Monday, 24 June 2013

பூனையால் புலியை வென்றிட முடியுமா?




உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள்  !!                      


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!! 


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது !!     



அங்கிங்கெனாதபடி எங்கும் 


பிரகாசமாய் ஆனந்த ஜோதியாய் 


அருள்தரும் ஒளியே !! என்று 


இறைவனை குறித்து எழுதப்பட்ட 


பாடலை நான் நமது தமிழ் 


இனத்திற்கு ஏற்றவாறு மாற்றி கூற 


விழைகிறேன் என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                               


அங்கிங்கெனாதபடி உலகெங்கிலும் 


அன்பின் திருஉருவாய் !!


ஆற்றலின் மறு பதிப்பாய் !!


இன்பமதன் நற்சுவையாய் !!


ஈகையின் ஊற்றுக் கண்ணாய் !!


உழைப்பின் சிகரமாய் !!


ஊருக்கு உழைத்திடும் உத்தமனாய் !!


என்றும் நட்புணர்வாய் !! 


ஏற்றமிகு சிந்தனைச் சுடராய் !!


ஐயமில்லா அன்புருவாய் !!


ஒழுக்கத்தின் சிகரமாய் !!


ஓங்கு புகழ் கதிரொளியாய் !!


ஒளவையின் தமிழ் சுவையாய் !! 


அகிலம் முழுவதும் வியாபித்து 


இருக்கின்ற என் உயிரினும் மேலாக 


நான் போற்றி வணங்கி வரும் என் 


அன்புத் தமிழ் உடன்பிறப்புக்களே !! 


முதலில் உங்கள் அனைவரையும் 


வணங்கி சற்றே வித்தியாசமான 


அதே சமயம் பொருள் பொதிந்த ஒரு 


கட்டுரையை இந்த அதிகாலை 


வேளையில் (இப்போது அதிகாலை 


மணி 3.11) எனது சிந்தனைக்குள் குடி 


புகுந்து இதுபோல ஒரு அறிவு சார்ந்த 


கட்டுரை ஒன்றினை மதுரை பாலு 


அவர்களே நீங்கள் உலக தமிழர்கள் 


அனைவரது சிந்தனைக்கும் அள்ளித் 


தெளித்திட வேண்டும்  அதில் உலகத் 


தமிழர்கள் அனைவரும் அந்த 


குற்றாலச் சாரலில் நனைந்து 


இன்புற வேண்டும் என்று எண்ணி 


இந்த நற்காரியத்தில் என்னை ஈடுபட  


வைத்திட்ட அந்த பரம்பொருளுக்கு 


என் மனமார்ந்த நன்றி!! அந்த 


ஆண்டவனுக்கும் ( அன்பர்களே, 


இங்கே ஒரு சிறு குறியீடு! 


ஆண்டவன் என்றால் இறைவன் 


என்று ஒரு பொருள் உண்டு!! அதே 


சமயம் இதற்கு முன் நம்மை அரசாய் 


"ஆண்டவன்" என்றும் மறு பொருள் 


உண்டு.இதில் எது உங்களுக்கு 


தேவையோ அதை நீங்கள் 


பயன்படுத்திக் கொள்ளலாம் )எனது 


இதயம் கனிந்த நன்றி அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                                    


"பூனைதான் புலியை வென்றிடுமா"? 


என்ன மதுரை TR.பாலுவுக்கு மறை 


கழண்டுவிட்டதா? என நீங்கள் 


பயப்படத் தேவை இல்லை. இன்று 


நாட்டில் உள்ள பூனைகள் அது 


போன்ற ஒரு மனப்பான்மையுடன் 


உலா வந்துகொண்டு இருக்கிறது 


என்பதுதான் முழுக்க முழுக்க 


உண்மை என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே!!                                                        


அன்பர்களே !! அந்தக் காலத்தில் 


 தமிழகத்தை 13 ஆண்டுகாலம் தனது 


ஆளுகைப் பொறுப்பில் வைத்திருந்த 


புரட்சிநடிகர்எனதலைவர்கலைஞர் 


அவர்களால் பட்டம் வழங்கப்பட்ட 


M.G.R. நடித்து  வெளிவந்த படம்   


"சக்கரவர்த்தித் திருமகள் " அந்த 


படத்தில் மறைந்த கவிச்சக்கர 


வர்த்தி பட்டுகோட்டை கல்யாண 


சுந்தரம் எழுதிய பாடல் ஒன்று என் 


நினைவின் பால் வருகிறது என் 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!   


மறைந்த கலைமாமணி என்று தமிழ் 


இனத்தலைவர் கலைஞர் 


அவர்களின் திருக்கரத்தினால் 


பட்டம் வழங்கப்பட்ட 


வெண்கலக்குரல் ஓசைக்கு சொந்தக் 


காரர் "சீர்காழி.கோவிந்தராஜன்" 


அந்தப் பாடலைப் பாடி இருப்பார்.            



பாடலைப் பாருங்கள் அன்பர்களே :-  



உறங்கையிலே பானைகளை        


உருட்டுவது பூனைக்குணம்!!     


காண்பதற்கே உருப்படியாய் 


இருப்பதெல்லாம் கெடுப்பதுவே 


குரங்கு குணம்!!                                      


ஆற்றில் இறங்குவோரைக் கொன்று 


இரையாக்குதல் முதலைக்குணம்!! 


*                      ஆனால்!! 


மனிதனிடம் இந்த மூன்றும் 


மொத்தமாய் வாழுதடா!!  


(என்ற  தொகையறாவுடன்  துவங்கி) 


சரணத்தில் )                                                           


மனிதன் பொறக்கும்போது பொறந்த 


குணம்!! போகப் போக மாறுது!! 


வாழ்வில் இருக்கும்போது பிரிந்த 


குணம் இறக்கும்போது சேருது !!          



பட்டப்பகல் திருடர்களை பட்டாடை 


தான் மறைக்குது!! 


ஒரு பஞ்சையைத்தான் எல்லாம் 


சேர்ந்து மாத்தி மாத்தி  உதைக்குது!!  


கால நிலையை மறந்து சிலது 


கம்பையும்   கொம்பையும் நீட்டுது!!. 


புலியின் கடுங்கோபம் புரிஞ்சுக்காம 


வாலைப்புடிச்சு  ஆட்டுது!!                  


வாழ்வின் கணக்கு புரியாம ஒன்னு 


காசைத் தேடிப் பூட்டுது!!                    


ஆனா காதோரம் நறைச்ச முடி கதை                                 


முடிவை காட்டுது!!                                       


உப்புக்கல்லை வைரம் என்று 


சொன்னால் அதை ஒப்புக்கொள்ளும் 


மூடருக்கு முன்னால் நாம உளறி 


என்ன ?கதறி என்ன ? ஒண்ணுமே 


நடக்க வில்லை தோழா !! ரொம்ப 


நாளா ?                                                                 


என்று அந்த வரலாற்றுச் சிறப்பு 


மிக்க பாடல் முடிவடைகிறது அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !! இன்றைய 


தினம் இந்த நாட்டின் நடப்புக்கு 


இந்தப் பாடல் மிகப் பொருத்தம் 


உள்ளதாக அறிஞர் பெருமக்கள் 


பேசிக்கொண்டு இருந்ததை என் 


காதார நேற்றைய தினம் நான் 


கேட்டு மகிழ்வுற்றதை இன்றைய 


தினம் உங்கள் அனைவரின் 


முன்பாக தெரிவிப்பதில் நான் பெரும்  


மன மகிழ்ச்சி அடைகிறேன் என் 


அன்புத் தமிழ் உள்ளங்களே !!  


எந்தக்காலத்திலேயும் பூனையால் 


புலியை வெல்லவே முடியாது ?              


*                    அது போலவே                         *  


65 என்ற எண்ணினால் 9௦ என்ற 


எண்ணை இன்றல்ல நாளை அல்ல 


என்றுமே வெல்லவே முடியது. ஏன் 


என்றால் இந்தத் தொண்ணுறு அந்த 


அறுபத்தி ஐந்தினை விட 25 


எண்ணிக்கைகள் அதிகம் உள்ளது 


அல்லவா ? அப்படி என்றால் அந்த 


அளவு இந்தத் தொண்ணுறுக்கு 


ஆற்றல்,வல்லமை,செயல் திறமை, 


சிந்திப்பதில்,செயலாற்றுவதில்,

 

25 பங்குகள் அதிகமாகத்தானே 


இருக்கும். இன்று அந்த 65 என்ற


எண் கோபுரக் கலசத்தின் உச்சியில் 


குடி இருக்கிறது.  ஆண்டவனின் 


அருள்  முடிந்த பின்பு எந்த எண் எந்த 


இடத்தில இருக்குமோ? அந்த 


இறைவனும் அந்த "ஆண்டவன்" 


அவனும் மட்டுமே அறிவான்.  அன்று 


கலைஞர்அவர்களின்கைவண்ணத்


தில்  உருவான "மனோகரா" திரைக் 


காவியத்தில்,நடிகர் திலகம் சிவாஜி 


கணேசன்,கண்ணாம்பாள்,காக்கா 


இராதா கிருஷ்ணன்,   "வசந்த 


சேனையின்"கள்ளக் காதலன் 


ருத்ரசேனன் வேடத்தில் வில்லன் 


நடிகர் S.A. நடராஜன்,அது போல 


முன்னாள் காதலி வேடத்தில் நடித்த 


"வசந்த சேனை"யாகவரும் T.R. ராஜ 


குமாரி இன்னும் ஏராளமான 


நட்சத்திரப் பட்டாளங்களோடு வந்த 


மனோகராவில் ஒரு இடத்தில ஒரு 


வசனம் கலைஞர் அவர்கள் எழுதி 


இருப்பார்கள். கண்ணம்பாளிடம்  


போலிச் சாமியார் கூறுவார் :-          


நளாயினி !! நாடகமே உலகம்  !!           


நாளை நடப்பதை யார் அறிவார் !! 


போய்விட்டான் உன் புதல்வன் 


புண்ணிய லோகத்திற்கு என்று !! 


அதுதான் இப்போது என்நினைவுக்கு 


வருகிறது  என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                                   


நாடகமே உலகம் !!                                    


நாளை நடப்பதை யார் அறிவார் ?     


எல்லோரும் இன்புற்று இருக்க 


நினைப்பதுவே அல்லால் வேறு 


ஒன்றும் அறிந்திலேன் பராபரமே !! 


அனைவருக்கும் மீண்டும் நன்றி 


பாராட்டி விடை பெறுகிறேன். 


வணக்கம் !! என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!


அன்புடன் மதுரை T.R. பாலு.                

No comments:

Post a Comment