Thursday, 25 July 2013

திரைப்பட நடிகை மஞ்சுளா மரணம்--ஒரு கருத்தாய்வு !!







உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகத்தமிழர்கள் அனைவருக்கும் 


எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 


மற்றும் அதனோடு இணைந்த நன்றி 


கலந்த வணக்கங்களும். நிற்க!     



நேற்றுமுன்தினம்(23-௦72௦13) நடிகை 


மஞ்சுளா (நடிகர் விஜயகுமார் 


அவர்களின் இரண்டாவது மனைவி 


என்ற பொறுப்பை ஏற்று செயல் 


பட்டவரும், கடந்த   197௦-1980 ஆக 


இந்த 1௦,11 ஆண்டுகளாக தமிழ்த் 


திரை உலகை  நன்றாக "கலக்கு 


கலக்கு" என  கலக்கி   நடித்து 


வாழ்ந்தவருமான  முன்னாள் 


தமிழ்த் திரைப்பட உலகின் 


முன்னணிக்  கதாநாயகியாக வலம் 


வந்தவரும்  புரட்சி நடிகர் என்று 


தமிழ்இனத்தலைவர் திருமு.கருணா


-நிதி அவர்களால்பட்டம் பெற்ற 


M.G.R., அவர்தம்  " அன்புக்கு உரிய "


நடிகையாகவாழ்ந்திருந்த மஞ்சுளா, 


மரணத்தைத் தழுவிய துக்ககரமான 


சேதிகேட்டுஆழ்ந்த துயரம்அடைந்த 


ஆயிரம் ஆயிரம் அந்நாள் தமிழ் 


ரசிகப் பெருமக்கள் மன வருத்தம் 


அடைந்ததை என்னால் காண 


முடிந்தது என் அன்புத் தமிழ்  உடன் 


பிறப்புகளே!!



மறைந்த MGR.சிறப்பாக நடித்து 


அந்நாளில் வெளிவந்த "சிரித்து 


வாழ வேண்டும் "என்ற வண்ணத் 


தமிழ் காவியத்தில் ஒரு சிறப்பான 


பாடல், மறைந்த,  மதுரை மண் 


ஈன்றெடுத்த, தவப் புதல்வன், 


T.M.சவுந்திரராஜன், பாடலைப் பாட, 


அதற்கு மக்கள் திலகம் வாய் 


அசைக்க,கூடவே முதுபெரும் 


பாடகர் /கலைஞர் நாகூர் அனிபா 


அவர்கள், உடன் பாடிட அந்த பாடல் 


வரிகள் காணீர் :-



கண்ணை மறைத்தென்ன விதை 


போட்டாலும், போட்ட விதை 


என்னவென்று மரம் வளர்ந்து 


காட்டாதோ ?                                           


கண்ணை மறைத்தென்ன 


காரியத்தைச் செய்தாலும் 


காலக்கணக்களவன் காட்டி வைக்க 


மாட்டானோ ?                                             


என்று தனது எட்டு கட்டை உயர்ந்த 


நிலை சாரீரத்தில் (HIGH PITCH 


TONE)முதுபெரும் பாடகர்/கலைஞர், 


அந்நாளும் சரி,இந்நாளும் சரி, இனி 


வரும் என்னாளாக இருந்தாலும் சரி, 


திராவிட முன்னேற்றக் கழகம் 


ஒன்றுதான்தனதுஅரசியல்இயக்கம், 


தமிழினத்தலைவர் திருவாரூர் 


முத்துவேலர் கருணாநிதி அவர்கள் 


மட்டுமே தனது வழிகாட்டி, தலைவர்,


என்றகொள்கைமுடிவோடு  தனது9௦ 


வயதிலும் கட்டுப்பாடு நிறைந்த 


வாழ்க்கை வாழ்ந்துவரும், எந்தவித 


கெட்ட பழக்கமும் இல்லாதவரும் 


அனுதினமும் 5 வேளை தொழுகை 


செய்து அல்லாவை வணங்கி 


வருபவரும் ஆக இத்தனை நல்ல 


குணங்களை தன்னகத்தே கொண்ட 


உத்தமர்நாகூர்EM.ஹனீபா அவர்கள் 


பாட, அடுத்து T.M.S. தமது கணீர் 


குரலில் :-


ஒன்றே சொல்வான் !!


நன்றே செய்வான் !!   அவனே 


அப்துல் ரஹ்மானாம் !!   


ஆண்டான் இல்லை!! 


அடிமைகள் இல்லை !!      


எனக்கு நானே எஜமானாம் !!         


மேரா நாம் அப்துல்ரெஹ்மான் !!     


மேரா நாம் அப்துல் ரெஹ்மான் !!       


என்று அந்தப் பாடல் தொடரும்.  


நான் இங்கே எதற்காக அந்தப் 


பாடலை கோடிட்டு காட்டுகிறேன் 


என்று சொன்னால் அன்பர்களே!!,   


 மறைந்த நடிகை மஞ்சுளா, அவர் 


வாழ்வில் செய்த மாபெரும் தவறு, 


மன்னிக்க முடியாத தவறு, ஒன்று 


உண்டு என்று சொன்னால், அதுதான் 


ஒரு ஜோடி நாட்டுக்குயில்களின் 


கூட்டினை  கலைத்து, அந்தக்குடும்ப 


வாழ்க்கையையே (தன் மீது விஜய 


குமார் கொண்ட மதி மயக்கத்தால், 


காதல் உணர்வுகளால்,ஆழ்ந்த காம 


வெறிகொண்ட மனத்தால் அவரது 


முதல் மனைவி மற்றும் அவரது 


குழந்தைகளிடம் இருந்து அவரைத் 


தனியே பிரித்து வந்து தன்னை 


இரண்டாவது மனைவியாக ஏற்றுக் 


கொள்ளவைத்த பாவம்) கெடுத்து 


சின்னாபின்னமாக்கி அந்த முதல் 


மனைவி, அவர் பெற்ற பிள்ளைகள், 


ஆகியோரை நடுத்தெருவில் 


கொண்டு வந்து வைத்த புண்ணிய 


காரியத்தை மறைந்த மஞ்சுளா 


செய்தார் அல்லவா !! அந்த 


செயலுக்கு, எல்லாம் வல்ல 


இறைவன் தந்த பரிசுதான் இந்த  


நடுத்தரவயதினில் அவரை இந்த 


பூவுலகிலிருந்து நோய் தாக்கி, 


மரணத்தை தழுவிடச் செய்தது 


என்று சொன்னால் அது மிகையான 


சொல் அல்ல என் அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே !! பொதுவாக 


ஒருவர் இறந்துபோனார் என்று 


சொன்னால் அவரின் கடந்தகால 


வாழ்க்கையில் அவர் ஆற்றிவந்த 


நல்ல பண்புகளைமட்டுமே 


பேசுவதுதான் நமது தமிழர் பண்பாடு 


என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட, 


நான் எதற்காக இந்த கட்டுரையில் 


மறைந்த நடிகை மஞ்சுளா செய்த 


தப்பான/தவறான காரியத்தை இந்த 


அளவுக்கு பட்டியல் போட்டுக் 


காட்டுகிறேன் என்று சொன்னால் 


அதற்கு முக்கியமான காரணம் நாம் 


நமது எதிர் கால வாழ்க்கையில் 


நடிகர் விஜயகுமார் செய்ததுபோன்ற 


கெட்ட காரியத்தை என் அன்புத் 


தமிழ் உடன் பிறப்புகள் யாரேனும் 


செய்துவிடக் கூடாது என்ற நல்ல 


எண்ணத்தின் அடிப்படையில் இந்த 


கட்டுரைதனை உங்கள் அனைவரின் 


சிந்தனைக்கு விருந்தாக,சீர்திருத்த 


மருந்தாக உற்றதோர் தோழனாக 


உங்களுக்கு வழங்கி உள்ளேன் என் 


அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!! 


தொட்டுத் தாலிகட்டிய மனைவியை 


அவள் உயிரோடு இருக்கும்போது 


அவளையும் அவள் பெற்ற 


பிள்ளைகளையும் நட்டாற்றில் 


விட்டு விட்டு மற்றுமொரு 


பெண்ணோடு யாரும் தொடர்பு 


வைத்துக்கொள்ளக்கூடாது என்று 


வேண்டி விரும்பி கேட்டுக் 


கொள்கிறேன் என் அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே! அப்படி ஒரு 


பாவகரமான காரியத்தை நம்மில் 


எவர் செய்தாலும் (அடியேன் 


உட்பட)அந்த பாவத்தை கழுவ 


உலகத்தில் உள்ள அனைத்து 


புண்ணிய நதிகளிலும் நீராடி 


என்னதான் மூத்த மனைவிக்கு சட்ட 


பூர்வ நீதிமன்ற  பிரிவிற்குப் பிறகு 


வழங்கப்படும்(ஜீவனாம்சம் என்ற) 


கருணைத்தொகை தந்தாலும் கூட 


அந்தப் பாவம் நம்மை ஈரேழு 


பிறவிகளிலும் தொடரும் என்ற 


அச்சம் நிறைந்த எண்ணத்தினை 


மனதில் அனுதினமும் வளர்த்துக் 


கொள்ள வேண்டும் நேயர்களே!!         


என் பாட்டுத் தலைவன் கவியரசர் 


ஒரு பாடலில் குறிப்பிட்டு 


உள்ளதைப் போல :-



("மன்மத லீலை" என்ற படத்தில்)     


எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் 


மது அத்தனையும் சுவை ஒன்றாகும் 


சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை 


உன் சிந்தையிலேதான் பேதமடா!! 


மன்மத லீலை !!மயக்குது ஆளை!!


மந்திரம் போல சுழலுது காளை!! 



என்ற பாடலின்வரிகளை எண்ணிப் 


பார்த்துக்கொள்ள வேண்டும். வான் 


புகழ் வள்ளுவர் இந்த விஷயத்தில் 


மானுடனை மிகவும் கண்டிப்பாக 


இருத்தல் அவசியம் என்று சொல்லி 


அதற்காகவே, இல்வாழ்க்கை, 


வாழ்க்கைத்துணை நலம்,பிறனில் 


விழையாமை, வரைவின் மகளிர் 


இது போன்ற மிக மிக முக்கியமான  


அத்தியாயங்களை எழுதி  நம்மை 


எச்சரித்துவிட்டுச் சென்று உள்ளார் 


என் அன்புத் தமிழ்நெஞ்சங்களே !! 



எனவே நம்மில் திருமணம் முடித்து 


மனைவி,மக்கள் என்று 


ஒற்றுமையாக வாழ்ந்துவரும் 


குடும்பஉறவுகளில்(மறைந்தநடிகை 


மஞ்சுளா போன்ற)வசந்தசேனைகள் 


குறுக்கீடு செய்திட  வருவார்கள். 


ஆண்களாகிய நாம்தான் 


அப்படிப்பட்ட பாவிகளிடம் இருந்து 


நம்மையும் நமது மனைவி மக்களை 


காப்பாற்ற வேண்டும் என்றுவேண்டி 


விரும்பி கேட்டுக்கொண்டுஇதுவரை 


எனது இந்தநீண்ட கட்டுரைதனை 


மிகமிகப் பொறுமையோடு 


படித்து உணர்ந்த என் அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளுக்கு 


கோடானுகோடி வணக்கங்களை 


உங்கள் பொற்கமல பாதங்களில் 


வைத்து சமர்ப்பணம் செய்து நன்றி 


பாராட்டி அன்பு கூறி விடை 


பெறுகிறேன் நன்றி வணக்கம் 


அன்புடன் மதுரை TR. பாலு. மீண்டும் 


நாளை சந்திபோமா?

No comments:

Post a Comment