உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடிடும் பொழுதிலே!!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலான அன்புத் தமிழ்
உடன் பிறப்புகளே !!
இன்றையதினம்காலைதற்செயலாக
நான் கலைஞர்தொலைக்காட்சியை
காணக்கூடிய வாய்ப்பினைப்
பெற்றேன். அப்போது எதிர் வரும்
கால கட்டத்தில் காண்பிக்க
இருக்கும் ஒரு நெடுந்தொடர் பற்றிய
விளம்பரம் ஒன்று பார்த்தேன்.
அளவுக்குமீறிஆண் இனத்தை
கேவலப்படுத்தியும், அதிகமாக
பெண்இனத்தைதிமிர்பிடித்தவர்கள்
என்பது போலவும் ( அது ஓரளவு 9௦
விழுக்காடுகளுக்கு மேல் உண்மை
என்றாலும் கூட அதை
மேடைபோட்டு வெளிச்சம்
காட்டவேண்டுமா ? அதுவும் உலகு
புகழ் தொலைக்காட்சியான
"கலைஞர்" தொலைக்காட்சியில்)
குழந்தைகளை அடங்காத பிசாசுகள்
போலவும் வீட்டு மனைவிமார்களை
ஏதோ குடும்பத்தை கவனிக்காமல்
பொறுப்பில்லாதவர்கள் போலவும்
(அந்த விளம்பரத்தில் ஒரு பெண்
ஆண்கள் இனத்தைப் பார்த்து
கேட்பது போல:- ஹலோ!!லூசாப்பா
நீ!! அந்தக் காலம் எல்லாம் மலை
ஏறிப்போச்சு!!என அந்தப் பெண்
திமிர் பிடித்தவள் போல பேசுவதும்
அதற்கு அவளுடன் கூட இருக்கும்
பெண்கள் தலை ஆட்டுவதும் )
காண்பிக்கப் படும் காட்சி என்னைப்
பொறுத்தவரை தமிழ்ப் பெண்கள்
இனத்தினையே கேவலப்படுத்துவது
போல நான் உணர்கிறேன். அந்த
விளம்பரத்தில் வருவது போல இந்த
நாட்டில் 2௦ விழுக்காடுகளுக்குள்
உள்ள சில பெண்கள் என்ற
போர்வையில் வாழ்ந்துவரும்
பிசாசுகள் இருக்கலாம். நான்
இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் அதற்காக மீதம் இருக்கும்
எண்பதுவிழுக்காடு தமிழ்ப்பண்பாடு
உள்ள பெண் குலத்தினை நமது
கலைஞர் தொலைகாட்சி
கேவலப்படுத்தி ஏதோ ஒட்டுமொத்த
இந்தக் கால பெண்கள்
அனைவருமே அந்த
நெடுந்தொடரில்
வரும் பிசாசுகளுக்கு சமமாக
காட்டுவது சரியாகத்
தெரியவில்லை. எனவே இந்த
தொடரை சற்றே மாற்றி
அமைத்தால் நன்றாக இருக்கும்.
மக்கள் சிரிக்க வேண்டும்
என்பதற்காக எதை
வேண்டுமானாலும் காட்டலாம்
என்ற அடாவடித்தனமான முடிவு
ஏனைய தொலைகாட்சி
நிறுவனங்கள் வேண்டுமானால்
கடைப் பிடிக்கட்டும். நாம் தமிழ்
பண்பாடு பற்றி பேசுபவர்கள் மட்டும்
அல்ல அதை வாழ்விலும் கடைப்
பிடிக்க வேண்டும் என்பதனை தனது
வாழ்நாள் லட்சியமாக வைத்து
வாழ்ந்துவரும், செயல்பட்டுவரும்,
எங்கள் தானைத்தலைவர்
முத்தமிழ்
அறிஞர் "கலைஞர்" பெயரை
வைத்துக்கொண்டு உள்ள நீங்கள்
காண்பிக்கக் கூடாது.
படிப்பது இராமாயணம்!!
இடிப்பது பெருமாள் கோவில்!!
என்ற சொல்லுக்கு நாம்
உதாரணமாக ஆகி விடக் கூடாது.
நானும் திராவிட இனத்தினைச்
சேர்ந்தவன்தான். எனது 1௦ வயது
முதல் கழகப் பணி செய்து
வருபவன்.
எனக்கு இப்போது வயது 6௦.
தலைவர் கலைஞர் அவர்களே!!
நீங்கள் நேரடியாக தலை இட்டு
இந்த பண்பாட்டுக்கு வேட்டு
வைக்கும் நெடுந்தொடரை மாற்றி
அமைத்திட ஆவன அனைத்தும்
செய்திட ஆணை பிறப்பிக்க
வேண்டுமாய் அன்புடன்
கேட்டுக்கொள்ளும் உங்கள் அன்பு
உடன் பிறப்புகளுள் ஒருவன்
மதுரை TR.பாலு.
எனது அன்பு வேண்டுகோள்
தலைவர் அவர்களால் ஏற்றுக்
கொள்ளப் படும் என்ற
நம்பிக்கையுடன் இந்த
கட்டுரைதனை நான் நிறைவு
செய்கிறேன். நன்றி!! வணக்கம் !!
அன்புடன். மதுரை TR. பாலு.
No comments:
Post a Comment