உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில் பேசிடும் பொழுது!!
அனைவருக்கும் இனிய காலைப்
பொழுதின் கண் கவர்ந்த
வணக்கம்.
பொதுவாக எங்களைப் போன்ற
அந்தக் கால நபர்களது வாழ்க்கை
நடைமுறைதனில் (ஏறத்தாழ
நாற்பது ஆண்டுகாலம் முன்பாக)
ஆண்கள் சமையல் அறைக்குள்
செல்வதே மரியாதை குறைவான
செயலாகக் கருதப்பட்ட காலம் அது.
ஆண்கள் " ஆண்களாக "
வாழ்ந்திருந்த காலம்அது எங்கள்
பொற்காலம்.அதுபோல பெண்களும்
பெண்களாகவே இருந்த காலமும்
அந்தக் காலம்தான். 1௦௦க்கு 1௦௦
விழுக்காடு பெண்கள் படிப்பு
என்பது மிஞ்சிமிஞ்சிப்போனால்
உயர்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு
வரை மட்டுமே. அதை
முடிப்பதற்குள்ளாகவே அவர்களின்
திருமணம் நடந்து முடிந்துவிடும்.
அதனால் பெண்களது வேலை
முழுக்க முழுக்க கணவனைப்
பேணுவதிலும் குடும்பத்தினை
நிர்வகிப்பதிலும்
அந்தக் காலப் பெண்கள் மிகச்
சிறந்து விளங்கினார்கள்.
அவர்களிடம்(அந்தக் கால
பெண்கள்)
என்னென்ன இருந்தது என்பதையும்
எவைஎவைஇல்லாதது
என்பதையும்
கீழே பட்டியல் இட்டு காட்டுவதில்
அந்தக் கால ஆண்கள் வரிசையில்
இருந்தவன் என்ற வகையில் நான்
மிகவும் பெருமைப் படுகிறேன்.
அந்தக்காலபெண்களிடம்இருந்த
அம்சங்கள் இவை :-
1) பெண்களிடம் இருக்க வேண்டிய
முக்கியமான அம்சங்களான
அச்சம்,மடம்,நாணம், பயிர்ப்பு ஆகிய
குணங்கள் இருந்தது.
2) கூட்டுக்குடும்ப வாழ்க்கை.
இன்பம் மற்றும் பாதுகாப்பு நிறைந்த
வாழ்வின் நெறிமுறைகள்.
3) மூத்த குடும்ப உறுப்பினர்களிடம்
பயம் கலந்த மரியாதை கொடுத்து
தாங்களும் பெற்று வாழ்ந்த நிலை.
4) குடும்பப் பாங்கான உடை உடுத்தி
(சேலை அணிவது மட்டும்தான்)
நன்கு தேங்காய் எண்ணை தடவி
தலைமுடியை தளைய பின்னிவீட்டு
சமையல் பணிகளை தாமே முடித்து
வீட்டில் உள்ள மாமியார், மாமனார்,
நாத்தனார், இவர்களுக்கு எல்லாம்
தாமே தமது கையால் உணவு
பரிமாறி அவர்கள் திருப்தியாக
உண்பதைக் கண்டு வீட்டுக்குவந்த
மருமகள் தம் பசி தீர்ந்தவளாக
வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
5) மாலை மணி 3.3௦ஆனவுடன் தாம்
பெற்ற அன்புச்செல்வங்களை பள்ளி
சென்று தாமே அந்தப் பிஞ்சுக் கரம்
தொட்டு வீட்டுக்கு வந்துசேர்வது.
6) அலுவலகம் சென்று கடமை
முடித்து வீட்டுக்கு வரும் கணவரை
அன்பு ஒழுக அவருக்கு பணிவிடை
செய்து கணவர் மனம் மகிழ்ந்திடும்
வண்ணம்அவர்என்னசொன்னாலும்
எப்பொழுது சொன்னாலும் எப்படி
சொன்னாலும் அவர் சொல்படியே
கேட்கும் மனையாள். இதைவிட
சொர்க்கமா பெரியது ?
7) கணவனின் பெயரை சொல்வது
மகா மகா பாவமாக கருதப்பட்ட
காலம் அது. ஏங்க,இல்லை என்றால்
என்னங்க என்று மட்டுமே மனைவி
கணவனை அழைத்து கணவன்
என்னும் பதவிக்கு மேலும் பெருமை
சேர்த்த மனைவி. இன்னும்
இதுபோல் எத்தனயோ
சொல்லிக்கொண்டே போகலாம்.
கால அளவு குறித்து இத்துடன்
நிறைவு செய்கிறேன்.
அடுத்து அந்தக் கால பெண்களிடம்
இல்லாத தன்மைகள்/குணங்கள்.
(அதாவது அதுதான் இந்தக்
காலத்தில் இருக்கும் பெண்களிடம்
இருக்கும் தன்மைகள்/குணங்கள்.)
1)அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு,
இதுபோன்ற பெண்மைக்கு உரிய
எந்த விதமான அடிப்படையான
அணிகலன்கள் எதுவுமே இல்லாது
திரிந்து கொண்டிருக்கும் பழக்கம்.
2) திருமணமாகி கணவன் வீட்டுக்கு
வந்த கொஞ்ச நாளிலேயே
புருஷனை தனது கைக்குள்
சுருட்டிக்கொண்டு தனிக்குடித்தனம்
செல்ல எத்தனிக்கும்
அடாவடித்தனம் நிறைந்த
அகங்காரமான போக்கு.(அப்போது
தானே தனது வீட்டு சொந்தக்
காரர்களை இஷ்டம் போல தனது
தனிக்குடித்தன வீட்டிற்கு
வரவழைத்து சந்தோஷமாக
இருப்பதுடன் புருஷன் என்ற
பெயரில் வந்துள்ள சம்பளம்
இல்லாத அடிமையிடம் இஷ்டம்
போல வேலை வாங்கிக்
கொள்ளலாம் அல்லவா?)
3) தனது கணவர் வீட்டு மூத்த
உறுப்பினர்களை கண்டும்
காணாதுபோல நடிப்பது (மாமனார்,
மாமியார், நாத்தனார்,கொழுந்தனார்
ஆகிய எல்லோரையும் பரம எதிரி
போல பாவிக்கும் குணம்.
4) நவ நாகரீக மோகம் நிறைந்த
ஆடைகளை முற்றிலும் விரும்பி
அணிவது. உணர்சிகளை
தூண்டிவிடும் உடைகளையே
வேண்டும் என்றே அதிக விலை
கொடுத்து வாங்கி அணிந்திடும்
குணம். சேலை ஒன்றினைத் தவிர
ஏனைய உடைகள் எல்லாமே
அணிவது. தலை முடியை
விரித்துப்போடு அதற்கு HAIR
STRAIGHTENING என்ற
பெயர்கொடுத்து இழவு வீட்டினில்
பெண்கள் தலைமுடியை
விரித்துப்போட்டு இருப்பதை
நினைவு படுத்திடும் சிகை
அலங்காரம். இது எதையுமே
கண்டும் காணாமல் இருக்கும்
கணவனின் அடங்கிப்போகும்
குணம். யோவ். மாசா மாசம்
சம்பளம் கொடுக்கிறாள்
இல்லையா.சும்மாவா?
5) தானும் வேலைக்கு சென்று
சம்பாதிக்கிறோம் என்ற திமிரான
குணத்தின் அடிப்படையில் பெற்ற
குழந்தைகளைகூட பேண நேரம்
இல்லாதவள் போல பாவனை
செய்து நடிப்பது. கணவனை
கருத்திலேயே கொல்லாமல்
அவனைக் கவனிக்கக் கூட நேரம்
இல்லாமல் தவிப்பதுபோல
கணவனிடமே நடிப்பது.
6) புருஷன்காரன் என்ன
சொன்னாலும் அதைத் தவிர
மீதியை மட்டுமே கேட்பது கணவன்
புத்திமதி சொன்னால், ஹலோ உங்க
வேலையைப் பாருங்க பெரிய புத்தி
சொல்ல வந்துடீங்க என்று எதுக்கு
எடுத்தாலும் கணவன்மீதும்
கணவனைச் சேர்ந்த குடும்பத்தினர்
மீதும் எடுத்து எரிந்து விழுந்து
அவர்களை தமது இருப்பிடத்திற்கே
வரவிடாமல் விரட்டி அடிக்கும்
அரசியல் சாதுரியகுணங்கள்.
7) கணவனை பேரைச் சொல்லி
கூப்பிடா விட்டால் இந்தக்கால
பெண்களுக்கு தூக்கமே வருவது
கிடையாது. அதிலும் இன்னும் ஒரு
படி மேலே போய்,"டேய்"
வாடா,போடா, மாமு,மச்சான் அப்படி
இப்படி எல்லாம் அடைமொழி
போட்டு கூப்பிட்டு அவர்களுக்குள்
இருக்கும் அந்தரங்க உறவை
சபைக்கு வெளிச்சம்போட்டுகாட்டி
நடித்திடும் குணம்.
ஏய் !!இந்த விளக்கம் போதுமா !!
இல்லை
இன்னும் கொஞ்சம் வேணுமா !!
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே.
பெண்மையின் மேன்மை மற்றும்
மென்மை மறைந்து போனதற்கு
காரணம் இந்தக் காலப் பெண்கள்
தாங்களும் வேலைக்கு சென்று
சம்பாதிப் பதால்தான் குடும்பமே
நடைபெறுகிறது என்ற தற்பெருமை
உணர்வு உண்மை குடும்ப
உறவுகளை வேரறுக்க செய்வதுடன்
கணவன் அவன் உண்மையிலேயே
எடுபிடி போலவே நடத்தப்படுகிறான்
என்பதேமுற்றிலும்உண்மை.முழுக்
காலும் உண்மை என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே.
இந்த நிலை என்று மாறுமோ?
மாறாதையா மாறாது.
மனமும் குணமும் மாறாது.
மீண்டும் நாளை வேறு ஒரு
தலைப்பினில் உங்கள்
அனைவரையும் சந்திக்கிறேன்.
அதுவரை உங்கள் அனைவருக்கும்
அன்பு வணக்கம் கூறி விடை
பெறுவது உங்கள் அன்பன் மதுரை
TR. பாலு. வணக்கம் நேயர்களே!!
No comments:
Post a Comment