உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவினில் உரையாடிடும் பொழுது!!
உலகம் முழுவதும் அன்பு, பண்பு,
பாசம், நேசம், உண்மை,
நேர்மை,சத்தியம்,சொன்ன வாக்கை
காப்பாற்றும் குணம் இந்த நல்ல
குணங்களை மட்டுமே தங்களது
அணிகலன்களாக பாவித்து அங்கு
இங்கு எனாதபடி வாழ்ந்து வரும் என்
அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே !!
முதற்கண் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
இன்று சற்று மாறுபட்ட கோணத்தில்
ஒரு தலைப்பினை தேர்ந்து எடுத்து
அதன் வழியே உங்கள் அனைவரது
சிந்தனையிலும் நான் இரண்டறக்
கலந்துவிட முடிவு செய்து அப்படி
ஒரு தலைப்பை தெரிவு செய்து
உள்ளேன் அன்புத் தமிழ் உடன்
பிறப்புகளே !!
பொதுவாக மனித வாழ்வினில் நாம்
பிறக்கும் தேதியினை ஓரளவு
தீர்மானம் செய்திடும் அறிவுதனைப்
படைத்திட்ட ஆண்டவன் நாம் இந்த
மண்ணுலக வாழ்வினை முடித்து
விண்ணுலகம் செல்லும் தேதியை
மட்டும்கைவசம் வைத்துக்கொண்ட
அந்த இறையருளின் சக்தியை நான்
என் சொல்வேன். நாம் அன்றாடம்
பயன் படுத்தும் மருந்துப் பெட்டிகள்
அதில் குறிப்பிட்டிருப்பதைப் போல
Date of MFG.xxxxDate of EXP.xxxx என்று
ஒவ்வொரு மானுடன் முதுகிலும்
நடு மையத்தில் இந்த விபரங்களை
முத்திரை குத்தி இருந்தால் நமக்கு
எவ்வளவு வசதியாக இருக்கும்
என்று எல்லாம் நான் நினைத்துப்
பார்ப்பது உண்டு.ஆனால் அப்படி
செய்தால் வாழ்கையில் ஒரு
சுவாரஸ்யம் இருக்காது
என்பதனாலேயேஅப்படிஇறையருள்
அது போல முதுகினில் முத்திரை
பதித்திட வில்லை.
சரி நேயர்களே !! நாம் இப்போது
தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயம்
பற்றி பேசுவோம்.
நிலை மாறும் உலகின் நிலைக்கும்
என்ற கனவில் வாழும் மனிதஜாதி.
ஆம்! அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
நிலை இல்லாத உலகினில்
தான் நாம் வாழ்ந்துகொண்டு
உள்ளோம் என்பதனை என்று
மனிதன் முழு மனதுடன்
ஒப்புக்கொள்கிறானோ
அன்றுமுதல் அவனிடம் இருந்து
அகந்தை,திமிர்,பழிவாங்கும்
உணர்வு,பணம் நம்மிடம் நிறைய
உள்ளது என்ற நினைவினால்
யாரையும் எவரையும்
மதிக்காத தன்மை இவைகள்
அனைத்தும் அவனிடம் இருந்து
போய் விடுகிறது அன்பர்களே. ஆக
நமக்கு இந்த இறப்பின் பெருமை
அவைகளை பற்றிய சிந்தனையை
அவ்வப்போது நாம் நமது நினைவு
அலையில்தயார் நிலையில் வைத்து
கொண்டு வந்தால் எதையும்
நம்மால் அமைதியோடு அணுக
முடிகிறது.இந்த இறப்பின் பெருமை
பற்றி கவியரசர் எழுதிய பல தத்துவ
பாடல்களில் சிகரமாக நான் இந்த
பாடலை எண்ணுகிறேன். மக்கள்
கலைஞர் என்று நம் எல்லோராலும்
பாராட்டப்பட்ட மறைந்த ஜெய் சங்கர்
அறிமுகக் கதாநாயனாக நடித்து
வெளிவந்த வெற்றிப் படம்தான்
ஜோசப் தளியத் தயாரித்து சிட்டாடல்
மூவீஸ் " இரவும் பகலும் " அதில்
மறைந்த நடிகர் S.A.அசோகன் தாமே
நடித்துதாமேதனது சொந்தக் குரலில்
பாடிய கீழே குறிப்பிட்டுள்ள பாட்டை
படித்தால் நமக்குள் உள்ள " தான் "
என்ற ஆணவம்,அகங்காரம்.திமிர்,
இவைகள் எல்லாம் நம்மை விட்டு
விடைபெற்று செல்வதனை நம்மால்
உணர முடிகிறது அன்புத் தமிழ்உடன்
பிறப்புகளே. இப்போது பாடலை
பார்ப்போம்:-
இறந்தவன சுமந்தவனும் !!
இறந்துட்டான் !!அதை இருப்பவனும்!
எண்ணிப்பார்க்க மறந்துட்டான் !!
பறந்துபறந்து பணம்தேடி !!
பாவக் குளத்தில் நீராடி!!
பிறந்துவந்த நாள் முதலாய் !!
பேராசையொடுஉறவாடிஇறந்தவன !!
** (அப்படி இறந்தவன)
தாயாரின்வேதனையில்பிறக்கிறான்
மனுஷன் தன்னாலே துடிதுடிச்சு ** இறக்கிறான் !!
இடையில் ஓயாத கவலையிலே ** மிதக்கிறான் !!
ஒருநாள் உடலை மட்டும் போட்டு ** எங்கோ பறக்குறான் !!
** (இறந்தவன)
இளமையிலே சில நாள் !!
முதுமையிலே சில நாள் !!
இன்பத்துலே சில நாள் !!
துன்பத்துலே சில நாள் !!
அன்னையும் மனைவியும் !!
அருமைப் பிள்ளையும் !!
கண்ணீர் சிந்திடவே !!
கடைசி வழி ஒரு நாள் !!
கடைசி வழி ஒரு நாள் !!
** (இறந்தவன)
என் அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!
உலகின் மொத்த ஜனத்தொகையில்
மிகவும்பெரும்பான்மையோர்
நிறைந்த கிறிஸ்துவ மதம்
மரணத்தைப் பற்றி என்ன
சொல்கிறது என்று பார்த்தால்
"பாவத்தின் சம்பளம் மரணம்"
என்றுசொல்கிறது கிறிஸ்துவ மதம்.
இரண்டாவது இடம் பெற்ற
இஸ்லாமிய மதமோ, மரணம் அது
மானுடம் செய்திடும் நன்மை தீமை
இவைகளின் அடிப்படையில் நிகழ்-
வதாகவே நான் கேள்விப்பட்டு
இருக்கிறேன்.
ஆனால் அதேசமயம் உலகில்
மிகவும் பழமை வாய்ந்த மதங்களுள்
ஒன்றான நம் இந்து மதம் மரணம்
பற்றி என்ன சொல்கிறது என்றால்
உலகில் பிறக்கும் ஒவ்வொரு
ஜீவனின் வாழ்கின்ற காலமும்
மரணமும் அது அந்த தாயின்
கருவறையில் உருவாகின்ற போதே
தீர்மானிக்கப் படுகிறது. அத்துடன்
கூட இந்தஜீவன்சென்ற ஜென்மத்தில்
செய்திருந்த பாவ புண்ணியங்களின்
அடிப்படையில் இந்தப் பிறவியில்
அந்த ஜீவனின் வாழ்வும் தாழ்வும்
அமைகிறது என்று அர்த்தமுள்ள
இந்து மதம்--கவியரசர்கண்ணதாசன்
எழுதியதில் நான் படித்தது. எனவே
அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே !!
கவி அரசரின் மற்றுமொரு பாடல்
வரிகளோடு எனது இந்த கட்டுரை
அதனை நான் நிறைவு செய்திட
ஆசைப்படுகிறேன்.
பொறப்பதும் போறதும் இயற்கை !! **
** சிலர் **
புகழ்வதும் இகழ்வதும் செயற்கை !!
பறப்பதும் பாய்வதும் வேட்கை-பணி
முடிந்ததும் ஓய்வது வாழ்க்கை !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இத்துனை நேரம் எனது இந்த மிக
மிக நீண்ட கட்டுரைதனை
பொறுமை நிறைந்த மனதுடன்
படித்த உங்களுக்கு எனது
நெஞ்சார்ந்த நன்றிதனை உங்கள்
பொற்கமல பாதங்களுக்கு
காணிக்கை செய்து நன்றி பாராட்டி
விடை பெறுவது உங்கள் அன்பன்
மதுரை TR. பாலு. வணக்கம் !! எனது
அன்பு நேயர்களே !! வாழ்வோம் நாம்
வளமுடன் !!
No comments:
Post a Comment