உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!
தமிழ் பேசும் சகோதர, சகோதரிகள்
நடுவில் உரையாடிடும் பொழுது
ஆங்கில வார்த்தைகள் கலப்பு ஏதும்
இன்றி தனித் தமிழில் மட்டுமே
பேசிடுங்கள் !!வாழ்ந்திடுங்கள் !!
கடந்த 26-௦7-2௦13 அன்று உங்களது
மதுரை T.R. பாலு உங்களிடம் ஒரு
கேள்விக்கணை ஒன்றினை கேட்டு
இருந்தது உங்களது நினைவினில்
இருக்கும் என கருதுகிறேன். அந்தக்
கேள்விக்கான விடை இதோ:-
முதலில் கேள்வி என்ன என்று
பார்ப்போமா நேயர்களே:-
மனைவிமார்களைகணவன்மார்கள்
தங்களது வசப்படுத்துவது எப்படி?
இதற்கான பதில் 3 தலைப்பினில்
அமைந்து உள்ளது என்றாலும் அந்த
3 விடைகளை உங்களுக்கு
சொல்வதற்கு முன்பாக ஆண்களே
நீங்கள் ஒரு விஷயத்தினை
தெளிவாக புரிந்துகொள்வது மிக
மிக அவசியம் என்று கருதுகிறேன்.
முதலில் பெண் என்பவள் இல்லை
என்றால் வாழ்க்கை என்பதே
ஆண்களுக்கு கிடையாது. அந்தப்
பெண்ணை திருமணம்
செய்துகொண்டு தனது வீட்டிற்குள்
அழைத்து வரும்போதுதான் இந்த
தனிக்கட்டையாக,பிரம்மச்சாரியாக
(ஒருசிலரே)இருந்த,வளர்ந்த,
வாழ்ந்த,ஆண்மகனுக்கு ஒரு
"குடும்பத்தலைவன்" என்ற
சிறப்புநிலை /கௌரவம்
இந்த பெண்ணால் மட்டுமே
கிடைக்கிறது என்ற அடிப்படை
உண்மையை ஆண்மகன்கள்
புரிந்துகொண்டாலே போதுமானது.
மனைவியைத்தனது
வசப்படுத்துவது என்பது மிகவும்
எளிதான காரியமாக ஆகிவிடும்.
நிலவு இல்லாமல் வானம் இல்லை.
நீர் இல்லாமல் மழை இல்லை. அது
போல பெண் இல்லாமல் ஆண்என்ற
தனிநபருக்கு என்றுமே சிறப்பு
என்பது கிடையவே கிடையாது.
அப்படி நமக்கு சிறப்பினைத்
தருகின்ற அந்த பெண்ணிடம் நாம்
எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
முதலில் அவள் என்ன பேசினாலும்,
எப்படி நமக்கு ஆத்திரம் ஊட்டும்
விதமாக நடந்து கொண்டாலும்
ஆண் புன்முறுவலுடன் அவளிடம்
சிரித்துக்கொண்டே அருமை!மிகமிக
அருமை!! யம்மா !! உன்னையைத்
தவிர வேறு யாராலும் எவராலும்
இந்த மாதிரி பேசவும் முடியாது !!
இப்படி நடந்து கொள்ளவும்முடியாது
என்று மட்டும் சொல்லிப்பாருங்கள்!!
அதன் பிறகு என்ன நடக்கிறதுஎன்று.
என்னடா இது !! நாம இப்படி கோபப்
பட்டாலும் இவர் இப்படிஅமைதியாக
சிரித்துக்கொண்டு இருக்கிறாரே என
உங்கள் மேல் அவளுக்கு ஒரு இனம்
புரியாத மதிப்பு உருவாகத்
தொடங்கிவிடும். இதுதான் நீங்கள்
அவளை வசப்படுத்துவதற்கு முதல்
நிலை ஆண்களே. முக்கியமாகஇந்த
நிலைப்பாட்டை நீங்கள்
மறந்துவிடக் கூடவே கூடாது.
அவளும் கோபப் பட்டு நீங்களும்
பதிலுக்கு கோபப்பட்டால் அத்தோடு
முடிந்தது சுமுகமான குடும்ப உறவு.
இரண்டு கையும் தட்டினால்தானே
ஓசை? ஒன்று தாழ்ந்து போனால்
எப்படி ஓசை வரும். அது நாமாக
இருப்பதினால் நமக்கு(ஆணுக்கு)
ஒன்றும் இழுக்கு வந்துவிடப்
போவது இல்லை. அடுத்த நிலை
வசப்படுத்தும் கலையில் என்ன
என்று கேட்டால் மனைவி சம்பந்தப்
பட்ட உறவினர்களிடம் சற்று
கூடுதலாகவே பாசம் இருப்பவர்
போல வெளிக்காட்டிக்கொள்வது
மிகமிக அவசியம் ஆண்களே. இதில்
நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்
என்று சொன்னால் நீங்கள்
மனைவியை தம்வசப்படுத்தும்
இலக்கினை மிக நெருங்கி
விட்டீர்கள் என்றே பொருள்.ஆனால்
இந்த நிலையை அடைவதற்கு சற்று
கூடுதலாக நீங்கள் பொருள் செலவு
செய்திட வேண்டி இருக்கும்.
பரவாயில்லை.பணம் எப்போது
வேண்டுமானாலும் நாம்
ஈட்டிக்கொள்ள முடியும். ஆனால்
பாச மனையாளை நம்
வசப்படுத்துவது என்பது அவ்வளவு
எளிதான காரியம் அல்லவே.
மூன்றாவது மற்றும் இறுதி
நிலைப்பாடு அவளை தமது வசப்
படுத்தும் கலையில் எது என்றால்
மனைவியாகப்பட்டவள் எதாவது
புதிதாக சமைத்திருந்தாலோ
அல்லது புதிய ஆடை அணிந்து
உங்களிடம்,ஏங்க எப்படி இருக்கு ?
நல்லா இருக்கா என்று கேட்கும்
போது (அது எப்படி இருந்தாலும் )
ஆகா!!பேஷ்!!பேஷ்!! அருமை,மிக
மிக அருமை!! நேற்றுகூட இப்படி
இல்லையம்மா!!(என மனதார பொய்
சொன்னாலும் பரவாயில்லை.அது
மன்னிக்கப்படலாம்) இதைக்கேட்டு
உங்கள் மனைவி முகத்தில்
புன்னகை அரும்பிவிட்டது
என்றுசொன்னால் போதுமானது.
அய்யா நீர் வெற்றிக்கோட்டையின்
கதவத் திறந்து உள்ளே சென்று
உங்கள் மனைவியின் இதய
சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டீர்கள்
உங்கள் மனைவியை உங்களது
வசப்படுத்திவிட்டீர்கள் என்று
தாராளமாகப்பொருள்கொள்ளலாம்.
மொத்தத்தில் நான் உங்களுக்கு
இப்போது கீழே தரப்பட்டுள்ள 3
முறைகளில் நடந்துகொள்ளுங்கள்
நீங்கதான் ராஜா!!. உங்க மனைவி
எப்போதும் எந்நாளும் தூக்குவாங்க
உங்களுக்கு கூஜா!!.
1) மனைவி என்ன சொன்னாலும்
உங்கள் பதில் இப்படி இருக்கணும்.
"" ஆமா !! ஆமா !! ""
2) மனைவி ஏதாவது செய்து
முடிக்கும் நிலையில் என்னங்க இது
சரியா? என கேட்கும்போது பதில்:-
""என்னம்மா !! நீ செய்யும்போது
தவறு வருமா ? அதெல்லாம்
சரிதான்!!""
3) இறுதியாக இதுதான் கடைசி
அஸ்திரம். அவளிடம் நீங்கள்
அடிக்கடி பேச்சுக்கு நடுவில் இந்த
வாசகத்தை உபயோகப்
படுத்திக்கொண்டே இருக்க வேணும்.
" நீ சொன்ன மாதிரி !! நீ சொன்ன
மாதிரி !! நீ சொன்ன மாதிரி !!
நீங்கள் உங்களது மனைவியை
வசப் படுத்தும் கலைதனில் வெற்றி
பெற்று விட்டீர்கள் . ஹலோ !! இந்த
பாத்தீங்கள்ள மனைவி வசமான
உடனே பாடம் சொல்லிக்கொடுத்த
குருநாதரை மறந்துட்டீங்களே!! ஒரு
வார்த்தை போயிட்டு வாரேன்
அப்படீன்னு சொல்ல மாட்டீங்களா?
இல்ல கேக்கிறேன். வான்புகழ்
வள்ளுவர் என்ன சொல்லிருக்கார்
தெரியுமா அன்பர்களே!!
திருக்குறள் !!
அதிகாரம் :- ஊடலுவகை .
குறள் எண் :- 1327.
"ஊடலில் தோற்றவர் வென்றார்
அதுமன்னும் கூடலில் காணப்படும்"
விளக்கம் :- கணவன் மனைவி
இருவர் இடையில் வரும்/
உண்டாகும் ஊடலில்(மனக்கருத்து
வேறுபாடான விஷயங்கள்
வரும்போது)எவர் அதைப்
பொருட்படுத்தாமல்
விட்டுக்கொடுக்கிறாரோ (இங்கு
அவர் தோற்றவராக கருதப்
படுகிறார்) அவரே (இரவில்/
தனிமைசூழலில்)வெற்றி பெற்றவர்
எனக் கருதப்படுகிறார்.எப்படி ?அந்த
ஊடலுக்கு பிறகு (சண்டைக்குப்பின்
வரும் சமாதானம்)வரும் சந்திப்பில்
விட்டுக்கொடுப்பவர் முதலில்
இன்பத்தின் எல்லையை
தொடுகிறார் அல்லவா? அதன்
மூலமாக !! எனவே யார்
விட்டுகொடுக்கிறீர்களோ அவர்கள்
வெற்றி பெறுவார்கள். இது
வள்ளுவர் நமக்கு அருளிய குறளும்
அதன் விளக்கமும் ஆகும்!!
இத்தனை பொறுமையோடு இந்த
மிக நீண்ட கட்டுரைதனைப் படித்த
அன்பு உள்ளங்களுக்கு நன்றி!!.
பின் குறிப்பு :-
படிப்பதுடன் நின்றுவிடாமல்
சொல்லப்பட்டுள்ள கருத்தை அதன்
உட்பொருளை உங்கள் நெஞ்சில்
நிறுத்தி செயல்பட்டால் உங்கள்
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
நன்றி!! வணக்கம் !!
அன்புடன் !! மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment