே !! அனைவருக்கும் என் 


இனிய காலை வணக்கம் !! 

ஒரு திரைப்படம், படப்பிடிப்பு 


முடித்து அதன் பின்னர் மக்கள் 


பார்வைக்கு அந்த திரைப்படம் 


வெளிவர வேண்டுமெனில் 


தணிக்கை குழு என்று 


சொல்லப்படும் அமைப்பின் 


பார்வைக்கு அந்தப்படம்திரையிட்டு 


காண்பிக்கப்பட வேண்டும். அந்த 


குழுவிற்கு தலைவர் மற்றும் 



உறுப்பினர்கள் என்று பலர் 


இருப்பார்கள். படத்தின் முழு 


வசனம் மற்றும்பாடல்கள் அந்த 



குழுவிற்கு எழுத்து வடிவத்தில் 


சமர்பிக்கப்பட வேண்டும். இவை 


இரண்டையும் தணிக்கை குழு 


அங்குலம் அங்குலமாக அலசி 


ஆராய்ந்து படித்து பார்த்து பின் 


அந்த படத்தின் வசனத்திலும் சரி 


பாடல்களிலும் சரி எந்த 


விதமான சமூகத்திற்கு தீங்கு 


விளைவிக்கும் அல்லதுமோசமான 


பால் உணர்வுகளை தூண்டிவிடும் 


வகையில் காட்சிகள்/ பாடல்கள்  


ஏதும்இடம்பெறவில்லைஎன்பதை 


அந்த குழுவினர் அனைவரும் 


எற்றுகொண்டு உறுதி செய்து 


அதன் பின்பு மட்டுமே அந்த 


திரைப்படத்திற்கு தணிக்கை 


சான்றிதழ் வழங்கப்பட்டு அந்த 


திரைப்படம் மக்கள் பார்வைக்கு 


திரை அரங்குகளில் வெளிவரும் 


என்பது அந்தநாள் கணக்கு. 


அந்தக்கால தணிக்கை 


குழுவினரால் பற்பல 


திரைப்படங்களில் பாடல்களில் 


என்ன என்ன  மாற்றங்கள் 


செய்யப்பட்டது என்பதை 


நாம் காணலாம்.ஏன்மாற்றம்எனில் 


பாலுணர்வுகளை தூண்டுகிறது 


என்பதால் .




" படகோட்டி " என்ற 


திரைப்படத்தில்  மறைந்த 



புரட்சி நடிகர்  M.G.R. & சரோஜா 



தேவி  நடித்து இருவரும்பாடுவது 



போன்று வாயசைக்கும்   பாடலில் 



(பின்னணிகுரல்T.M.சவுந்திரராஜன்& 



P.சுசீலா)இருவரும்பாடிய பாடலில் 



பாலுணர்வு தூண்டுவதாக உள்ளது 



என்று சொல்லி அந்தப் பாடல் 



அப்படியேவெளிவர




தணிக்கைக்குழு மறுத்துவிட்டது. 




பாடல் இதுதான்:-



தொட்டால் பூ மலரும். 


தொடாமல் நான் மலர்ந்தேன்.


சுட்டால் பொன் சிவக்கும்.


சுடாமல் கண் சிவந்தேன்.           


கண்கள் படாமல் கைகள் 


தொடாமல் காதல் வருவதில்லை


"அருகில் வராமல் அள்ளித்தராமல் 


ஆசை விடுவதில்லை " .


(இந்தவரிகள்  தணிக்கைக்குழுவின்  

ஆட்சேபணைக்கு உள்ளானது)


பாலுணர்வுதூண்டுவதாகஉள்ளது


என்பதால்  அதன்பின் கவிஞர் 


வாலி இந்தவரிதனை மாற்றி 


எழுதியபின்பாடலில்இணைக்கப்


பட்டது. 


மாற்றம் செய்த வரிகள் :-


நேரில் வராமல் நெஞ்சை தராமல் 


ஆசைவிடுவதில்லை (அருகில்


வராமல் அள்ளித் தராமல் ஆசை 


விடுவதில்லை என்பதற்கு பதில்)


என மாற்றம் செய்யப்பட்டது. அது 


போலவே 


" என் அண்ணன் " என்ற 


திரைப்படத்தில் :-


நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு  



ஓடு ராஜா-நேரம் வரும் 



காத்திருந்து பாடு ராஜா  


என்ற பாடலில் இந்த வரிகள் 


ஆட்சேபணைக்கு உள்ளானது 



" உண்டு உண்டு என்று நம்பி


காலை எடு


இங்குஉன்னைவிட்டால்பூமி


ஏதுகவலை விடு


ரெண்டிலொன்று பார்பதற்கு 


தோளை நிமிர்த்து 


அதில்  நீதிவரவில்லையெனில் 


வாளை நிமிர்த்து (இந்த வரிகள்  


மறுக்கப்பட்டது)


அதன்பிறகு கீழ்கணடவாறு வரி 


மாற்றம் செய்யப்பட்டது.


அதில் நீதி உன்னைதேடிவரும் 


மாலை தொடுத்து.


இதே போல " பாவ மன்னிப்பு " 


படத்தில் ஒரு பாடல் :- 


பாலிருக்கும். பழமிருக்கும். பசி 


இருக்காது. 


பஞ்சணையில்  காற்று வரும் 


தூக்கம் வராது. 


இந்தப் பாடலில் ஒரு சர்ச்சைக்கு 


உரிய வரி:- 


காதலுக்கு ஜாதி இல்லை.மதமும் 


இல்லையே 


கண்கள்பேசும்வார்த்தையிலே


பேதம்இல்லையே 



வேதமெல்லாம்காதலையேமறுப்


பதில்லையே 


" அது வேதம் சொன்ன  குருவைக் 


கூட விடுவதில்லையே " !! (இந்த 


வரிகள் தணிக்கை குழுவினரால் 


மறுக்கப்பட்டது )


பின் வரி மாற்றம் செய்யப் பட்டது.             


மாற்றம் செய்யப்பட்ட வரிகள் :-                   


அது மேகம் செய்த உருவைப் 


போல மறைவதில்லையே (என 


மாற்றம் செய்யப்பட்டது )


எதற்காக இவைகளை எல்லாம் 


நான் உங்கள் பார்வைக்கு வைக்கி


றேன் என்றால் இன்றுசினிமாவில் 


வரும் பாடலைப் பாருங்கள்.



1)   எவன்டி உன்னை பெத்தான்



2)   சக்கரை வள்ளி கிழங்கு நீ 


தான் சமஞ்சது எப்படி ?



3)      மாங்கனிகள் தொட்டிலிலே  


தூங்குதடி அங்கே !! 


மன்னவனின் பசியாற


மாலையிலே பரிமாற 


4)  டாடி மம்மி வீட்டில் இல்ல தடை


போடயாரும் இல்ல


விளையாடுவோமா உள்ளே


வில்லாளா 



என்ன கொடுமையடா இது !!



இதுதான் தலைமுறை இடைவெளி 


என்பதா? 



வெட்கக் கேடு.கால மாற்றத்தால் 



தணிக்கைக் குழுவின் பார்வையும் 


மாறுகிறதோ என்னவோ? 



எனக்கு எதுவும் தெரியவில்லை. 


உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா ? 


தெரியாது!! தெரிந்தால் சரிதான் !! 



நன்றி!!.வணக்கம் !!.



அன்புடன்  மதுரை TR. பாலு 




No comments:

Post a Comment