உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசிடும் சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடிடும் பொழுது!!
உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என்
உயிரினும் மேலாக நான் போற்றி
வணங்கி வரும் எனது அன்புத் தமிழ்
உடன்பிறப்புகளே !!
முதலில் உங்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
கலந்த வணக்கங்களை காணிக்கை
செய்து மகிழ்கிறேன் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!!
எல்லாம் வல்ல இறைவன் அருளால்
இந்த பூமி,அனைத்து ஜீவ ராசிகள்,
புல், பூண்டுமுதல், செடி, கொடி, மரம்,
தொட்டுமானுடனோடுஅத்தனையும்,
எல்லாம் வல்ல இறைவனின்
அருந்தவ படைப்புகளே.
படைத்தான் படைப்பெல்லாம்
மனுவுக்காக!! மனுவைப்படைத்தான்
தன்னை வணங்க!! இது கிறிஸ்துவ,
இஸ்லாமிய மதங்களைப்
பின்பற்றும் மக்களின் அசைக்க
முடியாத நம்பிக்கை. இது ஒரு புறம்
இருக்க அப்படிப்பட்ட இறைவனின்
அருந்தவ படைப்புகளில் மரங்களது
பல்வேறு வகைகள் என்று எத்தனை
எத்தனையோ வகை மரங்கள் இந்த
பூமியில் உள்ளது. அந்த அத்துணை
வகை மரங்களுள் இந்த தென்னை
மரம் மட்டும் தனித்தன்மை, சிறப்பு
நிறை தனிப்பெருமை குணங்களை
தனக்குள் வளர்த்துக்கொண்டுள்ள
பெருமை இந்த ஒரே ஒரு மரமான
தென்னைக்கு மட்டுமே உண்டு
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அது என்னப்பா அப்படி பெரிய
பெருமை. எங்களுக்கு எல்லாம்
தெரியாதது. உனக்கு மட்டும்
தெரிஞ்சது. சொல்லு ராஜா சொல்லு .
சொல்றேன். சொல்றேன். அதுக்குத்
தானே இந்த அர்த்த ராத்திரியில்
உங்க எல்லோருக்கும் அறிவுநன்கு
வளர்ந்திட இந்த அர்த்த இராத்திரி
வேளையில் (இந்திய நேரம் இரவு
11.3௦ மணிக்கு )மடிக்கணினி மூலம்
தொண்டு செய்துகொண்டு உள்ளேன்
என் அன்பு உடன் பிறப்புகளே !!
தலைப்புக்கு சிறு கருத்து விளக்கம்:-
மரங்களில்ஆயிரம்வகைகள்
உண்டு.ஆனால்அவை அத்தனையும்
பெற்றிடாத தனிச்சிறப்பு இந்தத்
தென்னை மரத்திற்கு மட்டுமே
பெற்றுத் தந்தது, படைத்தவன்
தென்னைக்குத் தந்த தனிச் சிறப்பு.
அது என்னவென்றால் இந்தத்
தென்னை மரம் ஒன்றுக்குத்தான்
"பிள்ளை"என்ற பட்டம் தரப்பட்டு
உள்ளது அன்பர்களே. ஏன்,எதற்காக
என்றால் அன்பர்களே !! தன்னை
அரும் பாடு பட்டு தினசரி நீர் பாய்ச்சி
உரம் வைத்து பூச்சிகொல்லி மருந்து
தெளித்து கண்ணுக்கு கண்ணாக
சீராட்டி பாராட்டி வளர்த்த அந்த
நல்ல மனிதர்களுக்கு இந்த
தென்னை மரம் ஒன்று மட்டும்தான்
தனது ஆயுட்காலம் வரை பல
வகையிலும் பலன்களை வாரி வாரி
வழங்கிக்கொண்டே இருக்கும்
ஆற்றல்,வல்லமை கொண்ட
தன்மை படைத்ததாக இருக்கும்
தன்மை கொண்டது. இந்த மரத்தை
நாம் எப்படி வளர்க்கிறோமோ அதே
பாணியில்தான் நாம் நமது வழித்
தோன்றல்களை (வாரிசுகளை)
வளர்க்கிறோம்.
அந்தக் கால நிலவரம்:-
நாம் வளர்த்த பிள்ளைகள், நாம்
அவர்களை எப்படி இந்த தென்னை
மரத்தை அந்த மரத்தின்
சொந்தக்காரர் எவ்வளவு சிரமப்பட்டு
வளர்த்தாரோ அதைவிட ஒருபடி
மேலே கண்ணும் கருத்துமாக
வளர்த்ததால் அந்தக் கால
பிள்ளைகளும் தாய் தந்தை
இவர்களுக்கு கட்டுப்பட்டு
அமைதியுடன் பொறுமையுடன் அந்த
இருவருக்கும் வேண்டிய வசதிகள்
அனைத்தும் செய்து கொடுத்து தாய்
தந்தை இவர்களை மேலே சொன்ன
தென்னைமரம் எப்படி
வளர்த்தவர்களை மறக்காமல்
அவர்களுக்கு பலன் தருகிறதோ அது
போல அந்தக் காலத்தில் பெற்ற
பிள்ளைகள்,தாங்கள் பொருள்
சம்பாதிக்கத் துவங்கினதும்,
பெற்றோர்களை மறக்காமல்,
அவர்களின் நலன் மேல் முழு
அக்கறை காட்டி, நன்றி, விசுவாசம்,
என்ற உணர்வுகளின்
அணிகலன்களாக,நாம் பெற்ற
பிள்ளைகள் வாழ்ந்திருந்த காலம்
என்று ஒன்று இருந்தது. இன்றும் கூட
அப்படிப்பட்ட நல்ல பிள்ளைகள்
இங்கே இருக்க்கத்தான்
செய்கிறார்கள். ஆனால்
எண்ணிகையில் நாளொரு
மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக குறைந்து கொண்டே
வருவதுதான் மிகவும் வருத்தத்திற்கு
உரியது. ஆக இந்தக் காலத்துப்
பிள்ளைகள் அந்த அளவு தாய்,
தந்தையரிடம் பாசம் காட்டாமல்
வாழ்கிறார்கள் என்றால் அது அப்படி
பட்ட பிள்ளைகளை பெற்ற
பெற்றோர்களது ஜாதகக்
கோளாறாகத்தான்
இருக்கவேண்டுமே ஒழிய வேறு
ஒன்றும் இருந்திட நீதி இல்லை
அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே. ஆக
இது தான் தென்னை மரம் மற்ற
மரங்களைவிட பெற்ற தனிச்
சிறப்பின் தத்துவார்த்த விளக்கம்.
பொதுவாக தமிழில் ஒரு சொல்
வழக்கு என்று ஒன்று உண்டு.
"தென்னையை வச்சவன் தின்னுட்டு
சாவான் !! பனையை வளர்த்தவன்
பாத்துட்டுச் சாவான் "!!
நாம உழைக்கும் உழைப்புக்கு
நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு
இந்தத் தென்னை மரமும் பனை
மரமும் மிகச் சிறந்த உதாரணம்
ஆகும். தினசரி கவனித்து நீர் பாய்ச்சி
வளர்த்ததினால் அந்த தென்னை
மரமும் நமக்கு பிற்காலத்தில்
தினசரி பலன்களை தருகிறது.
ஆனால் அதே சமயம் இந்த பனை
மரம் வளர்ப்பதில் சிரமம் என்பது
கிஞ்சித்தும் கிடையாது. ஆத்தோர
மணலில் பனம் பழத்தினினை நட்டு
வைப்பதோடு சரி. வேறு நாம் எந்த
உழைப்பும் உழைக்காத
காரணத்தால் அந்த பனை மரமும்
நமக்கு அப்படிக்கு அப்படித்தான்
பலனும் தருகிறது.
இறதியாக இப்போது நாம்
கட்டுரையின் இறுதிப் பக்கத்திற்கு
வந்துவிட்டோம்.நாம் பெரும்
பிள்ளைகள் நமக்குத் தென்னை மரம்
போல பலனைத் தருவதும் பனை
மரம் போல பலனைத் தாமதமாகத்
தரும் பிள்ளைகளை பெறுவதும்
அவரவர் பெற்றோர்கள் ஜாதகத்தின்
அடிப்படையில் நடக்கும் பலன்களே
ஆகும்.
மீண்டும் நாளை சந்திப்போமா என்
அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!
நன்றி!! வணக்கம்!!
அன்புடன் மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment