Tuesday, 28 May 2013

பணி ஓய்வு ஆட்சியரும்--அவர் வீட்டு பண்டாரியும்.(சமையல்காரர்)




உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !!


தமிழனாக வாழ்ந்திடுக !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!


ஆங்கிலமொழிகலப்புஏதுமின்றி!!


தமிழர்களோடு உரையாடும்போது!!  



பணி ஓய்வு ஆட்சியரும் அவர் வீட்டு

      பண்டாரியும்--சமையல்காரர்.       


உலகமெங்கும் அன்புடனும் நல்ல 


அறிவுடனும் வாழ்ந்துவரும் 


என்னுயிரை விட நான் அதிகமாக 


நேசித்து வணங்கிவரும்  அனைத்து 


அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!



உங்கள் அனைவருக்கும் எனது 


நீண்டநாள் இடைவெளிக்குப் பிறகு 


வரும் வாழ்த்துக்களுடன் கூடிய நல் 


வணக்கங்கள் உரித்தாகுக.              



உங்கள் அன்பிற்குரிய மதுரை TR 


பாலு தமிழ் திரைபடத்துறையில் 


முதன்முதலாக தனது வலதுகால் 


பதித்து அந்தப்பணியில் தன்னை 


முழுமையாக ஈடுபடுத்தி உள்ளதால் 


அருள்கூர்ந்து நீங்கள் அனைவரும் 


என்னை மன்னித்து அருள் புரிய 


வேண்டும் இந்த இணையதள தமிழ் 


பணிக்கு எனக்கு நேரம் ஒதுக்கிட 


இயலவில்லை என்பதனை நான் 


என் அன்பு இரசிகப் பெருமக்களுக்கு  


அறிவித்திட கடமைப் பட்டுள்ளேன். 


இன்று எப்படியாவது ஒரு வெளியீடு 


செய்திட வேண்டும் என்று ஆசை 


பட்டேன். அந்த ஆசை இன்று நிறை- 


வேறியது.அதற்கு அந்த ஆண்டவன்   


(நான் இங்கே கடவுளைப் பற்றி குறிப்  


-பிடவில்லை அன்பர்களே!இதற்கு 


முன்இந்த தமிழ்நாட்டை ஆண்டவன் 


என் தமிழ் தலைவர் திருக்குவளை 


முத்துவேலர்கருணாநிதி அவர்கள்) 


அவருக்கு நான் எனது நன்றியை 


காணிக்கை ஆக்குகிறேன் அன்பு 


தமிழ் நெஞ்சங்களே !! தமிழ் உணர்வு 


எனக்குள் இந்த அளவு ஊற்று எடுத்த 


தற்கு காரணம்அந்த தமிழ் செம்மலே    


என்று சொன்னால் அது மிகையான 


சொல் அல்ல. சரி நாம் இப்போது 


கட்டுரைக்குள் செல்வோமா அன்பு 


உள்ளங்களே !!                                                        


பொதுவாக நான் மலேசிய நாட்டில் 


ஏறத்தாழ 5 ஆண்டுகட்குமேலாக 


அங்கு ஜோதிடப் பணி செய்திடும் 


வேளையில் அங்கு சமையல்கலை 


நிபுணர்களை பண்டாரி என்றே 


அழைப்பது வழக்கம்.பொதுவாக 


உயர் அரசுப் பணியில் இருக்கும் 


அலுவலர்கள் ஆளும் அரசைச் 


சார்ந்தே வேலை செய்தால்தான் 


அவர்கள் பிழைப்பு ஒழுங்காக 


நடைபெறும் இதற்கு எந்த அரசியல் 


கட்சியும் விதிவிலக்கு அல்ல.       


அப்படி பணி செய்துகொண்டிருந்த 


மாவட்ட ஆட்சியர்தான் திருவாளர் 


மாதவன் ஆகும் அவர் மதுரை 


மாவட்ட ஆட்சியராக இருந்திடும் 


வேளையில் ( இங்கே கட்டுரையில் 


குறிப்பிடும் கருத்து,நிகழ்வு,சம்பவம் 


இவை எல்லாம் கற்பனை மட்டுமே) 


அவர் மனைவியை இழந்தவர். 


ஆகவே தனது உணவுத்தேவைகளை  


கவனித்துக்கொள்ள சமையல்காரன் 


சற்குணம் என்பவரை பணியமர்த்தி 


வாழ்ந்து வந்தார்.அவர் மாதவன் 


இருக்காரே ஒரு பெரும் போஜனப் 


பிரியர். அதனால் தினமும் அவரின்  


மத்திய உணவினில் ஒரு துவரம், 


ஒரு கூட்டு,அவியல்,பச்சடி,ஊறுகாய் 


அப்பளம்,வடை,பழம்,பாயாசம்,ரசம்,


சாம்பார்,வத்தக்குழம்பு,தயிர்,இது 


போல உணவு வகைகள் கட்டாயம் 


இருக்க வேண்டும் என்பது ஆட்சியர் 


அவர்களின் கட்டளை பண்டாரிக்கு. 


அதாவது சமையல்காரருக்கு.



அவரும் நீங்கள் சொல்வதே எனது 


பணி என்று அனுதினமும் செய்துவர 


ஆட்சியரும் அவருக்குப்பிறகு நம் 


சமையல்கலை நிபுணரும் வயிறார 


சாப்பிட்டுவந்தன்ர்.இப்போதுதான் 


விதி தனது விளையாட்டை துவக்கு 


கிறது அன்பர்களே !! எப்படி என்று 


கேட்கிறீர்களா?



பணியில் இருந்து ஆட்சியர் ஓய்வு 


பெரும்வயதினை அடைந்து 


விட்டார்கடந்த மாதம் 3௦ம் தேதி 


அன்று பணி ஓய்வு பெற்று அந்த 


பிரிவுஉபசாரவிழாவும் சிறப்பாக 


நடந்தது. வீடு திரும்பிய ஆட்சியர் 


மாதவன்  ( பணி ஓய்வு )  தனது 


சமையல்களை நிபுணரை அழைத்து 


ஐயா இனிமேல் எனக்கு வரும்படி 


குறைந்துவிடும்.எனவே நாம் நமது 


செலவினங்களை குறைத்திட 


வேண்டியது மிக மிக அவசியம். 


முக்கியமாக பணியில் இருப்பவர் 


ஒருவகைக்கறி வைத்து சாப்பிட 


தகுதி படைத்தவர்,அருகதை உள்ள 


நபர். எனக்கு அந்த தகுதி இன்றோடு 


போய் விட்டது. எனவே  நீ நாளை 


முதல் ஒருநாள் சாம்பார் வை. 


மறுநாள் ரசம் வைக்கலாம். ஒரு 


பொரியல் மட்டும் போதும் தினமும். 


மட்றபடி இந்த அவியல்,கூட்டு,பச்சடி 


வடை,பாயாசம்,அப்பளம் இது 


எல்லாம் எனக்கு செய்திடாதே. ஏன் 


என்றால் எனக்குத்தான் வேலை 


போய் விட்டதே என்று முன்னாள் 


ஆட்சியர் மிகுந்த மன வருத்ததோடு 


ஆதங்கத்துடன் கூறினார். உடனே 


சமையல்காரரும் ஐயா நீங்க என்ன 


செய்யச் சொல்றீங்களோ அதை 


செய்து தருவதுதான் எனது வேலை. 


எனக்கு நீங்க சொன்ன அந்த கருத்து 


மிகவும் பிடிச்சிருக்கு என்றார். 



முன்னாள் ஆட்சியர் எது என கேட்க 


இவர் (சமையல்காரர் ) பணி ஓய்வு 


பெற்றவன் ஒருவகைக் கறி சாப்பிட 


கூடாது என சொன்னதும் பணியில் 


இருப்பவனுக்கே அந்த தகுதி உண்டு 


எனசொன்ன அந்தக் கருத்து   


உண்மையிலேயே எனக்கு ரொம்ப 


பிடிச்சிருக்கு ஐயா என்றார்.



நாட்கள்சென்றனமுதலாளி சொன்ன 


படியே சமையல்காரர் சமைக்க 


அதை முன்னாள் ஆட்சியர் 


சாப்பிட,இப்படியே பல மாதங்கள் 


உருண்டு ஓடின. 



ஒருநாள்  ஆட்சியர் உணவு உண்ட 


பின் அலுவலகம் வரை சென்று தன் 


பணிஓய்வு வருமானங்கள் பெற 


தேவையான அனைத்தும் செய்திட 


வேண்டிசீக்கிரமேசாப்பாடு சாப்பிட்டு 


விட்டு வீட்டை தாப்பாள் போட்டுக் 


கொள்ள மறவாதே என சமையல் 


காரர் வசம்சொல்லிவிட்டு சென்றார். 


அலுவலகம் சென்றபின்தான் அவர் 


கவனித்தார்.ஒரு முக்கியமான 


கடிதம் அதனை வீட்டில் வைத்து 


விட்டு வந்ததை. உடனே கொண்டு 


வருவதாகசொல்லிவிட்டு மிகவும் 


அவசரத்துடன் வீட்டுக்கு வந்து 


பார்கிறார். கதவு தாள் போடப்பட 


வில்லை. பைய உள்ளே சென்று 


பார்க்கிறார். சமையல் அறையில் 


அவர் கண்ட காட்சி அவரை நிலை 


குலைய வைத்தது. அப்படி அவர் 


என்னதான் கண்டார் ? தெரிந்து 


கொள்ள ஆவலாக உள்ளதா ?


சொல்கிறேன். ஆட்சியர் பணியில் 


இருந்தபோது என்னென்ன ஓர்வகை 


கறி செய்து சாப்பிட்டாரோ அவை 


அத்தனையையும் சமையல்காரன் 


தனிஒரு ஆளாக சாப்பிடுவதைக் 


கண்டு அதிர்ச்சி அடைந்தார். டேய் 


நான் என்ன சொன்னேன்.நீ என்ன 


செய்கிறாய்? என வினவினார். 


உடனே சமையல்காரன் ஐயா நீவிர் 


என்ன சொன்னீரோ அதைத்தான் 


நான் செய்து உள்ளேன் என்றான். 


எப்படி? என ஆட்சியர் கேட்க அவர் 


சொன்ன அதே உபதேசத்தை இப்போ 


சமையல்காரன் அவருக்கே திருப்பி 


உபதேசித்தான்.                                               


ஒருவன்பணியில் இருக்கும் வரை 


மட்டுமே ஒருவகை கறி உண்ண 


தகுதி படைத்தவன் என்றுதானே 


சொன்னீர்கள். எனக்கு சமையல் 


பணி நடந்துகொண்டுதான் உள்ளது 


நான் எப்போது அதில் இருந்து பணி 


ஓய்வு பெருகிறேனோ அப்ப நீங்க 


சாப்பிடுறமாதிரிநான் சாப்பிடுவேன் 


என்று சொன்னதைகேட்டு அந்நாள் 


ஆட்சியருக்கு அழுவதா சிரிப்பதா 


தெரியவில்லை. உங்களுக்கு 


ஏதாவது தெரிந்தா நீங்களாவது 


கொஞ்சம் சொல்லுங்க தயவு செய்து 



நான் போயிட்டு வருகிறேன்.நன்றி !!


வணக்கம் !! அன்புடன் மதுரை 


T.R.பாலு.

No comments:

Post a Comment