சாதிகள் இல்லையடி பாப்பா !!--மீண்டும் ஒரு விளக்கம் !!
உடல் மண்ணுக்கு !!
உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமே பேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவினில் உரையாடிடும் பொழுது!!
(அன்பர்களே !! மீண்டும் நமது தாய் நாட்டினில் சாதிக்கலவர மேகங்கள் வானில் கரு மேகங்களாய் சுற்றிச் சுற்றி வருகிறது. அந்த பொல்லாத வலையினில் சீக்கி சீரழிந்த பெண்கள் பலர் நம்மிடையே உண்டு.மீண்டும் வன்முறை வெடித்து சிதறிடக் கூடாது என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்).
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
நெஞ்சங்களே !! அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அதனுடன் கூடிய வணக்கமும்.
இன்றைய தினம் சமூகத்தில் உள்ள
மிகமிக முக்கியமான விஷயமே
இந்தஜாதி என்னும் "தீ" தான். அந்தக்
கால சங்க இலக்கியங்களில் இந்த
ஜாதி என்ற பிரச்சினைதனை ஒரு
பாடலில் மிக அழகாக கையாண்டிரு
-ப்பதை இந்த பாடலில் பாருங்கள்
அன்பர்களே !!
நீரளவே ஆகுமாம் நீராம்பல் !
தான்கற்ற நூல்அளவே ஆகுமாம்
நுண்ணறிவு !!
மேலைத்தவத்தளவே ஆகுமாம்
தான் பெற்ற செல்வம் !!
குலத்தளவே ஆகுமாம் குணம் !!
இந்தப் பாடலில் குறிபிடப்பட்டுள்ள
குலம் என்பதற்கு ஜாதி என்ற
பொருள் என்பது கிடையவே
கிடையாது அன்பர்களே !!
இந்த ஜாதி என்னும் தீ மனிதனால்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகா
கொடுமையான ஆயுதம்தான் இது !!
அடுத்து வந்த தமிழ் மூதாட்டி என்ன
பாடினாள் என்றால் :-
ஜாதி இரண்டொழிய வேறில்லை !
சாற்றுங்கால்
மேதினியில் இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கியில் உள்ளபடி !!
அது என்ன பொருள் என்றால்
உலகில் இரண்டு ஜாதிகள் மட்டுமே
உண்டு. அந்த இரண்டு ஜாதிகள்
எவை என்று கேட்டால்
கஷ்டப்படுவோர் இனம் பார்த்து
அவர்களுக்கு தான தர்மம் செய்து
அவர்களை வாழ வைத்திடுவோர்
எல்லோரும் உயர்ந்த பிரிவினைச்
சேர்ந்தவர்கள் அதேநேரம் தம்மிடம்
எவ்வளவு வசதிகள் வாய்புகள்
இருந்த போதிலும் மனம் ஈகை வசம்
இல்லாத கஞ்சர்கள் இழிந்த
கீழான குலத்தினைச் சேர்ந்தவர்கள்
என்றும் அது அவரவர்கள் எண்ண-
ப்படி என்றும் தமிழ் மூதாட்டி
நம்மிடம் கூறியுள்ளதை நாம் இங்கே
நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டும் அன்பர்களே.
அதன் பின்னர் வந்த முண்டாசுக்கவி
என் அய்யன் பாரதி என்ன
சொன்னான் என்றால் :-
வெள்ளை நிறத்திலொரு பூனை
எமது வீட்டில் வளருது கண்டீர்!
பிள்ளைகள் பெற்றது அப்பூனை
அவை பேருக்கொர் நிறமாம் !!
சாம்பல் நிறம் ஒரு குட்டி !!-கருஞ்
சாந்து நிறம் ஒரு குட்டி !! பாலின்
நிறம் ஒரு குட்டி !! நல்ல பாம்பின்
நிறம் ஒரு குட்டி !!
எந்த நிறம் இருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ ?
இந்த நிறம் சிறிதென்றும் இது
ஏற்றம் எனக் கொள்ளலாமோ ?
என மிக அருமையாக
சாதிகொடுமையை சாடி இருப்பது
கண்டும் இன்னும் இந்த மானிட
இனம் திருந்திட மறுப்பதும் ஏனோ ?
ஆனால் அன்பர்களே !! என்னை
பொறுத்தவரை இந்த அவனியில்
இருப்பது இரண்டே இரண்டு சாதிகள்
மட்டுமே.
உக்கும் !!. எங்களுக்கு என்ன இது
தெரியாதோ !! நீங்க வேற இது என்ன
புதுசா சொல்ல வந்துட்டீக.ஆண்
சாதி பெண் சாதி அதானே!!
ஐயோ.ஐயையையோ.கொஞ்சநேரம்
சும்மா இருக்க மாட்டீகளோ !! நான்
என்ன சொல்ல வரேன் என்றால்
கையிலே இருக்குற பணத்தை எப்படி
எப்படி எல்லாம் செலவு பண்ணலாம்
என்ற எண்ணத்தில் வாழ்ந்து
வருவோர் ஒரு ஜாதி !!, உலகினில்
வாழ்வதற்கு எப்படி எப்படி எல்லாம்
கஷ்டப்பட்டு பணம் ஈட்டி உயிர்
வாழ்வது என்ற என்ற மன வேதனை
எண்ணத்தில் வாழ்ந்து வருவோர்
அடுத்த ஜாதி !! ஆக இந்த இரண்டே
இரண்டு ஜாதிகள் மட்டுமே உண்டு
இந்த அவனியில்என்ற எண்ணமதை
நாம் நம் மனதில் வளர்த்துவந்தால்
இந்த நாட்டினில் இருந்து கொழுந்து
விட்டு எரியும் ஜாதி எனும் தீயை
நாம் அணைத்துவிட முடியும்.
அன்பர்களே !!நேற்றைய தினம்
கிறிஸ்தவர்கள் வேதக் கோவிலின்
சுவர்களில் எழுதப்பட்ட வாசகம்
உண்மையிலேயே என்
சிந்தனையை கவர்ந்தது.
கனி தரா தனி மரம்,வற்றிய குளம்,
கற்பசு, ஈயாத மனங்கொண்ட
மனிதன்,இனம்பிரித்து(ஜாதிசொல்லி
குணம் பார்க்கும் கோரம் !!
இவைகள் போல பற்பல சமூக
நெறிதனை பறைசாற்றிடும் வாசகங்
-கள் எனது கருத்தைக்
கவர்ந்தது.இப்போது மீண்டும் இந்த
சாதிப்பிரிவு போராட்டம் தலை
தூக்கிடுவதை கண்டித்து 19-௦5-2௦13
அன்று பதிவு செய்திருந்த கட்டுரை
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்ற
தலைப்பினில் வெளிவந்த அதே
கட்டுரையை சற்று மாறுதல் செய்து
உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க-
முடிவு செய்தேன். அதனை இப்போது
செயல் மூலமாக அறிவிப்பதில் நான்
மிகுந்த மனமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கு நாம் எல்லோரும் ஒன்று
சேர பாடுபட்டு மனத்தை
செம்மையாக வைத்து வாழ்ந்து
வந்தோம் என்றால் முடியாதது
என்று இந்த உலகினில் எதுவுமே
இல்லை என்பதே எனது
"எண்ணத்தில் தோன்றிய" கருத்து.
அதனை உங்களிடம் பகிர்ந்து
கொள்வதில் நான் மிகவும் மன
மகிழ்ச்சிஅடைகிறேன் அன்பர்களே !!
மீண்டும் நாளை சந்திப்போமா?
ஜாதிகள் இல்லையடி பாப்பா !!
குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல்
பாவம் !!
நன்றி ! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment