Tuesday, 4 June 2013

பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டு திரியலாமா !




உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுக !!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!                                     


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!                               


தமிழர்களோடு உரையாடும்போது!!   



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலாக நான்போற்றி 


வணங்கி வரும் என் அன்புத்தமிழ் 


நெஞ்சங்களே !!                                                      


இன்றைய தினம் நான்தேர்ந்து 


எடுத்த தலைப்பு "பெண்கள் தலை 


முடிவிரித்துப்போட்டுத்திரியலாமா"


என்பதே அன்பர்களே.                                        



இந்தநாகரீக மோகத்தின் உச்சக்கட்ட 


வெளிப்பாடு முதன் முதலாக இந்த 


புவியில் அறிமுகப்படுத்தப்பட்டது 


மேல்நாடுகளின் மயக்கங்களில் 


ஆண் இனத்தை அடிமைப்படுத்த 


எண்ணிடும் ஜெர்மன் நாட்டின் தலை 


நகராம் பெர்லினில் இருந்துதான் 2௦ 


ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த 


மாற்றம் பெண்களுக்கு தலைமுடி 


நீட்டிவிடுதல் என்ற பெயரில் (HAIR     


STRAIGHTENING) அந்த நாட்டில் 


உதயம் ஆகி பிறகு அமெரிக்கா 


சென்றுஅங்கிருந்து ஜப்பான்வழி 


யாக நியூசிலாந்து,ஆஸ்திரேலியா 


பிறகு சிங்கப்பூர்,மலேசிய நாட்டில் 


கோலோச்சி பிறகே நம் நாட்டினுள் 


நுழைந்தது இந்த நாராசம் பிடித்த 


தலை முடி மாற்ற மோகம்.  அதிலும் 


இந்ததலைமுடிவிரித்துப்போட்டுள்ள


பெண்கள்சுப காரியமான திருமணம் 


மற்றும் வரவேற்பு போன்ற நிகழ்வு 


களில் பங்கேற்க வரும்போது 


எனக்கு வருகின்ற கோபமும் 


எரிச்சலும் வேறு எப்போதும் 


வருவதே கிடையாது அன்பர்களே. 


பொதுவாக பெண்கள் தங்கள் 


கூந்தலை எப்போது அவிழ்த்து 


விடுவார்கள் அவிழ்த்து 


விடவேண்டும் என்று நமது 


சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 


இழவு(சாவு) வீட்டில்(துக்கத்தை 


வெளிப்படுத்தும் விதமாக) மட்டுமே 


பெண்கள் தங்கள் கூந்தலை 


விரித்துப் போட்டு இருக்க வேண்டும் 


என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.            


ஆகவே பெண்கள் தங்கள் கூந்தலை 


அவிழ்த்துப் போட்டுக் கொண்டு  


வேலை பார்க்கும் அலுவலங்கள் 


திருமணம்,அத்துடன் தொடர்புடைய 


நிச்சயதார்த்தம்,பிறந்த நாள் விழா 


போன்றசுபநிகழ்வுகளுக்கு செல்வது 


மற்றும் திருக்கோயில்கள் போகும் 


போதும் தலைவிரித்து செல்வது 


தகாத செயல் மட்டும் அல்ல. 


மன்னிக்கமுடியாத தவறும் கூட.   


பெண்களுக்கு அழகு அவர்களது 


கூந்தலில் தான் உள்ளது என்பதனை 


இஸ்லாமிய மதமும் கிறித்துவ 


மதமும்அறிந்துள்ள காரணத்தினால்  


தான் மட்டுமே பெண்கள் தலைக்கு 


முக்காடு போட்டுவரவேண்டும் 


என்று வற்புறுத்தி உள்ளது. ஒரு 


பெண் நல்ல உண்மையான அழகியா 


இல்லையா என்பதை பார்க்க 


வேண்டும் என்றால் அவளது தலை 


மொட்டியடித்தால் மட்டுமே தெரிய 


வரும். அதேபோல ஒரு ஆண் மகன் 


நல்ல அழகனா இல்லையா என்பது 


அவனது அற்பம் (மீசை) நீக்கினால் 


மட்டுமே தெரிய வரும். அற்பம் 


என்றால் மீசை என்று பொருள் 


அன்பர்களே. இந்த மீசைமட்டும்     


இருந்தால் போதும். எவனும் 


அழகனாகவே தெரிய வருவான். 


எனவே தான் அற்ப ஆசை என்ற 


சொல்லும் வந்ததுஅன்பர்களே. 


இறுதியாக கட்டுரைதனை நிறைவு 


செய்திடும் வேளை வந்துவிட்டது. 


மேலை நாடுகள்  நமது சமுதாய 


உணர்வுகளில் புகுத்திய கலாச்சார 


சீரழிவுகளில் இந்த பெண்கள் தலை 


முடியை அவிழ்த்துப்போட்டுத் 


திரியும் அவலங்கள் நிறைந்த சவச் 


சீரழிவு சடங்கும் ஒன்று.                  


மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல 


மாதவம் செய்திடல் வேண்டுமம்மா 


என்று பெண்ணின் பெருமைதனை 


பாடியதும் இந்த தமிழ்நாட்டினில் 


என்பதனை தாய்க்குலமே மறந்து 


விடாதீர்கள்.மறந்தும் தலைமுடியை 


இனியாகிலும் அவிழ்த்து விட்டு 


திரியாதீர்கள். கண்ணதாசன் ஓரு 


பாடலில் பெண்களின் கூந்தல் 


பற்றிய சிறப்பை "அபூர்வ ராகம் " 


என்ற திரைப்படத்தில் குறிப்பிட்டு 


இருக்கிறார். அது என்ன பாடல் 


என்றால்:-                                                                   


பின்னிய கூந்தல் கருநிற நாகம்!!         

பெண்மையின் இலக்கணம் அவளது  

                                                               தேகம் !!

தேவர்கள்வளர்த்திடும்காவியயாகம்

அந்த தேவதை கிடைத்தால் அது என்  

யோகம் !!                                                               


என்று அந்தப் பாடலில்கூட  பின்னிய 


கூந்தல் என்றுதான் சொல்லப்பட்டு 


இருக்கிறது.                                                      


கட்டுரையை பொறுமையுடன் படித்த 


அன்பு உள்ளங்களுக்கு எனது தலை 


தாழ்ந்த வணக்கங்கள்.  நன்றி !!   


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment