உடல்மண்ணுக்கு!!உயிர் தமிழுக்கு !!
ஆங்கிலமொழிகலப்புஏதுமின்றி
தனித்தமிழில் அனைவரும், தமிழ்
சகோதர,சகோதரிகளிடம் பேசுகின்ற
பழக்கத்தை வளர்த்துக்கொள்ள
வேண்டும்!!இதுஎன்அன்பு நிறைந்த
வேண்டுகோள் !!(அன்பன் மதுரை TR
பாலு)
"எச்சரிக்கின்றோம்" !!
அனைவருக்கும் வணக்கம். இன்று
திருச்சி மாநகரில் மக்கள் கூடும்
பொது இடம்,அருகில்கோவில்,அதன்
அருகேபள்ளிக்கூடம் அத்தனைக்கும்
நடுவே (நாம் பெருமைப்படும் விதம்
அனைவரும்இலவசங்களுக்குஆசை
பட்டுவிதிவசத்தால்திரு விஜயகாந்த்
அவருடன் செய்துகொண்ட தேர்தல்
கூட்டணி ஒப்பந்தம் காரணமாக நம்
தாழ்ந்த தமிழகத்தில் ஆட்சி செய்யும்
அரிய வாய்ப்பினைப் பெற்ற தமிழக
அரசு ஒவ்வொரு நாளும் செயல்
படும் விதத்தினைப் பார்கின்ற போது
ஏண்டா இந்த அரசினைத் தேர்ந்து
எடுத்தோம், ஆளும் பொறுப்பினை
ஒப்படைத்தோம் என மன வேதனை
நிரம்பிய முகத்துடன் இவர்கட்கு
வாக்கு அளித்த பொதுமக்கள்
எண்ணத் துவங்கிவிட்டனர்
என்பதை இந்த அரசின் கவனத்திற்கு
கொண்டுவருகிறேன். நன்றி மறப்பது
நன்றன்று என்று சொன்ன குறள்படி
ஆட்சி நடத்தும் தமிழக அரசு நமது
திரு விஜயகாந்த் அவர்களுக்கு
அளிக்கும்மரியாதை,கௌரவம்
நான்உள்ளபடியே சொல்கிறேன் அது
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
அன்பர்களே. இப்படித்தான் நன்றி
நாம் அனைவரும் எல்லோருக்கும்
காட்டிட வேண்டும். இதுபோல நன்றி
உணர்வினை நமக்கு உதவி செய்த
நபருக்கு எப்படி காட்டிட வேண்டும்
என்று இன்றைய தினம் வழி காட்டி
வரும் நம் தமிழக அரசை அவரோடு
தேர்தல் உடன்பாடு செய்துகொண்ட
திரு.விஜயகாந்த் அவர்கள் ஏழேழு
ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க
மாட்டார். சரி !நாம் இப்போது
கட்டுரையின் தலைப்பு
சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு
வருவோம்.) புதிதாக
துவங்கப்பட்டுள்ள தமிழக அரசின்
மதுபானக் கடையான டாஸ்மாக்
உடனடியாக மூடப்பட வேண்டும்
என அங்குள்ள பொதுமக்கள்
பெண்கள் இளைஞர்கள் என
எல்லோரும் ஒன்று கூடி கடைக்கு
பூட்டு போடும் போராட்டம் நடத்திய
மக்கள் மீது காவல்துறை நடத்திய
தடியடி தாக்குதல்களில் இந்த
அரசுக்கு வாக்களித்த மக்களும்
அடங்குவர். ஏன் இந்த
பிடிவாதம்.அரசுக்கு. மக்கள் கூடும்
இடம்.வேண்டாம் என மக்கள்
சொன்னால் பேசாமல் இடத்தை
மாற்றி விட்டு செல்வதுதான் நல்ல
அரசுக்கு அடையாளம். அதை
விட்டுவிட்டு இப்படி எவல் ஆட்களை
விட்டு பொதுமக்களை தடிஅடி
நடத்துவதில் என்ன கிடைக்கும்.
ஆகவே இந்த கட்டுரையின்
வாயிலாக அரசாங்கத்துக்கு விடும்
வேண்டுகோள்:- தயவு செய்து
இனிமேலாவது திருந்தி மக்கள்
எதை விரும்புகிறார்களோ அதனை
செய்திடுங்கள். வேண்டாம் என்று
சொன்னால் அதனை வற்புறுத்தி
காவல்துறை மூலமாக நடத்தி
வெற்றி பெறலாம் என மனப்பால்
குடிக்காதீர்கள். மக்களை
பகைத்தால் எதிர்வரும்
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும்
அரசுக்கு பொதுமக்கள் திருப்பதி
வெங்கடாசலபதியின் நெற்றியில்
உள்ள அடையாளத்தினை மட்டுமே
வழங்குவார்கள். இதில் மாற்று
கருத்துக்கு இடம் இல்லை. மீண்டும்
ஒரு முறை சொல்கிறோம்:-
அரசாங்கம் திருந்த வேண்டும் !!
இல்லை என்றால் மக்கள் தீர்ப்பை
சந்திக்க வேண்டிவரும்!!ஜாக்கிரதை!
எச்சரிக்கின்றோம் !! நன்றி!!
வணக்கம் !! அன்புடன் மதுரை
T.R.பாலு.
No comments:
Post a Comment