உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே!!
ஓடி ஓடி உழைக்கணும் !!
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!!
ஆடிப்பாடி நடக்கணும் !!
அன்பைநாளும் வளர்க்கணும்!!
பாடிச் சென்றார் கவிஞர் ஒருவர்.
பாரினில்இதுபோல் நடப்பதுண்டோ?
கூடியின்பம்தன்னைத்தேடாமல்
குளிரும்போதுயார் தனித்திருப்பார்?
மாடிவீடோ ? மாட்டுத்தொழுவோ?
மலிந்தேமயங்குவார்மாதுமடியில்!!
நல்லவழியில்உழைத்துப்பார்த்தேன்
நாலு காசுகையில் சேரல்லையே!!
புல்லுன்னுசொல்லிபசலைவித்தேன்
புயலெனப்பணமிங்கேசேந்ததய்யா!!
கெட்டவழியில்பணம்கோடிகோடியா
கொட்டிசேத்தேன்நான்கோணியிலே
பட்டிதொட்டிஎங்கும்சுகங்கண்டேன்
கெட்டுச்சீரழிந்துடல்பட்டுவிட்டேன்!!
இம்மையில் அறஞ்செய்யாதோர்
திரவியம்சிதறவேண்டிதில்லைபதி
நம்மையும் கள்ளுஞ்சூதும் இங்கே
நான்முகன் படைத்து விட்டான் !!
அன்பர்களே !!
பாடல் இத்துடன் நிறைவு
பெறுகின்றது. நேர்மையான
சம்பாத்தியம் நேர்மையான
செலவுக்கு வழி செய்யும். ஆனால்
அதேநேரம் முறைகெட்டவழியில்
வரும் வருமானம், முறைகெட்ட
வகையிலான செலவுக்குத்தான்
போய்ச்சேரும். இதை நாம் உணர்ந்து
அனைவரும் நேர்மையான
முறையில் உழைத்து நிம்மதியாகச்
செலவு செய்து அமைதியுடன்
வாழ்ந்திடுவோம் என்று
சூளுரைப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment