உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!
அன்பர்களே !!
அனைவருக்கும் என் இதயம் கனிந்த
நல்வாழ்த்துக்களுடன் கூடிய காலை
வணக்கங்கள் பலப் பல.நிற்க.
இந்த இனிய காலைப் பொழுதினில்
உங்கள்இல்லம்தேடிவந்து உங்களை
மகிழ்ச்சியோடு உளமார, மனமார,
வாழ்த்துவதில் நான் மிகவும்
பெருமைப் படுகிறேன் என் அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !! தமிழன்
என்றொரு இனம் உண்டு. தனியே
அதற்கு ஒரு குணம் உண்டு என்றான்
என்முண்டாசுக் கவி. அந்த தனியான
குணம் தான் அன்பு,பாசம்,நேசம்,
விசுவாசம் அன்பர்களே. தமிழனின்
மற்றும் ஒரு சிறப்பு குணம் என்ன
என்றால் அதை என் கவியரசர்
கண்ணதாசன் ஒரு திரைப்பட
பாடலில் குறிப்பிட்டுள்ளான் என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே. நடிகர்
திலகம் நடித்து மறைந்த மதுரை
தந்த மாணிக்கம் T.M.S.அவர்களால்
தமது வெண்கலக் குரலில் பாடப்
பட்ட அருமையிலும் அருமையான
பாடலே அது :-
உள்ளதைச் சொல்வான் !!
சொன்னதைச் செய்வான்!!வேறு
ஒன்றும் தெரியாது !!
உள்ளத்தில் இருப்பதை
வார்த்தையில் மறைக்கும் கபடம்
புரியாது!!
நன்றியை மறந்தால் மன்னிக்க
மாட்டான் !! பார்வைக்கு நெருப்பு
ஆவான் !!
நல்லவர் வீட்டுக்கு நாய் போல்
உழைப்பான் !!காலுக்கு செருப்பு
ஆவான் !!
இவைகள் தான் இந்த குணங்கள்
தான் தமிழனது சிறப்பான நல்ல
குணங்கள்.(பெரும்பான்மை
எண்ணிக்கையில் உள்ள தமிழர்கள்)
பெரும்பான்மையான நெற்பயிருக்கு
நடுவே ஒரு சில களைகள் வளர்வது
போல நம் தமிழ் இனத்திலும் சில
புல்லுருவிகளும்ஆங்காங்கேகாண
-ப்படுவதும் உண்டு. அந்த கெட்டவர்
குணங்கள் எவை எனில் அவை
இதோ இவைகள் தான் :-(அந்தக்
காலத் திரைப்படத்தில் வரும் பாடல்)
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக் குணம் !!
காண்பதற்கே உருப்படியாய்
இருப்பதெல்லாம் கெடுப்பதுவே
குரங்கு குணம் !!
ஆற்றில் இறங்குவோரைக் கொன்று
இரையாக்குதல் முதலைக் குணம்!!
ஆனால் இம்மனிதனிடம் இந்த
மூன்றும் மொத்தமாய் வாழுதடா!!
மனிதன் பொறக்கும் போது பொறந்த
குணம் போகப்போக மாறுது !!
வாழ்வில் இருக்கும் போது பிரிந்த
குணம் இறக்கும் போது சேருது!!
(என்று கவிஞர் ஒருவர் என்னே
சிந்திக்கும் ஆற்றல்தனை பெற்று
இருந்தால் இது போல சொற்கள்
வந்து சேரும்!! அருமை!! அருமை !!
அருமையிலும் அருமை !!சீர்காழி
தமது கணீர் என்ற வெண்கலக்
குரலில் பாடிய வரலாற்று சிறப்பு
மிக்க ஒரு பாடல் அது அன்பர்களே))
கால நிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது!!
புலியின்கடுங்கோபம்தெரிஞ்சுக்காம
வாலைப் புடிச்சு ஆட்டுது !!
வாழ்வின் கணக்கு புரியாம ஒன்னு
காசைத் தேடிப் பூட்டுது !!
ஆனால் காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது !!
என்று வாழ்வின் உண்மைத்
தத்துவங்களை எவ்வளவு மிகச்
சிறப்பாக கவிஞன் அங்கே படம்
பிடித்துகாட்டியுள்ளான்பார்த்தீர்களா
அன்பர்களே !! ஆக நாம் இப்பொது
கட்டுரையின் முடிவுப் பகுதிக்கு
வந்து நிற்கிறோம். மனித வாழ்வில்
எதுவுமேநிலைஇல்லாதது. அவன்
நெஞ்சுக்கு துணை இல்லாதது.
இதை எவன் ஓருவன் மிக நன்கு
புரிந்து கொள்கிறானோ அவன்தான்
உண்மை ஞானியாக வாழ்கிறான்.
அவன் மனதில் அமைதித் தென்றல்
மட்டுமே எந்நாளும் வீசிடும். வாழ்க
இதுபோன்ற ஞானிகள்!! வளர்க
அவர்தம் எண்ணச் சிறகுகள்.
மீண்டும் நாளை சந்திப்போமா என்
அன்புத் தமிழ் நெஞ்ஜங்களே !!
வாழ்வோம் வளமுடன் !! அன்புடன் !!
நல்ல பண்புகளுடன் !!
இப்படிக்கு மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment