எல்லாமே 111 என்றால் மக்கள் மன்றம் எதற்கு ? அமைச்சரவைதான் எதற்கு ?
தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமே பேசிடுங்கள்!!
( தமிழர்களிடமாவது )
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
முதலில் உங்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றியும்
வணக்கமும் உரித்தாகுக !!
(இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படும் அனைத்து சம்பவங்கள்/கருத்துகள் எல்லாம் வெறும் " கற்பனையே" தவிர வேறு யாரையும் எவரையும் தனியே குறிப்பிடுபவை அல்ல )
எனது கற்பனைத் திறனில் நான்
உங்கள் அனைவருக்கும் வழங்கும்
சிறந்த ஒரு கதை. இது உண்மை
நிகழ்வும் அல்ல. இந்தக் கதையில்
நான் முதலில் குறிப்பிட விரும்புவது
எது என்று கேட்டால், இந்தக் கதை
எந்த நாட்டில் நடைபெறுகிறது
என்பதே ? முன்னொரு காலத்தில்
வந்தோரை எல்லாம் வாழ வைத்த
திருநாடுஅது. வான்பொய்த்திடாமல்
மாதம் மும்மாரி மழை பொழிந்து
கொண்டிருந்த காலங்கள் பலப்பல
அந்த நாடு கண்டதும் உண்டு.
ஆனால் வரவர கழுதை தேய்ந்து
கட்டெறும்பு ஆன கதைபோல பருவ
மழை என்பது பழைய திரைப்படம்
"கர்ணன்" அதில் வருவதுபோல
மழை கொடுக்கும் கொடையும் ஒரு
இரண்டு மாதம் என்பதுபோலதவறா-
-மல் பெய்து வந்தது.கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு வரை. அந்த
திருநாட்டில் இரண்டு ஆண்டுகட்கு
முன்னர் நடைபெற்ற மக்கள் தந்த
ஆணை தவறாக அமைந்த காரணத்-
தினால் புதிதாக ஆள வந்த அரசின்
ராசியோ என்ன இழவோ எனக்குத்
தெரியவில்லை வானம் பொய்த்தது.
நீதியும் அந்த நாட்டினில் சரிவர
வழங்கப்பட வில்லை. எல்லாமே
சர்வாதிகாரத்தனமும் அடாவடித்
தனமும் மட்டுமே ஆட்சிக் கட்டிலில்
இருந்த காரணத்தினால் மக்கள்
வாய் மூடி மவுனிகளாக மாறி விட்டு
இருந்தனர். அரசு அலுவலர்களும்
மக்களைப்பாதுகாக்கும் காவலர்கள்
கூட பயந்து வாழ்ந்திடும் சூழல்
இப்படிப்பட்ட ஓர் நிலையில்
ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு
முறை கூடிடும் மக்கள் மன்றத்தில்
பொதுமக்கள் பிரச்சினைகள் கூட
பேசிட வாய்ப்புதருவதற்கு அந்நாட்டு
எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்
படுவதுடன் மீறிப் பேசிட முயன்றால்
அவர்கள் வெளியேற்றப் படுவதோடு
ஒழுங்கு நடவடிக்கை என்ற பேரில் 5
மாதம் இடைநீக்கம் இப்படி வேறு.
" இடை வேளை "
அந்த மந்திரிசபையில் உள்ள எல்லா
துறைகளுக்கும்தனித்தனியே அமை-
ச்சர்கள் இருந்தாலும்கூட அவர்கள்
யாரும் சுதந்திரமாக செயல்பட
அனுமதி கிடையாது. அந்தத்
திருநாட்டின்முதல்வர் திருவாளர்
ரெங்கன் தான்எல்லாம்.
அந்தமுதல்வரைமீறி எதுவும் நடக்க
கூடாது. அந்தக் காலத்தில் புரட்சி
நடிகர்நடித்துவந்த "குலேபகாவலி "
படம்தான் மீண்டும் அந்த நாட்டில்
அரசு புரிகிறது என்று சொன்னால்
அதில் வியப்பு ஏதும்இல்லை. இந்த
நிலையில் மக்கள் மன்றம் என்பதும்
போய் அது மாக்கள் மன்றமாக மாறி
விட்டது. ஒரு தீர்மானம் அறிமுகம்
என்று சொன்னால் அது சம்பந்தப்
பட்ட அமைச்சர் கொண்டு வருவது
என்பது எல்லாம் போய்விட்டது. எது
என்றாலும் அந்நாட்டு முதல்வர்
ரெங்கன் மட்டுமே விதி எண் 111
எனும் சிறப்பு விதியின் கீழ்
படிப்பார்.எல்லாமே தலைகீழாக
மாறிப்போச்சு அன்பர்களே. இதே
நிலை தொடர்ந்தால் மக்கள் மன்றம் எதற்கு ? அமைச்சரவைதான் எதற்கு
என்று மக்கள்/அறிஞர்கள் கேள்வி
கேட்பதில் ஒன்றும் தவறு
இல்லையே !!
நீங்களாவது இதற்கு பதில் சொல்ல
மாட்டீர்களா ? அந்தத் திருநாட்டின்
எதிர்காலம்தான் என்ன?எல்லாம்
வல்லஇறைவன்ஒருவனேஅறிவான்
எல்லாப்புகழும் "ஆண்டவனுக்கே" !!
அந்த"ஆண்டவன்"ஒருவனேதுணை
நமக்கே !!
நன்றி ! வணக்கம் !! இத்துடன் கதை
முடிந்தது. ஜெயஹிந்த்.பாரத மாதா
வாழ்க !!
****************************************
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment