உலகம் முழுவதும் உள்ள
உண்மைத் தமிழர்களுக்கு மதுரை
TR.பாலுவின் வணக்கம். எமது
வாலிபக் கவிஞர் வாலி நேற்று
மரணம் அடைந்ததால் மனம்
மிகவும் வேதனைப்பட்டு கண்கள்
குளம் ஆகி அதோடு கூட இதயம்
கனத்து அட! என்னடா !!பொல்லாத
வாழ்க்கை!!என்ற"தப்புத்தாளங்கள்"
திரைப்படத்தில் மறைந்தகவியரசர்
கண்ணதாசன் எழுதிய பாடலின்
வரிகளுக்கு ஏற்ப வாலிபக் கவி
வாலியின் வாழ்வும் நடந்து
முடிந்தது. அன்னார் ஆன்மா சாந்தி
அடைய நாம் அனைவரும் ஒருசேர
ஒருநிமிடம் மௌன அஞ்சலி
செலுத்தி இறைவனிடம்
பிரார்த்திப்போம். மறைந்த கவிஞர்
வாலி 1958ஆம் ஆண்டு திரைப்படத்
துறையில் தனது கால் பதித்து
இருந்தாலும் கூட வாலிஎன்றதொரு
"புதுமைப்பெயர்கொண்ட கவிஞர்"
தமிழ்த் திரைபடத்துறைதனில்
உள்ளே நுழைந்து வெற்றிக் கொடி
பறக்கவிட ஆரம்பித்துள்ளார் என்ற
செய்தியை அவருக்கு மனமதில்
மகிழ்வோடு நல்ல பெயர் வாங்கித்
தந்த படம்தான் கலைஞர்
அவர்களால் புரட்சி நடிகர் என்ற
பட்டம் பெற்ற மக்கள் திலகம் MGR
நடித்து பேரறிஞர் அண்ணாஅவர்கள்
கதை வசனம் எழுதி சிறப்பித்த
"நல்லவன் வாழ்வான்" என்ற படம்
மூலமாகத்தான். அதில் வாலி
எழுதிய முதன்முதல் பாடல்தான்
சிரிக்கின்றாய்!!இன்று சிரிக்கின்றாய்
சிந்திய கண்ணீர் மாறியதாலே !!
என்ற பாடல் மூலமாகத்தான் அவர்
பெயர் எங்கும் பரவக் காரணாமாக
அமைந்திருந்தது என்று சொன்னால்
அது மிகை அல்ல.அந்தப் பாடலை
வாலி எழுதிமுடித்தவுடன் அதை
இயக்குனர் அவர்கள் அந்தப்
பாடலை படத்தின் வசனகர்த்தா
பேரறிஞர் அண்ணாவிடம் ஒப்புதல்
பெற வேண்டி அனுப்பினார். உடனே
வாலி மனதில் பயம். எங்கே பாடல்
தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்
பட்டுவிடுமோ என்று. அண்ணாஅந்த
வாலி எழுதிய பாடலை கவனம்
மிகக் கொண்டு ஆய்வு செய்து சில
குறிப்புகளுடன் இயக்குனருக்கு
திருப்பி அனுப்பினார். அப்போது
இயக்குனரின் அருகினில் இருந்த
வாலி தாம் எழுதி,அண்ணா
திருத்தம் செய்த பாடலை,
இயக்குனர் பார்க்கும் அந்தநேரத்தில்
எட்டிப் பார்கிறார். சிவப்பு
மைகொண்டு அண்ணா
பலஇடங்களில் கோடிட்டு
காட்டியும், பல வார்த்தைகளை
வட்டமிட்டும் அடையாளம் செய்து
இருந்ததைக் கண்டவுடன் பயம்
அதிகரித்தது வாலிக்கு. பாடல்
நிராகரிக்கப் பட்டுவிடும் என்றே
மனதில் எண்ணிய வேளையில்
இயக்குனர் வாலியின் கைகைளைப்
பிடித்து, அய்யா,சிறப்பாக அமைந்து
இருக்கிறது என்று அண்ணாவே
தங்களை பாராட்டியதுடன்
வட்டமிட்டுக்காட்டிய சில
வார்த்தைகள் கண்டிப்பாக பாடலில்
இடம்பெற்றே ஆக வேண்டும் என்று
சொன்னதை சுட்டிக் காட்டியவுடன்
வாலியின் மனத்தில் பொங்கிய
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அண்ணா சுட்டிக்காட்டிய
வார்த்தைகள் ( உதய சூரியன்எதிரில்
இருக்கயில் உள்ளத் தாமரை
மலராதோ) (எதையும் தாங்கும்
இதயம் இருக்கையில் இருண்ட
பொழுதும் புலராதோ)
கவியரசர் கண்ணதாசனிடம் வாலி
பரிசு பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு
நாளைய "எண்ணத்தில்
தோன்றியவை" வலைதளத்தில்
கண்டு மகிழ்வோம். ஒரு சிறிய
"இடைவேளை"
நாளைசந்திப்போம். (தொடரும்)
அன்புடன்.மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment