Friday, 26 July 2013

மனைவிமார்களை கணவன்மார்கள் தமது வசப்படுத்துவது எப்படி ?--ஒரு சிறு கருத்து விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது உயிரினும் மேலாக நான் 


போற்றி வணங்கி வரும் எனது 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 


உங்கள் அனைவருக்கும் எனது சிரம் 


தாழ்ந்த கரம் குவிந்தஅன்பு நிறைந்த 


வணக்கங்கள் பல.                           



இன்றைய தினம் சற்றே மாறுபட்ட 


ஒரு கோணத்தில் தலைப்பு 


ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் 


எனது சிந்தனைதனை செலவு 


செய்து அதனால் சமூகத்திற்குஎன்ன 


வரவு கிடைத்துள்ளது என்று 


பார்ப்போமா நேயர்களே !!               



பொதுவாக இந்த அதிவேக உலகச் 


சூழலில் கணவன்-மனைவி உறவு 


என்பது பணத்தின் அடிப்படையில் 


மட்டும் தான் நடைபெறுகின்றது 


என்பது நாம் மனவேதனையோடு 


ஒத்துக்கொள்ளவேண்டிய 


உண்மையே ஆகும். நாங்கள் 


வாழ்ந்தகாலம்என்றுசொல்லப்படும் 


சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு 


முன்புவரை அதாவது 197௦ --1975 


இவைகளுக்கு இடைப்பட்ட 


காலகட்டங்களில் கணவன்மட்டுமே 


பொருள் ஈட்டும் பணியில் இருப்பது 


வழக்கம். மனைவியாகப்பட்டவள் 


பாச உணர்வுகள் மேலோங்க 


குடும்பத்தை கட்டுச்செட்டாகவும் 


குழந்தைகளை நேச உள்ளத்தோடும் 


வளர்த்திடும் பெரும்பொறுப்பில் 


தங்களை முன்னிறுத்தி 


வாழ்ந்திருந்த காலம் அது. கணவன் 


பொருளீட்டி, அதனால்தான்குடும்பம் 


நடைபெறுகிறதுஎன்ற உள்ளுணர்வு 


மனைவிக்கு இருந்ததினால் அவள் 


எப்போதும் கணவனுக்கு 


கட்டுப்பட்டவளாக,கணவனை 


நேசிப்பவளாக, தனது இதயத்தில் 


வைத்து பூஜிப்பவளாக,மொத்தத்தில் 


கணவனே கண் கண்ட தெய்வம் 


என்று அந்தக்கால மனைவி மார்கள் 


வாழ்ந்துவந்ததினால் அவர்களை 


வசப்படுத்தவேண்டிய அவசியம் 


அந்தக்காலத்தில் வாழ்ந்துவந்த 


கணவன்மார்களுக்கு  இல்லாமல் 


இருந்தது.                         


ஆனால் இன்று நிலைமை அப்படி 


இல்லை. 


கணவனோடு மனைவியும் 


சேர்ந்து பொருள் ஈட்டினால்தான் 


குடும்பம் நடத்தமுடியும் என்ற 


நிலைமைக்கு உலகமே வந்துவிட்ட 


காரணத்தினால்பெண்கள்(மனைவி) 


ஆண்களுக்கு (கணவன்) மதிப்பு 


தருவதும் இல்லை முன்பு போல 


மரியாதையையும் 


கணவன்மார்களால் பெற முடிவது 


இல்லை. 


சரி.    இந்த   நிலைமையை 


எப்படி சமாளிப்பது? இது ஒன்று 


மட்டுமே இன்றையதினம் ஆண்கள் 


(கன்னவன்மார்கள்) முன்பு உள்ள 


பிரச்சினை. ஏறத்தாழ நாற்பது 


ஆண்டுகளாக இல்லறத்தில் 


நல்லறம் கண்டவன் என்ற 


முறையில் இன்றைய 


இளைஞர்களுக்கு 


(கணவன்மார்களுக்கு) பெண்களை 


(மனைவியை) வசப்படுத்துவது 


எப்படி என்ற இரகசியத்தை மூன்றே 


மூன்று மந்திரங்களின் மூலமாக    


உங்களுக்கு நான் தருகிறேன்.


நீங்க(கணவன்மார்கள்)மந்திரத்தை 


அவர்களை (மனைவிமார்களை) 


நோக்கி பிரயோகித்தீர்கள்  


என்றாலே போதுமானது. 


மனைவிமார்கள் கணவன்மார்கள் 


வசப்படுவது மட்டும் அல்லஅவர்கள் 


உங்களின் அடிமைகளாகஆகிவிடும் 


வாய்ப்புகள்கூட அதிகம் உண்டு!! 


அது என்ன ? விரைவில் 


விடைகளோடு உங்களை 


சந்திக்கிறேன். அதுவரை அன்பு 


வணக்கம் கூறி இந்த அளவில் 


பிரிகிறேன். மீண்டும் சந்திப்போம். 


விடைகளை நான் உங்களுக்கு 


தருகிறேன். அதன் பிறகு நீங்கள் 


சிந்திப்பீர்கள்.அதுவரைசின்னஞ்சிறு 


 **           இ   டை   வே   ளை.                 ** 


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment