தி.மு.க.தலைவர் திரு மு.கருணாநிதி அவர்களை தேடி வந்து ஆசி வழங்கிய சத்யசாய்பாபா அவர்களின் கருணையே கருணை.!!
உடல் மண்ணுக்கு !! உயிர் தமிழுக்கு !!
தமிழர்களாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்
ஆங்கிலமொழிகலப்பு ஏதுமின்றி !!
தமிழர்களுடன் உரையாடும்போது !!
அனைவருக்கும் எனது காலை
வணக்கம். உலகெங்கிலும்
வாழ்ந்துவரும் என் உயிரினும்
மேலாகநான்போற்றிவணங்கிவரும்
என்அன்புத்தமிழ் நெஞ்சங்களே ! !
உங்கள் அனைவரையும் நான்
மீண்டும் வணங்கி மகிழ்கிறேன் !!
எதிர் வரும் ஜூன் திங்கள் 3ம் தேதி
திங்கள் கிழமை தமிழினக் காவலர்
முத்தமிழ் அறிஞர் தமிழ்நாட்டின்
முதுபெரும் தலைவர் திராவிட
இனத்தின் வாழும் அடையாளச்
சின்னம் திருக்குவளை என்னும்
நல்லூர் நமக்குத் தந்த தங்கம் தமிழ்
அன்னை பெற்று எடுத்த தவச்
சிங்கம் கலைஞர் முத்துவேலர்
கருணாநிதி அவர்களின் 9௦ ஆவது
பிறந்த தேதி கொண்டாடப் படும் ஒரு
நல்ல சூழ்நிலையில் உலகினில்
எவருக்கும் கிடைத்திடாத பெருமை
எங்கள் தானைத் தலைவர் கலைஞர்
அவர்கள் மட்டுமே பெற்றுள்ளார்
என்ற விஷயத்தை உங்களில்
அனைவரது சிந்தனைக்கும் தெரிவிப்
பதில்நான்மிக மகிழ்சிஅடைகிறேன்.
கடந்த முறை கலைஞர் தமிழக
முதல்வராக பணி செய்துகொண்டு
இருக்கும்போது சென்னைக்கு குடிநீர்
வழங்க போதிய குடிநீர் ஆதாரமாக
அப்போது கருதப்பட்ட தெலுங்கு
கங்கை கூட்டு குடிநீர் திட்டம் (இது
ஆந்திர மாநில முன்னாள்
முதல்வராக இருந்த மறைந்த
N.T.ராமாராவின் அரசியல் வாரிசு
மாண்பு மிகு திரு சந்திரபாபு நாயுடு
அவர்களும் அப்போதும் தமிழக
முதல்வராக இருந்த கலைஞரும்
செய்து கொண்ட இருமாநிலங்களின்
நல்உறவுகளை பேணிப்பாதுகாத்து
வளர்த்தவர் கலைஞர் அவர்கள்.
அவர் குணம் அப்படி. அண்டை
மாநிலங்களோடு சுமுக உறவுகளை
வளர்த்துகொண்டு அவர்களொடு
இணக்கமாக இருந்து நம் தமிழக நீர்
ஆதாரத் தேவைகளை அவர்களிடம்
இருந்து மிகச்சாதுரியமாகப் பெற்றுத்
தருவதில் கலைஞருக்கு நிகர்
கலைஞரே. அவருக்கு அண்டை
மாநிலங்கோடு சண்டைக்கு
போகவும் தெரியாது. அவர்களை நீதி
மன்றத்திற்கு அலைக்கழித்து அந்த
மாநில அரசின் கோபத்திற்கும்
அதிருப்திக்கும் ஆளாவதும்
தெரியாது. அப்படி அண்டை
மாநில அரசோடு நாம் மோதும்
நிலை வந்தால் அங்கு வாழ்ந்து
வரும் நம் தமிழ் மக்களைப்பற்றி
அவர்களது எதிர்காலம்,அவர்களின்
வாழ்வு ஆதாரம் இவைகள் எந்த
விதத்திலும் பாதித்துவிடக்கூடாது
என்பதில் கண்ணும் கருத்துமாய்
இருப்பவரும் கலைஞர் அவர்கள்
மட்டுமே.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்
கடந்தமுறை தலைவர் கலைஞர்
அவ்ர்கள் தமிழக முதல்வராக
இருந்தபோது சென்னை மக்களின்
குடிநீர் ஆதாரமான அந்த தெலுங்கு
கங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு
மிகப் பெரும் நிதியை மாண்புமிகு ஸ்ரீ
ஸ்ரீ சத்யசாய்பாபா அவர்கள் வழங்கு
வதாக உறுதி அளித்திட்ட சூழலில்
இங்கே தமிழகத்திற்கு வருகை
புரிந்திடும் ஒரு நிகழ்வு நடை
பெற்றது. அப்போது சாய்பாபா
அவர்கள் கோபாலபுரத்தில் உள்ள
தலைவரின் வீட்டிற்கே நேரில்
வருகை தந்து தலைவர் கலைஞர்
அவர்களை சந்தித்து ஆசிகள்
வழங்கி பெருமைப் படுத்திய
சம்பவம் அப்போது மிகவும்
பரவலாக எல்லோராலும் பேசப்
பட்டது. லட்சக்கணக்கான பக்த
கோடிகள் பாபா அவர்களின் முக
தரிசனம் வெகு தொலைவில்
நின்று பார்த்தாலாவது நமக்கு
கிடைக்காதா என்று ஏங்கிப்
பெருமூச்சு வெளியிடும் சூழலில்
கலைஞரின் இல்லத்திற்கே நேரில்
சென்று அவரை அந்த தமிழ்த்தாய்
பெற்றெடுத்த தவப் புதல்வனை
வாழ்த்தி ஆசீர்வாதம் வழங்கி
இருக்கிறார் என்று சொன்னால் அது
எப்பேர்பட்ட மகத்துவம் நிறைந்த
செயல். இந்த பாக்கியம் தமிழகம்
மட்டும் இன்றி, அகில இந்தியா
மட்டும் இன்றி உலக நாட்டில் எந்தத்
தலைவருக்கும் கிடைத்திடாத அரும்
பெரும் பேறு என்று சொல்வதைத்
தவிர தமிழில் எனக்கு வேறு
வார்த்தை தெரியவில்லை எனது
அன்புத் தமிழ் நெஞ்சங்களே.
பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த
தலைவர் திரு வாஜ்பாய் அவர்கள்
இந்த நாட்டின் பிரதமராக இருந்த
போது அவர்கூட பாபா அவர்களை
அவரது புட்டப்பர்த்தி ஆசிரமத்திற்கு
சென்று தான் ஆசீர்வாதம் பெற்றார்
என்பது குறிப்பிடத்தகுந்தது
அன்பர்களே. அந்த காலத்தில்
வீணை S.பாலச்சந்தர் அவர்கள் கை
வண்ணத்தில் உருவான திரைப் படம்
" பொம்மை " என்னும் ஒரு படம்.
இதில் தான் பிரபல பின்னணிப்
பாடகர் திரு ஜேசுதாஸ் அவர்கள்
அறிமுகப் படுத்தப்பட்டார் என்பது
இந்த படத்தின் மற்றும் ஒரு
சிறப்பு.அதில் வரும் ஒரு பாடலில்
ஓரிரு வரிகள் வரும்.அதனை நான்
இப்போது கட்டுரையில் குறிப்பிட்ட
நிகழ்வுகளுக்கு பொருள் சேர்க்கும்
விதமாக இருக்கும் என்று கருதி
இங்கே அந்தப் பாடலை நான்
இப்பொழுது குறிப்பிடுகிறேன்.
வாசமலர் தனைத் தேடி !!
வண்டுதுதான் பறந்து வரும் !!
வண்டுதனைத் தேடி அந்த வாச மலர்
பறப்பதுண்டோ ?
என்று அந்தப் பாடல் வரிகள் போல
ஸ்ரீ ஸ்ரீ சத்யபாபா அவர்களது
ஆசீர்வாதம் பெற்றிட எத்தனை எத்த
னையோ கோடீஸ்வரர்கள் அரசியல்
பிரமுகர்கள் லட்சக்கணக்கான பக்த
கோடிகள் பாபா இருக்கும் இடம்தேடி
காத்திருந்து அவரிடம் ஆசி
பெற்றிடும் சூழலில் பாபா அவர்களே
தலைவர் கலைஞர் வீட்டுக்கு
வருகை தந்து அவரை வாழ்த்தி
ஆசிகள் வழங்கி இருக்கிறார் என்று
சொன்னால் அது தமிழுக்கு, அவர்
ஆற்றிய தமிழ்தொண்டுக்கு, அவர்
இதுவரை பொதுமக்கள் நலனுக்கு
தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணி-
-த்த தன்மைக்கு ஸ்ரீ ஸ்ரீ சத்ய பாபா
அவர்கள் தந்திட்ட அங்கீகாரம் தவிர
வேறு என்னவாக கருத முடியும் என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அவரது பிறந்த நாளை எழுச்சி
யோடும் மன மகிழ்ச்சி யோடும்
கொண்டாடிடுவோம்.
அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment