தூக்கு தண்டனை--ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
"தூக்குதண்டனை" - - - எனது
பார்வையில் !!
அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய தினம் நம் நாட்டில்
எங்கும் பேசப்படும் ஒரு பொது
விஷயமாக "தூக்குதண்டனை"
மாறிவிட்டது.நாட்டின் மிக உயர்ந்த
நீதி பரிபாலன இடமான உச்ச
நீதிமன்றத்தில்
மட்டுமே,தூக்கு
தண்டனைகளுக்கு, மேல் முறை-
-யீடுகளின் மீது இறுதி தீர்ப்பு
வழங்கப்படுகிறது.
அதற்கு மேல் எந்த நீதி மன்றமும்
நமது நாட்டில் கிடையாது.
கருணை மனு
வேண்டுமானால்
குடியரசு தலைவர் அவர்களிடம்
சமர்பிக்க குற்றவாளிகளுக்கு ஒரு
வாப்பு
வழங்கப்படுகிறது.
அந்த கருணை மனுவை ஏற்று
சம்பந்தபட்ட நபரை விடுவித்து
ஆயுள்தண்டனை
என மாற்றம்
செய்யவோ அல்லது நிராகரித்து
தூக்கு தண்டனைதனை
நிறைவேற்றுவதோ நாட்டின்
முதல்
குடிமகன் என்று நம்
எல்லோராலும் அழைக்கப்படும்
குடியரசுத்தலைவர் அவர்களுக்கு
மட்டுமே உரிமை வழங்கப்
பட்டுள்ளது.அவர் ஒரு
முடிவு எடுத்தால் அதுவே
இறுதியானது.அதற்குமேல்
முறையீடு ஏதும் இல்லை.
இதுதான் இன்றைய நிலை.
ஆனால் ஒரு ஜோதிடர் என்ற
முறையில் நான் சொல்ல
விரும்புவதுஎன்னவென்றால்
மேல்சொன்னதுபோல ஒரு
மனிதனுக்கோ/மனுஷிக்கோ
தூக்குதண்டனை
விதிக்கப்பட்டு அது
நிறைவேற்றபடுகிறது என்று
சொன்னால் அதற்கு மூல காரணம்
நான் ஏற்கனவே சொன்னபடி
மரணம்
என்பது தாயின்
கருவறையில் உருவாகும்போதே
நிச்சயிக்கப்படுகிறது.அதனை
யாரும் மாற்றவோ
திருத்தவோ
முடியாது.
லக்னாதிபதி கெட்டுவிட்டாலோ
அல்லது பாவிகளுடன்
இணைந்தாலோ
ஆயுள்காரகன்
என்று சொல்லப்படும் சனி பாவ
கிரகசம்பந்தம் பெற்று
கெட்டுவிட்டலோ
இதுபோன்ற
துர்மரணங்கள் என்பது
சம்பவித்தே
தீரும் அதை யாராலும்
மாற்றி அமைக்கவும் முடியாது
தடைசெய்யவும் முடியாது.
எனவே
பிறப்பு, வாழ்க்கை, இறப்பு,
இவை அனைத்தைம் நமது பூர்வ
புண்ணிய பலன்கள் மட்டுமே
நிர்ணயம் செய்யும் என்று சொல்லி
விடைபெறுகிறேன்.நன்றி!!
வணக்கம்!!. அன்புடன்
மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment