எண் 9 என்று சொன்னால் கேவலமா ?--(முன் தொடர்ச்சி ...எண் 8 என்றால் அதிர்ஷ்ட கட்டையா).
தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
( தமிழர்களிடமாவது )
உலகம் எங்கும் ஆழ்ந்த அறிவோடும்
அன்பு மட்டுமேஇணைந்தசிந்தனைத்
தெளிவினோடும்வாழ்ந்து வருகின்ற
என்உயிரினும் மேலாக நான்போற்றி
வணங்கி வரும் உண்மைத் தமிழ்
நெஞ்சங்களே !!
உங்கள்அனைவருக்கும்என்இதயம்
கனிந்த வணக்கத்துடன் கூடிய நல்
வாழ்த்துக்கள் பல !!
அறிவு சார்ந்த தமிழ் இனத்தின்
இரசிகப் பெருமக்களே !! எனது
முந்திய எண் எட்டு என்றால் அது
கேவலமா? என்றகட்டுரையின் நலம்
மிகுந்த தொடர்ச்சிதனை இன்றைய
தினம் உங்கள்அனைவரது பார்வை --
-க்கும் விருந்து அளிப்பதில் நான் மிக
மிகப் பெருமை அடைகிறேன்
அன்பர்களே !!
பொதுவாகவே எண்களின் வரிசை
சுழியத்தில்(பூஜ்ஜியத்தில்)தொடங்கி
ஒன்பதில் முடிவடைகிறது. இதில்
கடைசி எண்ணாக வருவது இந்த 9
என்றால்அதில்எவ்வளுவு சிறப்புகள்
இருக்க வேண்டும் என்பதை அறியா
மானிடர்கள் 9 எண்ணைக் கேவலம்
நிறைந்த எண்ணாகவே ஏன் கருதுகி
-றார்கள்என்பது எனக்கு இதுவரை
புரியாத புதிராகவேஉள்ளதுஎன்றால்
அது மிகைப் படுத்தப்பட்ட சொல்
அல்ல என்பதே எனது தாழ்மையான
கருத்து அன்பர்களே !!
பொதுவாக நீங்கள் யாரையாவது
ஏய் உன்னைப் பார்த்தாலே எண் 9
போலஇருக்கிறாய்என்றுசொல்லிப்
பாருங்கள். பிறகு என்ன நடக்கிறது
என்று தெரியும்.ஏன் என்று கேட்டால்
அந்த அளவுக்கு அந்த எண் 9 மக்கள்
மத்தியில் நல்லதொரு மதிப்பு பெற்ற
எண்ணாக இன்றுவரை விளங்கு-
-கிறது. இறைவனால் சபிக்கப்பட்ட
ஒரு இனமாக அந்தத் திருநங்கையர்-
கள் விளங்குவதால் அவர்களை
அந்தபெயர் சொல்லி அழைப்பது
இங்கே வாடிக்கை ஆகி விட்டது.
சரி நாம்இப்போதுதலைப்பு சம்பந்தப்
பட்ட விவாதத்திற்கு வருவோம்.
உண்மையாகச் சொல்லப்போனால்
இந்த 9 எண்ணிற்கு உள்ள சிறப்பு
வேறுஎந்த எண்ணிற்கும் கிடையாது
என்பதே அறிஞர்கள் அறிந்த கருத்து.
எப்படி என்றால் இந்த 9 என்ற
எண்ணுடன் 1 முதல் தொடங்கி 8
வரை உள்ளஎந்த எண்ணைச்சேர்த்து
கூட்டினாலும் முடிவில் எந்த
எண்ணைக் கூட்டினீர்களோஅதே
எண் திரும்பவும் வந்திடும் சிறப்பு
இந்த 9 என்ற எண்ணிற்கு மட்டுமே
உண்டு அன்பர்களே !!
அதுமட்டும் அல்ல அன்பர்களே !!
இப்போது நாம் புதிதாக ஒரு
வாகனம் வாங்குகிறோம் என்று
வைத்துக்கொள்ளுங்கள் அப்போது
நாம் மண்டல போக்குவரத்து அலுவ-
லகத்தில் என்ன கேட்போம் நீங்கள்
அறிவீர்களா அன்பர்களே!! பணம்
செலவு ஆனாலும் பரவாயில்லை.
என்ன செய்வீர்களோ ஏது
செய்வீர்களோ எனக்கு தெரியாது
எனக்கு கூட்டு எண் 9 மட்டுமே வர
வேண்டும்என்றுஅடம் பிடிப்போர்கள்
ஆயிரம் பேரை பார்த்து விட்டேன்.
ஏன்அப்போதுஇந்த9எண்உங்களுக்கு
கேவலமாகத் தெரியவில்லையா?
வான் மண்டலத்தில் நம் ஒவ்வொரு
-வரின் தலை எழுத்துக்களை நிர்ண-
யம் செய்திடும் கிரகங்களின் மொத்த
எண்ணிக்கை இந்த 9 தான் என்
இனிய அன்பர்களே.
மனித முகத்தில் காட்டும்உணர்சிகள்
பாவங்கள்,அதனை "நவ ரசங்கள் "
என்று எண் 9 உடன் சம்பந்தப் படுத்தி
மட்டுமே வருகிறதே? இந்த எண் 9
என்ன உங்களுக்கு கேவலமானதா?
அன்பர்களே!!
மேலும் எண்கணிதம் எனசொல்லப்
படும் ( NUMEROLOGY) மனிதன் கண்ட
சாஸ்திரத்தினில் இந்த 9 எண்ணிற்கு
மட்டுமேதனிச்சிறப்பு தரப்பட்டுள்ளது
அன்பர்களே. அது என்ன என்றால்
ஏனைய 1 முதல் 8 வரை உள்ள
அனைத்து மாந்தர்களுக்கும் வீடுகள்
கட்டித் தந்து, பூமியை சீர்திருத்தி,
மற்ற அனைத்து வாழ்க்கை வசதிகள்
அமைத்து கொடுத்து ஒருவரோடு
ஒருவர் சமாதானமாக இருக்கும்படி
யோசனை கூற வல்லவர் என்பவர்
இந்த 9ம் தேதி பிறந்தவர் மட்டுமே
என குறிப்பிடுவதுடன் பொறியாளர் -
-களாகஇருந்துகட்டிடங்களைகட்டித்
தருபவர்களும் இவர்களே என்று
குறிப்பிடுவதுடன் இந்த 9எண்ணிற்கு
கிரகமாக குறிப்பிடப்படும்செவ்வாய்
எனப்படுவது மிக முக்கியமானதோர்
விஷயம் ஆகும்.
மேலும் இந்த 9ம் தேதி பிறந்த சிறந்த
மனிதர்கள் பற்றிய விபரங்கள் :-
பிறந்த தேதி
1) AMERIGO VESPUCCI 09-03-1451
அமெரிகோ வெஸ்புகி இவர்தான் அமெரிக்கா
கண்டத்தைக் கண்டு பிடித்தவர்.ஆதலாலே
அக்கண்டம் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.
2) RAMAKRISHNA 18-02-1836
( இராமக்கிருஷ்ணா சந்நியாசம் பெற்ற
பின் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆனார்)
3) GALILEO 18-02-1564
( கலிலியோ தூரத்ருஷ்டிக் கண்ணாடியைக்
கண்டு பிடித்தவர் )
4) VOLTA 18-02-1745
( பாட்டரி, மின்சாரம்,இவைகளைப் பற்றி
ஆராய்ச்சி நடத்தி உதவியவர்)
5) SAMUEL FINLEY BREEZE
MORSE 27-04-1791
( சாமுவேல் பின்லே பிரீசிமோர்ஸ்
கட்டுக் கட கட கட்டுக் "தந்தி" இவர்
இல்லாவிடில் ஏது ?)
ஆகவே என் உயிரினும் மேலான
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இறைவன்படைப்பினில் பொதுவாக
அனைத்து எண்களும் எப்போதும்
நன்மை தருபவைகளே. நமது தலை
எழுத்துப் படிதான் எதுவும் நடக்கும்.
இது அதிர்ஷ்டம்,இது துரதிர்ஷ்டம்
என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு.
எல்லாம் " அவன் " செயலே !!
மிக்க நன்றி. வணக்கம்.
மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment