எதை எதை எல்லாம் ஆழமாக பார்த்திடக் கூடாது ? ஒரு சிறு விளக்கம் !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில்உரையாடிடும்பொழுதினில்!
உலகம் முழுவதும் அங்கிங்கு
எனாதபடி எங்கும் வியாபித்து
அன்பும் பண்பும் பின்னிப்பிணைந்து
இருக்கும் என் அன்புத் தமிழ்
உடன்பிறப்புகளே !! முதற்கண்
உங்கள் அனைவருக்கும் எனது
இனிய மாலை வணக்கங்கங்கள்!!
(இந்திய நேரம் மாலை மணி 5.15
நிமிடங்கள்)
அன்பர்களே !!பொதுவாக நம்மில்
அனைவருக்கும் ஒரு குணம்/ ஒரு
வழக்கம் என்பது ஒன்று உண்டு.அது
என்ன என்றால் எதைப்பற்றி பேசி
வந்தாலும் அதன் ஆதி அந்தம்
அதனை கிண்டிக் கிளறாமல்
பேசுவது என்பது கிடையவே
கிடையாது.அந்தப் பழக்கம் நமக்கு
வாழ்வினில் பல்வேறு சிக்கல்கள்
மற்றும் சிரமங்களை நமக்கு தேடித்
தரும் என்பதனை யாரும்
அறிந்திடுவது என்பது இல்லை.
அதனால் தான் அன்பர்களே கற்று
அறிந்த நமது முன்னோர்கள் நமக்கு
அருளிய பயனுள்ள பழமொழிகளை
நமக்கு என்று விட்டுச் சென்று
உள்ளார்கள் அன்பர்களே !!
அது என்னவென்றால் கீழே குறித்து
உள்ள இந்த 3 விஷயங்களையும்
பற்றியது.இந்த 3 விஷயங்களிலும்
நிகழ்காலம்,(இப்போதுஉள்ளசூழல்),
எதிர்காலநிலவரம்,இந்த இரண்டைப்
பற்றிமட்டுமேநாம்சிந்திக்கவேண்டு
கிறேன்.அப்படி ஒரு நிலையை நாம்
மேற்கொண்டால் மட்டுமே நாம்
நமதுவாழ்க்கையைகொண்டுசெல்ல
முடியும். இது ஆன்றோர்கள் நமக்கு
அருளிச் சென்ற தத்துவ முத்துக்கள்.
கீழே குறிப்பிட்டுள்ள இந்த மூன்று
விஷயங்களைத்தான் நாம்
மேலோட்டமாக பார்க்க வேண்டிய
தலைப்புகள் :-
1) நதி மூலம்.
2) ரிஷி மூலம்.
3) பெண் மூலம்.
நதி மூலம் :- ஒரு நதியில்,அல்லது
ஒரு ஆற்றில் நாம் குளிக்க செல்வது
என்பது இயற்கை. அப்போது அந்த
நதி நீர் நாம் பயன்படுத்தும் இடத்தில
எப்படி சுத்தமாக இருக்கிறதா என்று
பார்த்து அந்த அளவோடு நாம் அந்த
நீரை பயன்படுத்திட துவங்கிடலாம்
அதனை விடுத்து அந்த நதி அல்லது
ஆறு,எங்கே இருந்து உற்பத்தி
ஆகின்றது,எங்குவரை அந்த நதி
போகின்றது.உற்பத்தி இடம் தொட்டு
முடிகின்ற இடம் வரை நதியின்
சுத்தம் பற்றி எல்லாம் ஆராய்ந்து
பார்ப்போமேயானால் நாம் அந்த நதி
நீரை பயன்படுத்த இயலாமல்
போய்விடும் ஏன் என்றால் அந்த
நதிநீர் எப்படிப்பட்ட அசிங்கம்,
கழிவுகள் இவைகளை எல்லாம்
கடந்து தானே இங்கு வந்திருக்க
வேண்டும். வந்திருக்க முடியும்.
ரிஷி மூலம் :- ஒரு தெய்வ அருள்
பெற்ற மகான், "ரிஷி"அவர் பக்திப்
பிரசங்கங்கள் நடத்திட அந்த
ஊருக்கு வந்து இருக்கிறார் என்று
வைத்துக்கொள்வோம். அவரின்
பிரசங்க அணுகுமுறை எப்படி
உள்ளது பேச்சில் இனிமை,தமிழின்
வளமை,உரையில் பக்தி மணம்
கமழ்கிறதா இவைகளைப் பற்றி
மட்டுமே நம் சிந்தனை இருந்திடல்
வேண்டும்.அதை விடுத்து சிந்தனை
ரிஷியின் ஆதிமூலத்தை விசாரிக்கத்
தொடங்குகிறது என்று சொன்னால்
பிறகு அவர் ஒரு காலத்தில் பெரிய
காமாந்தகராக இருந்திருக்கலாம்
அல்லது கள்வர் கூட்டத்தின்
தலைவனாகக்கூட இருந்திருக்கக்
கூடும்.ஆகவே ரிஷிகளிடமும் மூலம்
பார்த்திடக் கூடாது.
பெண் மூலம் :- திருமணத்திற்கு
பெண் பார்க்கப் போகிறோம் என்று
வைத்துக் கொள்வோம். நாம் மணம்
செய்யப்போகும் பெண் எப்படி?
அவள் நல்லவளா? குணவதியா?
அமைதி நிறைந்தவளா?ஆற்றல்
உள்ளவளா?நல் நடத்தை அவளிடம்
இருக்கிறதா?இவைகளை மட்டும்
தான் நாம் பார்க்க வேண்டும். அதை
விடுத்துஅவள் பரம்பரையில்அம்மா,
பாட்டி,பாட்டியின் அம்மா இப்படி
எல்லாம் சென்று அவர்களின் கற்பு
நெறிகளைப் பற்றி எல்லாம்
விசாரணை செய்தோமே என்றால்
எங்கேயாவது ஓட்டை இருக்கும்.
உடைசல் பல இருக்கும். ஆகவே
நாம் இவர்களைப் பற்றி எல்லாம்
ஆழமாகப் பார்த்திடக் கூடாது.
அன்பர்களே !! நான் மேலே
குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கும்
விளக்கங்களுக்கும் முழு சொந்தம்
கொண்டாடிடும் உரிமை என்னைப்
பெற்று வளர்த்து ஆளாக்கி அழகு
பார்த்திட்ட எப்போதும் என்
அன்புக்கும் பாசத்துக்கும் உரிய
மறைந்த என் அன்புத் தந்தை
அவர்களையே சேரும். நான் 1௦
வயது பாலகனாக இருந்த போது
என் தந்தையார் அவரது சக
தோழர்களிடம் பகிர்ந்து கொண்டு
இருந்த போது நான் மறைந்து
இருந்து கேட்டு இரசித்ததை உங்கள்
பார்வைக்கு விருந்தாகத் தருகிறேன்.
இது நடந்து 5௦ ஆண்டுகள் ஆகிறது .
அப்பா நாமம் வாழ்க !!
எனவே அன்பர்களே நாம் இப்போது
கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு
வந்துவிட்டோம். நீங்கள்
அனைவரும் இதில் கூறிய
அறிவுரைகளை உங்கள் எண்ணக்
கருத்துக்களில் பதிவு செய்து
கொண்டு அதன்படி வாழ்வினில்
நடந்து வெற்றி பெற எல்லாம் வல்ல
இறைவன் திருவருளை வேண்டிக்
கேட்டுக்கொண்டு விடை
பெறுகிறேன்.நன்றி !!வணக்கம்!!
அன்புடன். மதுரை TR. பாலு.
No comments:
Post a Comment