பேயையும் குரங்கையும் ஆண்டவன் தேவையின்றி படைத்துவிட்டான் !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடிடும்பொழுது !!
உலகம் முழுவதும் அன்புடனும்
நல்ல தமிழ் பண்புடனும் உண்மை
நேசத்துடனும் உரிய பாசத்துடனும்
வாழ்ந்துவரும் என் உயிரினும்
மேலான அன்புத் தமிழ் உடன்
பிறப்புக்களே !!
முதலில் உங்கள் அனைவரையும்
மதுரை T.R.பாலு வணங்கி
மகிழ்கிறான். நிற்க !!
இந்த உலகத்தை எல்லாம் வல்ல
இறைவன் படைக்கின்ற போது
புல்,பூண்டு இவைகளில் இருந்து
செடி கொடி மரம் இதுபோன்ற
லட்சக்கணக்கான ஜீவ இராசிகள்
நீரில் உயிர் வாழ்வன மற்றும்
நிலத்தில்வாழ்வன இதுபோன்ற
இனங்களைப் படைத்த இறைவன்
இறுதியாகப் படைத்த உயிரினமே
மானுடம் என்பது. இவை
அனைத்திலும் ஆண் என்றும் பெண்
என்றும் படைத்து வேடிக்கை பார்த்து
மகிழ்ந்தவனே இறைவன் ஆவான்.
ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்றாம் சீவகசிந்தாமணி என்னும்
நூலில் என்ன எழுதப் பட்டுள்ளது
என்றால் :-
வன்மன வணிகர்தமை படைத்து
வானரங்கள் என்செய்யப்
படைத்தாய்...
பெண் எனும் இனந்தனைப் படைத்து
பேய்கள் என் செய்யப்படைத்தாய்
எனவும் அந்த நூலில் குறிப்பிடப்
பட்டுள்ளது. அதாவது வானரம் என
சொல்லப்படும் அந்த இனம் மிகவும்
பரிசுத்தமானது.ஆக இந்த குரங்கு
இனம் இருக்கிறதே அது லேசுப்பட்ட
இனம் அல்ல. தான் எடுக்கும்
பொருட்களை அங்கங்கு இடம்
மாற்றுதல் செய்தல் பலவகையான
வஞ்சக செயல்கள் செய்திடும்
ஆற்றலும் வல்லமையும் இதற்கு
உண்டு.அதனால் வன்மன
வணிகர்கள் படைத்த பின் இந்த
குரங்குகளுக்கு என்ன வேலை?இந்த
குரங்குகள் செய்திடும் அனைத்து
குண்டுமாத்து குழிமாத்து
வேலைகளை வணிகர்கள் செய்து
கொண்டு இருக்கும் போது குரங்கு
என்னும் இனத்தை தனியாக ஏன்
படைத்தான் இறைவன் ?
தயவுசெய்து அன்புத் தாய்குலம்
எனை அருள்கூர்ந்து மன்னிக்க
வேணும்.
பேய்கள் செய்திடும் அனைத்து
லீலைகளையும் வேலைகளையும்
இந்தப் பெண் என்னும் ஒருத்தியே
செய்து முடித்திடும் போது ஏன்
தேவை இல்லாமல் பேய் என்று
தனியாக ஒரு இனத்தை படைத்தாய்
என்பதே அந்த நூலின் ஆசிரியர்
கேட்டுள்ள கேள்வி. யாருக்காவது
சரியான விடை தெரிந்தால் நீங்களே
அவருக்கு தெரிவியுங்கள். நன்றி
வணக்கம் அன்புடன் மதுரை TR.பாலு
No comments:
Post a Comment