Tuesday, 25 June 2013

பூரண மது விலக்கு கொள்கை இங்கே நடைமுறைக்கு ஒத்துவருமா?





உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!   


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது!!  


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


இனிய தமிழ் மக்களே!!உங்கள் 


அனைவருக்கும் என் இனிய அதி 


காலை வணக்கம்.(நேரம்: 12.11A.M.) 


இன்றைய தினம் நம் தமிழ் நாட்டில் 


பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சி  


யினராலும் பேசப்படும் பொது 


விஷயம்  இந்த "பூரணமதுவிலக்கு"


என்பது.  ஆனால் இதில் மிகவும் 


நகைப்புக்கு உரிய விஷயம் நம் 


தமிழ்நாட்டு காங்கிரஸ் பேரியக்க 


நிர்வாகிகளும் இந்த போராட்ட 


களத்தில் குதித்துஇருப்பதுதான். 


மற்ற மாநிலக் கட்சிகளான பா.ம.க., 


ம.தி.மு.க., தே.மு.தி.க., இது போன்ற 


இந்தியத் திருநாட்டில் வேறு எங்கும் 


கிளைகள், பிற அமைப்புகள்,எதுவும் 


இல்லாத இவர்கள் போராட்டம் 


நடத்துகிறார்கள் என்றால் அது 


ஏற்றுக் கொள்ளக்கூடிய 


ஒன்றுதான்.ஆனால் ஒட்டுமொத்த 


இந்தியாவில் 75 சதவீத நிலப் 


பரப்பில் மாநிலங்களில் ஆளும் 


பொறுப்பில் இருக்கும் இந்த தேசிய 


கட்சி,அடுத்து இதன் தம்பி பா.ஜ.க. 


அன்பர்களே !! தமிழில் ஒரு 


பழமொழி ஒன்று உண்டு. என்ன 


என்றால் "ஆளோடு ஆளாக 


அழுதாளாம் ஓவாய்ச்சி "என்று. அது 


போல அந்த இரண்டு தேசியக் 


கட்சிகளும் காங்கிரஸ்,பா.ஜ.க., 


இவைகளும் இங்கே பூரண மது 


விலக்கு அமல் படுத்த வேண்டி 


போராடுவதைப் பார்த்து " சிரிப்பு 


தான் வருகுதையா " என்ற பாட 


வேண்டியதுதான். பேரறிஞர் 


அண்ணா சொல்லுவார். தம்பி !! நீ 


அடுத்தவனை நோக்கி உன் 


ஆள்காட்டி விரல் நீட்டி குற்றம் 


சுமத்திடும்போது உன்னை நோக்கி 


உனது ஏனைய மூன்று விரல்களும் 


நீட்டிக்கொண்டு இருக்கின்றன தம்பி. 


உன்னை சரிசெய்து விட்டு,திருத்தி 


விட்டுஅடுத்தவன்மீதுகுற்றம் சுமத்து 


என்று சொல்லுவார். அதற்கேற்ப 


நான் இந்த 2 தேசியக் கட்சிகளையும் 


பார்த்துக் கேட்க விரும்புகிறேன். 


நீங்கள் அரசாளும் மாநிலங்களில் 


உள்ள கள்ளு,சாராய,மற்றும் ஒயின் 


கடைகளை இழுத்துப் பூட்டு போட்டு 


பூட்டியபின் அங்கே பூரண மது 


விலக்கு கொள்கையை 


வெற்றிகரமாக அமல் செய்து 


நடத்திய பிறகு இங்கே வா. முழு 


உத்வேகத்தோடு உனது 


போராட்டங்களை துவக்கு. வெற்றி 


பெறு. வாழ்த்துகிறோம் நாங்கள். 


இந்த போராட்டத்தை உங்கள் 


ஊர்களில் செய்யாமல் இங்கே வந்து 


செய்வேன் என்று சொல்வது எனக்கு 


அவ்வளவு சரியாகப் படவில்லை 


தோழர்களே. ஒரு ஊரில் இதே 


மாதிரி ஒரு மாபெரும் மக்கள் 


சக்தியை திரட்டி பரிபூரண 


மதுவிலக்கு கொள்கையை அமல் 


படுத்து என மாநில அரசாங்கத்தை 


கேட்டு ஊர்வலம்,மாநாடு என அந்த 


கட்சியினர் நடத்தினார்களாம். 


மாநாடு நடக்கும் இடத்தினை சுற்றி 


இருக்கும் 35க்கும் மேலான 


மதுபானக் கடைகளில் 


விற்பனைக்கு காலை எட்டு மணிக்கு 


கனரக வாகனத்தினில் வந்து 


இறங்கிய டாஸ்மாக் நிறுவன 


சரக்குகள் அரை மணி நேரத்தினில் 


விற்றுத் தீர்ந்தனவாம் இது எப்படி 


இருக்கு ?  ஆக நாம இப்ப இந்த 


கட்டுரையின் பாதிப் பகுதிக்கு 


வந்து நிற்கிறோம் என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !! தமிழ் இனத் 


தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் 


காலத்தில் மிகமிக அதிகமாகவே 


பல யோசனைகள் செய்து சிந்தித்து 


ஆராய்ந்து கள்ளச்சாரய ஆலை 


அதிபர்களது சித்து 


விளையாடல்களினால் எத்தனை 


எத்தனை மனித உயிர்கள் இந்த 


நாட்டினில் பறி போயின எத்தனை 


பேர்கள் தங்களது விழிப் பார்வை 


உணர்வுகளை இழந்து தவித்து 


குருடர்களாக மாறி இருந்தார்கள் 


என்பதை மனதில்வைத்து மேலும் 


தமிழகத்தைச் சுற்றி உள்ள 


அனைத்து மாநிலங்களிலும் 


கள்ளு,சாராய,ஒயின் கடைகளில் 


விற்பனை படு ஜோராக நடப்பதை 


கண்டு அந்தக் காலங்களில் தண்ணி 


அடிப்பதற்காகவே பக்கத்து 


மாநிலங்களான கேரளா,ஆந்திரா, 


கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி 


ஆகிய மாநிலங்களுக்கு நம் தமிழ் 


நாட்டில் இருந்து ஒவ்வொரு 


வெள்ளிகிழமைகளிலும் மாலை 


மகிழுந்து எடுத்துக் கொண்டு அங்கு 


சென்று கூட்டம் கூட்டமாக 


தமிழர்கள் சென்று மகிழ்ச்சியாக 


இருப்பதைக் கண்டு வெறும் 


வருமானத்திற்காகவோ அல்லது 


விளம்பரத்திற்காகவோ ஒரு 


தலைமுறை வரை மது என்றால் 


என்னஎன்றுஅறியாமல் இருந்த 


தமிழர்கள் மத்தியில் கனத்த 


இதயத்துடன் இந்த பூரண மது 


விலக்கு கொள்கையை விட்டு 


விலகி வேறு வழி இல்லாமல் 


இங்கே மிகவும் மன வேதனையுடன் 


அதனை நடைமுறைபடுத்தி 


இருந்தார் தலைவர் கலைஞர் 


அவர்கள். ஆனால் இன்று என்ன 


ஆச்சு? மாண்புமிகு இந்நாள் 


முதல்வர் அவர்கள் வருமானத்தை 


குறிபார்த்து மது என்ற அரக்கனின் 


ஒட்டு மொத்த விற்பனை 


குத்தகையை அரசாங்கமே ஏற்றுக் 


கொண்டு அதற்கு "டாஸ்மாக்" என 


பெயர் வைத்து சில ஆயிரம் 


கோடிகளாக இருந்த பாவத்தின் 


வருமானத்தினை பன் மடங்கு 


உயர்த்திய பெருமையும் அருமையும் 


அம்மையார் அவர்களையே சாரும். 


அதில் சந்தேகமே இல்லை. 


இன்றைக்கு இந்தியாவில் மது 


விற்பனை என்பது இல்லாத 


மாநிலமே இல்லை எனலாம் 


(குஜராத் தவிர) அந்தக் காலத்தில் 


வேடிக்கைகாக சொல்வேன் என் 


நண்பர்களிடம். 1967க்கு முன்பு நான் 


சொன்னது. அப்போது நமது 


மாநிலத்திற்கு மதராஸ் என்று 


பெயர். நாமும் குஜராத்தும் தான் 


பூரண மதுவிலக்கு கொள்கைதனை 


மிகவும் மன இறுக்கத்துடன் 


கண்டிப்பாககடைப்பிடித்து வந்தோம் 


பரிபூரண மதுவிலக்கு கொள்கை 


அதன் காரண கர்த்தா யார் என்று 


கேட்டால் மகாத்மா காந்தி. இவர் 


பெயரை ஆங்கிலத்தில் எழுதிப் 


பார்த்தால் MAHAATHMAA   GANDHI    


என்று வரும். அதில் முதல் M என்பது 


நமது மதராஸ் மாநிலமும் அது G 


என்பது குஜராத் மாநிலமும் என்று 


வேடிக்கையாக நான்குறிப்பிட்ட 


காலம் அது. அப்போது என்வயது 13.  


நான் எதற்காக இதை இங்கே 


குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் 


அந்த அளவுக்கு காந்தியின் பெயரை 


அவரது கட்சியினரே மறந்து 


இருந்தாலும் கூட அதனை மதித்து 


நினைத்து இருந்த இரண்டு 


மாநிலங்கள் ஒன்று மதராஸ் ஆகிய 


நாம். இரண்டாவது குஜராத். சரி 


நேயர்களே இப்போது நாம் கட்டுரை 


அதன் முக்கால் பக்கத்தை நெருங்கி 


விட்டோம். பூரண மதுவிலக்கு 


கொள்கை இங்கே நடைமுறைக்கு 


ஒத்துவருமா?/அது சாத்தியப் படுமா? 


இதுமட்டுமே நம் முன் உள்ளகேள்வி! 


இதற்கு என் சிற்றறிவுக்கு உட்பட்டு 


நான் தரும் பதில்  " நிச்சயமாக, 


உறுதியாக, ஆணித்தரமாக 


சொல்கிறேன்அன்பர்களே"முடியவே 


முடியாது"!!  ஏன் என்றால் முதலில் 


அரசு தரப்பில் பாப்போம். அரசுக்கு 


வரும் நிதி ஆதாரங்களில் 9௦ 


சதவீதம் இந்த மது விற்பனையின் 


மூலம் மட்டுமே வருகிறது. இதனை 


இழக்க எந்த அரசாங்கமும் முன் 


வருமா? அப்படியே முன் வந்தாலும் 


இந்த இழப்படி எப்படி ஈடு கட்ட 


முடியும். அப்படியே ஈடு கட்டுகிறோம்  


என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் 


கொள்வோம் (உறுதியாக முடியவே 


முடியாது)அப்படி என்றால் ஏறத்தாழ 


நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக  


மதுவோடு பழகி அதனைத்  தனது 


தோழனாக நினைத்து வாழ்ந்து 


வரும் மக்களுக்கு என்ன பதில் இந்த 


அரசு சொல்லிட முடியும். 1971 இந்த 


மதுவிலக்கு தளர்த்தப்பட்ட வருடம் 


என நினைக்கிறேன். அன்று 2௦ வயது 


உள்ள ஒருவருக்கு இன்று 62 வயது 


ஆகிறது. அதற்கு முந்திய வயது 


உள்ளவர்கள் அனைவரும் இறந்து 


விட்டார்கள் என்று ஒரு பேச்சுக்கு 


வைத்துக் கொண்டாலும் அந்த 


வயதிற்கு பின்னால் உள்ள மக்கள் 


வயது 59 தொடங்கி கொஞ்சம் 


கொஞ்சமாக குறைய 


ஆரம்பிப்பார்கள் வயதில். மாலை 


நேரம் வந்துவிட்டால் மதுவினை 


மனம் நாடிடும் பழக்கம் உள்ள அந்த 


மக்களுக்கு என்ன செய்திட முடியும்.


திருட்டுத்தனமாக கள்ளச் சாராய 


உற்பத்தியாளர்கள்,விற்பனை 


செய்பவர்கள் என அங்கிங்கு 


எனாதபடி நம் நாட்டின் ஒவ்வொரு 


கிராம ஊராட்சி, பேரூராட்சி, 


நகராட்சி,மாநகராட்சி,சென்னை 


போன்ற பெருநகரங்களில் 


ஒவ்வொரு சந்து பொந்துகளிலும் 


புற்றீசல் போல கள்ளச்சாராயம் 


ஆறாகப் பெருக்கெடுத்து அதனால் 


ஏற்படும் சாவுகளுக்கு,கண் பார்வை 


இழப்புகளுக்கு, இங்கே போராட்டம் 


நடத்திடும் பாட்டாளி மக்கள் 


கட்சி,மறுமலர்ச்சி திராவிட 


முன்னேற்றக் கழகம்,தேசிய 


முற்போக்கு திராவிட கழகம்,தேசிய 


காங்கிரஸ் கட்சி,பாரதீய ஜனதா 


கட்சி ஆகிய கட்சிகள் பொறுப்பு 


ஏற்றுக் கொள்ளத் தயாரா? நான் 


கேட்கிறேன் கேள்வி? போராட்டம் 


நடத்துபவர்களை எல்லாம்அழைத்து  


ஒரு வட்ட மேஜை மாநாடு 


நடத்துவோம். அதில் அவர்களிடம் 


இந்த கேள்விகளை முன் 


வைப்போம். அன்பர்களே உங்களது 


போராட்டம் ஏற்புக்கு உரியது. 


தாய்மார்களின் கண்ணீரைத் 


துடைக்க இந்த நாட்டு 


இளைஞர்களின் நலத்தில் 


முற்றிலும் அக்கறை உள்ள 


உங்களை நாங்கள் இதய பூர்வமாக 


வரவேற்கிறோம்.ஆண்டுக்கு 


ஏறத்தாழ 3௦ ஆயிரம் கோடிகளுக்கு 


மேலாக வருமானம் பெற்றுத் தரும் 


இந்த மதுவை ஒழிக்க நாங்கள் 


தயார். ஆனால் இந்த இழப்பை 


ஈடுகட்டும் வகையில் மக்களுக்கு 


மேலும் வரிச்சுமையை சிறிதும்


அதிகரிக்காமல் வரவினை 


தருவதற்கு என்ன திட்டம் 


உங்களிடம் உள்ளது.அது 


நடைமுறைக்கு சாத்தியம் ஆகுமா?


கள்ளச்சாரயத்தினை உற்பத்தி 


செய்திடும் கயவர்களை காவல் 


துறையின் கண்காணிப்பில் இந்த 


நாட்டில் முற்றிலும் தடுத்து  


அவர்கள் தயாரிக்கும் கள்ளச் 


சாராயத்தினை நாட்டிற்குள் 


வரவிடாமல் ஒழித்திட இயலுமா? 


அதற்கு உங்களிடம் என்ன திட்டம் 


உளது?அதுஇங்கே நடைமுறைக்கு 


சாத்தியம் ஆகுமா? என்று 


கேட்போம். இழப்பீடு தொகையை 


வரியினை கூடாமல் பெற முடியாது 


என்று சொன்னால் ஒவ்வொரு 


ஆண்டும் போராட்டம் நடத்தும் 


கட்சிகள் ஆகிய நீங்களே கூட 


மொத்தமாக அரசுக்கு தந்து 


விடுங்கள் என்று சொல்லிவிட்டு 


திரும்பி பார்த்தால் அங்கே ஒரு 


கட்சிப் பிரதிநிதி கூட 


இருக்கமாட்டார்.அனைவரும் 


துண்டைக் காணோம்.துணியைக் 


காணோம் என 


சென்றிடுவார்கள்.இதில் ஐயம் ஏதும் 


இல்லை அன்பர்களே. எனவே 


இறுதியாக நான் என்ன சொல்லி 


இந்த மிக நீண்ட கட்டுரையை 


முடிக்க இருக்கிறேன் என்று 


சொன்னால் குடிப்பழக்கம் என்பது 


தீயது,குடும்பத்திற்கு கெட்டது 


மட்டுமே செய்திடக் கூடியது. நம் 


உடலுக்கு,குடலுக்கு தீங்கு 


விளைவித்து நாளடைவில் நம்மை 


போதை பழக்கத்திற்கு அடிமை 


ஆக்கிடும் நாம் இந்த கெட்ட 


பழக்கத்தை விட்டு ஒழிக்க 


வேண்டும் என்று ஒவ்வொரு 


மனிதனும் மனமார நினைத்து 


முடிவு செய்கிறானோ அன்று தான் 


நாம் இது பற்றி ஒரு முடிவுக்கு வர 


முடியும். அது இல்லாதவரை இந்த 


மதுவினை நாம் இந்த நாட்டினில் 


இருந்து ஒழித்திட  முடியாது!


முடியாது!!முடியவே முடியாது!!! 


என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி 


பாராட்டிவிடைபெறுகிறேன். நன்றி !!


வணக்கம்!! 


அன்புடன், மதுரை T.R. பாலு.



No comments:

Post a Comment