Thursday, 20 June 2013

மாநிலங்களவை தேர்தலில் பொதுவுடைமை கட்சிகளின் மடிப் பிச்சை ஏந்திய நிலை !! வெட்கம் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!   


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவே பேசிடும் போது !!                                    



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலான அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!  அனைவருக்கும் 


எனது அன்பு வணக்கங்கள்.                                   


இப்பவும்இருதினங்களுக்கு முன்பாக 


தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற 


மேலவைக்கு(ராஜ்ய சபா) உறுப்பினர் 


பதவி ஆறுநபர்கள்  தங்களது 


பதவிக்காலம் முடிவு   பெற்றதினால் 


நடைபெற இருக்கின்ற தேர்தலில் 


அந்த ஆறு இடத்திற்கும் எங்களது 


கட்சியைச் சேர்ந்த ஏற்கனவே அந்த 


ராஜ்ய சபா   பதவி முடித்திட்ட 5 


உறுப்பினர்களை மீண்டும் அந்த 


பதவிக்கு வேட்புமனு தாக்கல் 


செய்திடச் சொன்னதோடு கூடவே 


புதியவர் ஒருவரையும்வேட்புமனு 


தாக்கல் செய்திடவைத்து  கூட்டணி 


கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் 


கட்சியின் நெற்றியில் நன்கு 


குழைத்து ஒரு பட்டைநாமம் 


தீட்டி அதனைப் பார்த்து அகம் 


முழுதும் மகிழ்ந்தது ஆளும் கட்சி.       


அதன் பின்னர் திரைமறைவில் 


என்ன நடந்ததோ,எது நடந்ததோ, 


யான் அறியேன் பராபரமே !! 


இருதினம் கழித்து தனது கட்சியின் 


அந்த ஆறாவது உறுப்பினரை 


வாபஸ்  பெறவைத்து தங்கள் வீட்டு 


வாசல் முன்பாக மடிப் பிச்சை ஏந்தி 


கவலை தோய்ந்த முகத்தோடு 


காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் 


கடசியினரை மனம் குளிர்விக்கும் 


விதமாக அக்கட்சியின் அகில 


இந்திய செயலாளர்களுள் 


ஒருவரான திரு D.ராஜா அவர்கட்கு 


பிச்சை  போடப்பட்டுள்ளது  என்று 


சொன்னால் அது மிகை அல்ல. 


கொஞ்சமாவது சூடு,சொரணை, 


ரோஷம்,மானம், வெட்கம் இதில் 


ஏதாவது ஒன்று அந்த அகில 


இந்தியக் கட்சியிடம் 


இருந்திருக்குமே ஆனால் இந்த 


ஏற்பாடுக்கு சரி சொல்லி 


இருக்கலாமா ? இதுதான் இன்று நாம் 


முன் வைத்திடும் கேள்வி. பதிலுக்கு 


நாமும் சற்று காத்திருப்போம். 


நன்றி!! வணக்கம்!! 


அன்புடன்  மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment