யானையைப் பூனை விரட்டுது !! மிரட்டுது !! இது முறையா!! இது தகுமா!! இது தர்மம்தானா ??
உடல் மண்ணுக்கு !! உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !! தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!! தமிழர்களுடன் உரையாடும்போது !!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள்அனைவருக்கும்என் பணிவு
நிறைந்த வணக்கங்கள்.
இன்றையதினம் நமது அண்டை நாடு
இலங்கையில் நடைபெற்றுவரும்
மனித உரிமை மீறல்கள் அதனைத்
தொடர்ந்து நமது இராமேஸ்வரம்
மீனவர்கள் மீது கடந்த 3 தினங்களாக
நடத்திவரும்தொடர் தாக்குதல்களை
பார்கின்றபோதுகட்டுரையின் மேலே
கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு மிகச்
சரியாகப்பொருந்தகூடியஒன்றே என
நான் கருதுகிறேன் அன்பர்களே !!
பொதுவாக உலக சமூக,சரித்திர,
பூகோள ரீதியில் பார்க்கும்போது
ஒரு நாட்டுக்கு ஒரு நாடு, இதற்கு
இடையில் சர்வதேச கடல் எல்லை
ஒன்றினை வகுத்து அதனை எல்லா
நாடுகளும்மதித்துஅந்தஎல்லையின்
அடிப்படையில் தங்கள் நாட்டு
உரிமைகளை பாதுகாத்து வருவது
என்பது வழக்கத்தில்/நடைமுறை
தனில் உள்ள ஒன்று தான். அந்த
எல்லையை ஒருநாடு மீறுகின்ற
போதுதான் அங்கே பிரச்சினைகள்
உருவாகின்றன. அதனை அதில்
சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளும்
அமர்ந்து பேசித் தீர்த்துக்கொள்ள
வேண்டும்.
ஆனால் இலங்கையைப் பொறுத்த
வரை நமது மத்திய காங்கிரஸ் அரசு
அப்படி ஒரு நிலைப்பாடுதனைக்
கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
நீ எவ்வளவு வேண்டுமானாலும்
தமிழனை அடி,கொல்லு,துன்புறுத்து,
படகைக் கைப்பற்று,மீன்களை
கொள்ளை அடி,மீனவர்களை கைது
செய்து சிறைப்பிடி,உனக்கு இஷ்டம்
வந்தால் விடுதலை செய், இந்த
மாதிரியான அணுகுமுறைதனை
மட்டுமே இதுவரை மத்திய அரசு
செய்து வந்து உள்ளது,இனிமேலும்
அப்படித்தான் அது செய்யும்.
ஏன் எனில்இங்கேநிலைமை அப்படி.
அரசியலில்ஒருசொல்வழக்கு ஒன்று
உண்டு. எதிரிக்கு எதிரி நண்பன் என
அதுதான் இங்கே இலங்கைத் தமிழர்
விஷயத்தில் மத்திய அரசு கடைப்
பிடித்துகொண்டு இருக்கிறது. தனது
கணவனைக் கொன்றவர்கள் தமிழ்
ஈழ விடுதலை இயக்கத்தினர்.( ஏன்
அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது
என்பதை அறிவு உள்ளவர் அறிவர்)
அந்த L.T.T.E.அமைப்பு,அதன்
தலைவேலுப் பிள்ளை பிரபாகரன்.
அவரது எதிரி சிங்கள அரசாங்கம்.
ஆக மத்திய அரசுக்கு என்றுமே
சிங்கள அரசாங்கம் நண்பன்தான்.
இவர்களிடம் நாம் முறையிடுவதால்
எவ்விதப்பலனும்நமக்குகிடைத்திட-
-ப்போவது இல்லை. இந்த முடிவுக்கு
வந்த பிறகுதான் தலைவர் கலைஞர்
அவர்கள் மத்திய அரசிலிருந்து
ஆதரவை விலக்கிக் கொண்டு
அரசாங்கத்தில்/ அமைச்சரவையில்
இருந்தும் வெளியில் வந்தது
அன்பர்களே. ஆகவே நமது தாழ்ந்த
தமிழ் இனத்தின் தலையெழுத்து
சரியாக எழுதப்பட வில்லை எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே!! இது
இப்படி இருக்கும் வரை :-
யானையைப் பூனை விரட்டும்!!
யானையைப் பூனை மிரட்டும்.!!
இலங்கையையும் நமது கையால்
ஆகாத மத்திய அரசாங்கத்திற்கும்
இதுதான் முறை.இதுவே தகும்.இது
மட்டுமே தர்மமும் ஆகும்.
நமது துரதிர்ஷ்டம் அன்னை இந்திரா
காந்தி நம்முடன் உயிருடன்
இல்லாது போனது. அதனால்
எங்கேயோ இருந்து வந்தது எல்லாம்
இங்கே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து
அதிகாரம் செய்கிறது. திரை
மறைவிலேஆட்சியையும்நடத்துது.
ஜெய்ஹிந்த்!!சாவதற்கென்றே
பிறந்த இனம்தான் நம் தமிழ் இனம்.
வாழ்க மன்மோகன்ஜிக்கள். வாழ்க
சோனியாஜிக்கள். இறைவன்
ஒருவன் இருக்கின்றான். அவன்
எல்லோரையும் பற்றி மிகத்
தெளிவாகவே தெரிந்து வைத்து
உள்ளான்.இறைவன் தருவான் பதில்.
சரியான நேரம் வரும். அப்போது
எல்லாவற்றுக்கும் விடை
கிடைக்கும் நன்றி!வணக்கம்!!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment