Thursday, 16 May 2013

உண்மையான அர்த்தம் !!--சம்சாரம் அது மின்சாரத்திற்கு !!




தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

(ஆங்கிலமொழிகலப்பு ஏதும் இன்றி )

(தமிழர்கள் நடுவே உரையாற்றிடும் போதாவது)                                                   



உடல் மண்ணுக்கு !உயிர் தமிழுக்கு!!



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது உயிரினும் மேலான அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!                              


முதலில் உங்கள் அனைவருக்கும் 


எனது பணிவான வாழ்த்துக்களுடன் 


கூடிய வணக்கங்கள் பல !!               


இன்றைய தினம் " எண்ணத்தில்   


தோன்றியவை " வலை தளத்தில் 


நான் சற்று மாறுபட்ட கோணத்தில் 


உங்கள் சிந்தனைக்கு விருந்தாக நல் 


சீர்திருத்த மருந்தாக ஒரு சராசரி 


மனிதன் ஒவ்வொரு தினமும் நேரு-   


க்குநேர் நின்று சந்திக்க உள்ள ஒரு 


விஷயத்தினைப்பற்றிசற்றுவிரிவாக  


அதேநேரம்சற்றுவிளக்கமாகஉங்கள் 


முன் ஆராய்ச்சிசெய்துஅதன் பின்னர் 


தீர்ப்பினை வழங்கிடும்நீதிபதிகளாக 


நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனை 


உங்களுக்கு தெரிவித்துக் கொள்வது 


உங்கள்அன்பன் மதுரை TR.பாலு 


எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!    



பொதுவாக இங்கே தலைப்பினில் 


குறிப்பிடப்பட்டுள்ள விஷயத்திற்கு 


அர்த்தம் என்ன,யாரிடமாவது நீங்கள் 


இங்கே கேட்டுப்பார்த்தால் பத்து 


பேரில் எட்டு பேர் தரும் விடை 


தவறாகவே உள்ளது.   ஆனால் நான் 


உங்களுக்கு சொல்வேன் சரியான 


விடை எது என்று.                                    



மின்சாரம் என்பது நம்மை தாக்கி 


நெருங்குகின்ற பொருட்களை 


தொடும் நபர்களை அதிர்வலையில் 


வீழ வைத்திடும் தன்மை படைத்தது. 


அதுபோலவே சம்சாரம் என்பவள் 


அவளை நாம் மிக நெருங்கி தொடும் 


வேளையில் நாமும் அதே அதிர்வு 


அலைதனில் வீழ்ந்திட வேண்டியே


வரும் என்று பத்துப் பேரில் எட்டு 


பேர் சொல்லுவார்கள் அன்பர்களே !


ஆனால்உண்மைஅர்த்தம்அது அல்ல 


அன்பர்களே !!                       



மின்சாரத்தினைப் போலவே மிகவும் 


முக்கியமானவள் சம்சாரம். எனவே 


மின்சாரம் இருக்கிறவரை நாம் 


அதைப்பற்றி கவலையேதும் இன்றி 


வாழ்ந்துவருகிறோம்அன்பர்களே!!                            


அதுபோலவே சம்சாரம் என்பவள் 


நமது அருகில் உள்ளவரை அவளது 


முக்கியத்துவத்தினை கணவர்கள்  


அனைவரும் உணராமலே வாழ்ந்து 


வருகின்றோம்.                                    



மின்சாரம் போன பிறகுதான் அந்த 


மின்சாரத்தின் மகத்துவம்/தேவை 


நமக்கு எல்லோருக்கும் புரியவரும்.


அதேபோலவே சம்சாரம் உயிருடன் 


உள்ளவரை அவளின் மகத்துவம்  


அந்த நடமாடும் தெய்வத்தின் மதிப்பு 


யாருக்கும் எவருக்கும் புரிவதாக 


இல்லவே இல்லை அன்பர்களே !!                                               


சுத்தமாக மின்சாரம் போன பின் 


தான் மெழுகுவர்த்தி எடு.தீப்பெட்டி   


எங்கே? காற்றே இல்லையே!!


விசிறியை எங்கே ?இதுபோலபலபல 


பேச்சுக்கள் நமது வாயில் தானாக  


வரும் அன்பர்களே !! சிரமங்களை 


நாம் அதுமுதல்தான் உணருகிறோம்.  



அது போலவே தான் மனைவி உயிர் 


பிரிந்த பிறகே அவள் நமக்காக, நம் 


குடும்பத்திற்காக, எவ்வளவு தூரம்


உழைத்து பாடுபட்டு இருந்தாள் 


என்பதை உணர்கிறோம். அப்படி 


நினைக்காதவர்கள் மனிதப் 


பிறவியே அல்ல அன்பர்களே !!                                       



ஆகவே எனது அன்புத் தமிழ் 


நெஞ்சங் களே !! மனைவியை 


நேசியுங்கள் !!.உங்கள் இதயக் 


கோவிலில் வைத்து பூஜியுங்கள் !!     


அவள் மனம் நிம்மதிபெற்றால் 


மட்டுமே உங்கள் வாழ்வு வளமான 


வாழ்வாக மலரும். அவள் ஒரு 


தியாக தீபம். நமக்கு இறைவன் தேடி 


அளித்திட்ட  மந்திரி.அவள் இல்லை 


எனில் நாம் எல்லாம் எந்திரிக்க 


வேண்டியதுதான். இதனை எல்லாம் 


உங்கள் அனைவரின் மனதில் பதிய  


வைத்துக்கொள்ளுங்கள் அன்பர்கள் 


யாவரும்.இதுவரைஇப்படிஇல்லை 


என்றாலும் இனியாகிலும்  நாம் 


எல்லோரும் மனைவியை மதித்து 


அவளை நேசித்து பின் அவளை 


பூஜித்து அவளிடம் ஒவ்வொரு 


விஷயத்தையும் ஆலோசித்து நமது 


வாழ்க்கைதனை வளமானதாக 


மாற்றிக்கொள்வோமா அன்பர்களே? 


மற்றபடி முடிவு உங்கள் கையில். 


ஏன்  என்றால் நீங்களே நீதிபதிகள் !!



வாழ்க வளர்க !!  நன்றி !! வணக்கம் !!                     


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment