Monday, 3 June 2013

கோவிலுக்கு போடலாம் வழக்கு !! குடிக்கும் கடைக்கு போடணும் தலை முழுக்கு !!




உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !! 



தமிழனாக வாழ்ந்திடுக !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!

ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !!

தமிழர்களுடன் உரையாடும்போது !!



பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் 


உரிய உலகெங்கிலும் அன்போடு 


வாழ்ந்துவரும் என் உயிரினும் 


மேலாக நான் போற்றி பணிந்து 


வணங்கி வரும் என் அன்புத்தமிழ் 


உடன்பிறப்புகளே !! வணக்கம். 



இன்றைய தினம் நம் தாயகமாம் 


தமிழகத்தில் நடந்துகொண்டு வரும் 


நிகழ்வுகளை எல்லாம் பார்க்கின்ற 


போது அழுவதா? அல்லது சிரிப்பதா 


என்றே தெரியவில்லை. ஆம் 


அன்பர்களே. நாம் வாழ்ந்து கொண்டு  


இருப்பது நாடா அல்லது காடா? 


இதுவும் எனக்குப் புரியவில்லை என் 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!     



இப்போது ஒருதெருவில்எல்லோரும் 


வணங்கி வரும் ஒரு தெய்வத் திருக் 


கோவில் ஒன்று இருக்கிறது என்று 


வைத்துக் கொள்வோம் அன்பர்களே 


அந்தக் கோவிலை அகற்றவேண்டும் 


என அரசுத் துறையின் கீழ் ஆட்சி 


செய்திடும் ஒரு அமைப்பு உத்தரவு 


ஒன்று பிறப்பிகிறது என்றால் அதை 


எதிர்த்து நாம் நீதி மன்றத்திற்கு 


செல்லலாம்.அதில் தவறு ஏதும் 


இல்லை அன்பர்களே .                                      



ஆனால் அதற்கு நேர்மாறாக 


உலகின் எந்த நாட்டிலும் இல்லாத 


இந்தியாவின் எந்த மாநிலத்திலும் 


பார்த்திராத ,காண முடியாத ஒரு 


கேவலம் நிறைந்த அமைப்பு என 


ஒன்று உண்டென்றால் அதுவும் 


அரசே அதன் நிர்வாக பங்குதாரர் 


என்பது எவ்வளவு கேவலம். ஆம் 


நேயர்களே நாட்டு மக்களுக்கு, 


அவர்களது வாழ்க்கைத் தரம் உயர, 


அவர்களது பொருளாதார நிலை 


மென்மேலும் மேம்பட, வேலை 


வாய்ப்பு  வசதிகளை வளர்த்திட 


பெருக்கிட என்னென்ன திட்டங்கள் 


தீட்டுவது,தனி மனித வருவாய் 


அதை உயர்த்திட என்னென்ன வழி 


வகைகள் செய்தாக வேண்டும் 


விண்ணை முட்டி உயரும் விலை 


வாசி தனை எப்படி கட்டுப்படுத்த 


வேண்டும் என்றெல்லாம் ஆயிரம் 


ஆயிரம் மக்கள் நலத் திட்ட பணிகள் 


ஆற்ற வேண்டிய ஒரு அரசு இங்கே 


இந்த தாழ்ந்த தமிழகத்தில் சாராயம் 


காய்ச்சிக்கொண்டு அதை 


மக்களுக்கு விற்பனை செய்வதில் 


அக்கறை காட்டும் ஒரு மக்கள் 


விரோத அரசு நான் உள்ளபடியே 


சொல்லுகிறேன் இங்கே தான் 


இங்கே மட்டும் தான் நடைபெற்றுக் 


கொண்டு இறுக்கிறது " டாஸ்மாக் " 


என்னும் திருநாமத்துடன். ஏன் அரசு 


மதுவிற்பனை செய்ய வேண்டும் என 


கேட்டால் அதற்கு இந்த புண்ணிய 


கைங்கரியம்தனை இப்புவியில் 


அறிமுகம் செய்து வைத்திட்ட ஆட்சி-  


யாளர்கள் கூறிடும் காரணம் என்ன 


தெரியுமா அன்பர்களே !! அரசுக்கு 


வர வேண்டிய வருமானம் தனிப்பட்ட 


ஒயின் கடை ஏலத்துக்கு விட்டால் 


அப்போது இந்த பிராந்திக் கடை 


முதலாளிகள் யூனியன் அமைத்து 


அரசு பணத்தை அவர்கள் பங்கிட்டு 


கொள்வதைத் தடுத்திடவும் அரசே 


முழு வருமானத்தைப் பெற்றுக் 


கொள்ளவும் இந்த முடிவு எடுக்கப் 


பட்டு உள்ளதாக இவர்கள் டாஸ்மாக் 


உருவாகிடும் போது சொன்ன கருத்து 


இது. அப்படியானால் அரசுக்கு 


வருமானத்தை பெருக்குவது ஒன்று 


மட்டுமே இலட்சியம் என்று 


சொன்னால் இன்னும் எத்தனை 


எத்தனையோ வழிகள் உள்ளனவே. 


அதையும் ஆரம்பிக்கலாமே. மலிவு 


விலை உணவகங்கள் திறந்தது 


போல். அரசு மசாஜ் நிலையம், அரசு 


விலைமகளிர் பணி நிலையம், அரசு 


பெண்களே நடத்தி தரும்/கலக்கி 


தரும் ஊற்றி தரும் மதுபான பார்கள் 


இது போல இன்னும் பலவகையான 


தொழில்கள் அரசே நடத்த துணிந்து 


விட்டால் இந்த நாடு தான் எவ்வளவு 


வளம் பெரும்,அரசின் நிதி நிலை 


உயரும்,"வேலை"இல்லாத நிலை 


மறைந்து "எங்கும் தொழில்",எங்கும் 


"வேலை வாய்ப்பு" இதனையும் 


செய்திடலாமே. எங்கு நடக்க 


வில்லை விபச்சாரம். இந்த உலகம் 


தோன்றி அழியும் கடைசி நாள் வரை 


மது,மாது,சூது இவைகளை 


முற்றிலுமாக ஒழித்திட்டதாக எந்த 


அரசாலும் மார் தட்ட முடியாது. ஏன் 


என்றால் இந்த மூன்றும் 


சைத்தானின் கை ஆயுதங்கள் என்று 


இஸ்லாமிய பெருமக்கள் கூறிட 


நான் கேட்டு இருக்கிறேன்.அதனை 


சட்ட பூர்வமாக்கி அரசே இந்தத் 


தொழிலையும் ஏற்று நடத்தினால் 


எத்தனை பேர்கள் எந்த வித 


போலீஸ் பயமும் இன்றி 


நிம்மதியாக"தொழில்"செய்திடலாம். 


அரசுக்கும் பணம் தினசரி வந்து 


குவிந்து கொண்டே இருக்கும். 


அநேகமாக இங்கே நடத்தப்பட 


இருக்கும் அடுத்தகட்ட மக்கள் நலத் 


திட்டமாகக் கூட இந்த அரசு விலை 


மகளிர் பணிக் கூடம் இருக்கலாம். 


யார் கண்டது ? சரி இப்போது நாம் 


தலைப்பு சம்பந்தப் பட்ட விஷயம் 


செல்வோம்.தேசிய நெடுஞ்சாலை 


களில் அதிக அளவு விபத்துக்கள் 


ஏற்படுவதற்குக் காரணம் என்ன 


என்பதை ஆய்வு செய்திட மத்திய 


அரசால் அமைக்கைப் பட்ட ஒரு குழு 


கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக 


மத்திய அரசிடம் அறிக்கை 


ஒன்றினை தாக்கல் செய்தது. அதில் 


என்ன காரணம் இந்த அதிக அளவு 


விபத்துக்களுக்கு என்று பார்த்தால் 


தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 


டாஸ்மாக் கடைகள்தான் என்று ஒரு 


அறிக்கை சமர்பிக்க,அதனை உடனே 


அமல் படுத்த வேண்டும் என்று உச்ச 


நீதி மன்றம் ஆணை பிறப்பிக்கிறது. 


நேர்மையான அரசாக இருந்தால்  


செய்திருக்க வேண்டியதென்ன 


ஆணை கிடைத்த உடனே டாஸ்மாக் 


கடைகளை காலி செய்து பூட்டு 


போட்டு விட்டு மறு வேலை 


அல்லவா பார்த்திருக்க வேண்டும். 


அதனை விடுத்து எங்களுக்கு 6மாத 


கால அவகாசம் வேண்டும் கடையை  


மாற்ற என்றொரு மனு. பிறகு 


இன்னொரு மனு 1 ஆண்டு காலம்  


வேண்டும் இத்யாதி இத்யாதி 


காரணங்கள் . இது அரசாங்கத்துக்கு 


தேவையா? ஏன் இப்படி  வீராப்பு ? 


அதனால் தான் நான் இந்த 


விஷயத்தை சிந்தித்து இதையே ஒரு 


கட்டுரையாக தந்திடுவோம் என 


நினைத்தேன். அதை இப்போது 


நிறைவு செய்கிறேன். 


கோவிலுக்குபோடலாம்வழக்கு !! 


குடிக்கும் கடைக்கு போடணும் தலை 


முழுக்கு!! என்று தலைப்பு தந்து 


படைத்திட்டேன். பொறுமையுடன் 


கட்டுரையைப்  படித்த நேயர்களே/


இரசிகப் பெரு மக்களே 


அனைவருக்கும் நன்றி கூறி விடை 


பெறுகிறேன். அன்புடன் மதுரை T.R. 


பாலு.




No comments:

Post a Comment