படிப்பது இராமாயணமாம்!! இடிப்பது பெருமாள் கோவிலா ??
தமிழர்களாக வாழ்ந்திடுங்கள்!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
(ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி)
(தமிழர்களிடமாவது)
"நாங்கஎன்னகிறுக்குகளா"??
உலகெங்கிலும் வாழ்ந்து வரும்
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது
அன்புநிறைந்தஇதயம் கனிந்த
நல்வாழ்த்துக்கள்.
இன்றையதினம்எனது"எண்ணத்தில்
தோன்றியவை" வலைதளத்தில்
நான் பதிவு செய்திட விரும்பும்
கருத்து என்னவென்றால் நடப்பது
கலியுகம். இந்தயுகம் முழுவதும்
என்ன நடக்கும் என்று சொன்னால்
நல்லவர்கள்மிகவும் சிரமப்படுவதும்
அதற்குநேர்மாறான குணம்கொண்ட
-வர்கள் இதயம், எண்ணம், சுத்தம்
இல்லாதவர்கள் நல்ல வளமான
வாழ்வுவாழ்வதும்இயல்பானஒன்று.
இதுஒன்றுதான் கலியுகத்தின் சிறப்பு.
அதனால்தான் அந்தக்காலத்தில்
வெளிவந்த தசாவதாரம் திரைப்
படத்தில் வரும் பாடலில் கீழ்க்கண்ட
வரிகள் இடம்பெற்று நம்மை
சிந்திக்க வைக்கும். பாடல் இதோ:-
விதி நடந்ததென மதிமுடிந்ததென
வினையின் பயனே உருவாக, நிலை
மறந்தவரும் நெறி இழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழித்துப் புதிதாக நீ எடுக்க
வேண்டும் ஒரு அவதாரம். "கல்கி"
அவதாரம். என்று அந்தப் பாடலில்
கலியுகத்தின் உண்மைத் தன்மை
-களை விளக்கி எதிர்கால தத்துவங் -
-களை நமக்கு அறிவிக்கும் விதமாக
அந்த பாடல் வெளிவந்தது என்று
சொன்னால் அது மிகைபடுத்தப்பட்ட
சொல் அல்ல. சரி. நாம் இப்போது
இக்கட்டுரை தலைப்பு சம்பந்தப்பட்ட
விஷயத்திற்கு வருவோம்.
அதுவே
"படிப்பது இராமாயணமாம்" !!
"இடிப்பது பெருமாள் கோவிலா" ??
இந்த கேள்வியின் உட்கருத்து எனது
நெஞ்சினில் உதயதமாகக் காரணம்
எதுஎனகேட்டால்எனது அன்புத்தமிழ்
நெஞ்சங்களே!!நானும்சமீபகாலமாக
வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்த்
திரைப்படங்கள் கிட்டத்தட்ட 1௦௦ க்கு
1௦௦ விழுக்காடு படங்களில், படம்
திரையிடுவதற்கு முன்னால் பெயர்
வெளியிடும்வேளையில்அனைத்துப்
படங்களிலும் கீழ்க்கண்ட வாசகம்
தவறாமல் காண்பிக்கப் படுகிறது.
அது என்னவென்றால் :-
"புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு
தீங்கானது" !!
"புகைபிடிக்கும் பழக்கம் "
"புற்றுநோயை உண்டாக்கும்" !!
"மதுப்பழக்கம் நாட்டுக்கு,வீட்டுக்கு,
உடல் நலத்திற்கு தீங்கானது" !!
என்றவாசகங்கள்அங்கிங்கு எனாத -
-படி இப்பொது வெளிவந்துகொண்டு
இருக்கும் எல்லாப் படங்களிலும்
காண்பிக்கபடுவதுநடைமுறையாய்
ஆகிவிட்டது போலும்.
ஆனால் அதற்குப் பிறகு பார்த்தால்
படம் முழுவதும் குடியும் கூத்தும்
ஒரே கும்மாளமும் புகைபிடித்து
ஊதித் தள்ளுவதும் தான்.
நான் என்ன கேட்க விரும்புகிறேன்
தமிழ்திரைப்படஉலகினரைஎன்றால்
ஒன்று அறிவுரை சொல்வதாக
இருந்தால் அதன்படி படம் இருந்தாக
வேண்டும். அப்படி இல்லை என்றால்
ஏன்,எதற்காக அதனை நீங்கள் திரை
இட்டுக்காட்டுகிறீர்கள்? அந்தக்கால
ப்படம் "உலகம்இவ்வளவுதான்"என்-
-னும் படத்தில் ஒரு பாடலில் ஒரு
வரி வரும் :-
"உபதேசம் பண்ணுகிறேன் !! அது
ஊருக்குத்தானடி எனக்கு இல்லை "
என்று பாடல் வரிகள் வரும்.
அதுபோல நீங்கள் எங்களைக்
கருதுகின்றீர்களா? விளக்கம் தேவை
எனது அன்பு தமிழ்த்திரையுலக
நண்பர் பெருமக்களே !! அதனால்
மட்டுமே இன்றைய தினம் நான்
எனது கட்டுரைக்கு உங்களது
விஷயத்தைத் தலைப்பாக வைத்து
இங்கே எனது அன்புத் தமிழ்
நெஞ்சங்களின் தனிப் பார்வைக்குச்
சமர்ப்பிக்கிறேன். இதில் குற்றம்
இருந்தால் என்னை மன்னியுங்கள்.
உண்மை இருந்தால் எனக்கு
வாழ்த்து தெரிவியுங்கள். மீண்டும்
கட்டுரையின் தலைப்பு அதனுடன்
நிறைவு செய்கிறேன்.
"படிப்பது இராமாயணமாம்" !!
"இடிப்பது பெருமாள் கோவிலா"??
நன்றி ! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
வாழ்வோம் நாம் அனைவரும்
வளமுடன் !! அன்புடன் !!நல்ல
தமிழ்ப் பண்புடன் !!
No comments:
Post a Comment